சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில அற்புதமான உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன.

அதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Top 20 Power Foods for Diabetes

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கீழே சர்க்கரை நோயாளிகளுக்கான சில சிறப்பான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்லை. உங்களது அன்றாட டயட்டில் இந்த உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாப்பளிக்கும். ஹார்வர்ட் பள்ளியின் பொது சுகாதார ஆய்வில், சுமார் 200,00 மக்களின் டயட்டை ஆராயப்பட்டது. அதில் வாரத்திற்கு 5-திற்கும் அதிகமாக ஆப்பிள் சாப்பிட்டவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம், ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட 23 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் தோற்றத்தில் தான் ஒரு மாதிரி உள்ளதே தவிர, சமைத்தால் இதன் சுவை அற்புதமாக இருக்கும். இந்த காய்கறியில் ஸ்டார்ச் இல்லை மற்றும் இதில் 5 கிராம் கார்போஹைட்ரேட், 20 கலோரிகள் மற்றும் 2 கிராம் டயட்டரி நார்ச்சத்து உள்ளது. முக்கியமாக இதில் க்ளுட்டாதியோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமான அளவில் உள்ளதால், இது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பலவற்றின் அபாயத்தைத் தடுக்கும். அதுவும் அஸ்பாரகஸ் இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரிக்க உதவுவதோடு, இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். அதேப் போல் அவகேடோ பழத்திற்கும் சர்க்கரை நோய்க்கும் நேர்மறை சம்பந்தம் உள்ளது. அது என்னவெனில் இதில் உள்ள வளமான அளவிலான நல்ல கொழுப்புக்கள், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை 25% குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அச்சமின்றி உட்கொள்ளலாம்.

காராமணி

காராமணி

பீன்ஸில் நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளின் டயட்டில் சேர்த்துக் கொள்ள ஏற்ற அற்புதமான உணவுப் பொருளாகும். 2012-இல் மேற்கொண்ட ஆய்வில் தினமும் 1 கப் காராமணியை உட்கொண்டு வந்தவர்களது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

பெர்ரி பழங்களுள் ஒன்றான ப்ளூபெர்ரியில் உள்ள ப்ளேவோனாய்டுகள், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து சர்க்கரை நோயின் அபாயம் மற்றும் அறிவாற்றல் திறன் பாதிப்பு போன்றவற்றைக் குறைக்கும். முக்கியமாக ப்ளூபெர்ரியில் உள்ள அந்தோசையனின்கள் தான், இந்த பழத்தில் அடர் நீல நிறத்தைக் கொடுக்கிறது. இந்த அந்தோசையனின்கள் தான் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியிலும் ஸ்டார்ச் இல்லை. இதில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது மற்றும் ஏராளமான அளவில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் உள்ளது. இந்த அடர் பச்சை நிற காய்கறியை சாப்பிட்டால், கண் பார்வை மேம்படும், பற்கள், எலும்புகள், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த காய்கறியில் ஃபோலேட், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் குறைவான அளவிலும் உள்ளது.

கேரட்

கேரட்

கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது சர்க்கரை நோயாளிக்கு நல்லது. கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இவை பார்வையை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். மேலும் இது சில வகை புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும். 2013-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டது.

கிரான் பெர்ரி

கிரான் பெர்ரி

கிரான் பெர்ரி சிறுநீரக பாதை தொற்றுக்களில் இருந்து விடுவிக்க பெரிதும் உதவியாக இருக்கும் ஓர் அற்புத பழம். இதில் உள்ள ஏராளமான அளவிலான பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான அந்தோசையனின்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆகவே இந்த பழம் கிடைத்தாலும், சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம்.

மீன்

மீன்

மீன்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஏராளமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் மீன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பைத் தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உடலினுள் உள்ள அழற்சிகளை சரிசெய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மீன்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. ஆளி விதையை சர்க்கரை நோயாளிகள் டயட்டில் சேர்த்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனவே ஆளி விதையை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் சாட்டின் மீது தூவி சாப்பிடுங்கள்.

பூண்டு

பூண்டு

உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் பூண்டு, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. பழங்காலம் முதலாக இது பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது உயர் கொலஸ்ட்ரால், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டை சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

கேல்

கேல்

கேல் கீரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளுள் ஒன்று. பசலைக்கீரையைப் போன்றே கேல் கீரையை ஒருவர் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வந்தால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் குறையும். பல்வேறு ஆய்வுகளில் கீரைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, கீரைகளை சாப்பிடாதவர்களை விட சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் 14 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

தர்பூசணி, முலாம் பழம்

தர்பூசணி, முலாம் பழம்

தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றில், வைட்டமின்கள்களான ஏ, சி போன்றவை அதிகம் உள்ளது. அதோடு நீர்ச்சத்தும் அதிகளவில் நிறைந்துள்து. இதனை சாலட் செய்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சர்க்கரை நோய் தீவிரமடையாமலும் இருக்கும்.

நட்ஸ்

நட்ஸ்

2011-இல் வெளிவந்த ஆய்வு ஒன்றில் டைப்-2 சர்க்கரை நோயாளிகளை தினமும் 2 அவுன்ஸ் நட்ஸை சாப்பிட வைத்தனர். அதில் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே சர்க்கரை நோய் இருந்தால், நட்ஸ் சாப்பிடலாமா என்ற அச்சம் இருந்தால், அதை உடனே விட்டொழியுங்கள்.

ஒட்ஸ்

ஒட்ஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த உணவுப் பொருள். ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு குறைந்து, கட்டுப்பாட்டுடன் பராமரிக்கலாம். ஆகவே ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான உணவுகளுள் ஒன்றாகும்.

திணை

திணை

திணையில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே சர்க்கரை நோய் இருந்தால், காலையில் திணை கஞ்சி செய்து குடியுங்கள். இது மிகச்சிறப்பான காலை உணவாக அமையும்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

ராஸ்பெர்ரி பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது எலும்பு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. அதோடு புற்றுநோய் மற்றும் இதய நோயையும் தடுக்கும். ராஸ்பெர்ரியின் நிறத்தில் அதில் உள்ள அந்தோசையனின்கள் தான் காரணம். இது தான் ராஸ்பெர்ரி பழத்தில் சிவப்பு நிறத்தைக் கொடுத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த பழமாக்குகிறது. ஆய்வு ஒன்றில் இதில் உள்ள எலாஜிக் என்னும் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பழமாகும்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்

சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த கிரேப்ஃபுரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக இந்த பழத்தில் ஏராளமான அளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிக்கு சிறப்பான உணவுப் பொருட்களுள் ஒன்றாக உள்ளது.

சிவப்பு வெங்காயம்

சிவப்பு வெங்காயம்

வெங்காயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை அதிகம் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், புற்றுநோயைத் தடுப்பதோடு, நாள்பட்ட நோயான ஆஸ்துமா பிரச்சனையையும் தடுக்கும். வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டு, நாள்பட்ட பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதாக 2002-இல் வெளிவந்த பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் சாலட் செய்யும் போது சிவப்பு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பட்டை தூள்

பட்டை தூள்

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்களில் சிறிது பட்டைத் தூளைக் கலந்து எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக பராமரிக்கப்படும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள், இன்சுலின் சென்டிசிவிட்டியை மேம்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே உணவில் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க நினைத்தால், பட்டைத் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20 Power Foods for Diabetes

Here we listed some of the top 20 power foods for diabetes. The foods on this list shouldn't be the only foods you eat, but incorporating some or all into your diabetes meal plan will help improve your overall health.
Story first published: Tuesday, March 13, 2018, 13:50 [IST]