சர்க்கரை நோய்க்கான சில பண்டைய கால வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோய் என்பது தற்போது பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய், டைப்-2 சர்க்கரை நோய் ஆகும். இதில் டைப்-1 சர்க்கரை நோய், போதுமான இன்சுலின் சுரக்காததால் ஏற்படுவதாகும். டைப்-2 சர்க்கரை நோயானது போதுமான இன்சுலினை சுரக்காமல் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் இருக்கும்.

Natural Ancient Remedies For Diabetes

சர்க்கரை நோயின் சில பொதுவான அறிகுறிகளாவன களைப்பு, உடல் எடை இழப்பு, அளவுக்கு அதிகமான தாகம், அதிகளவு சிறுநீர் கழிப்பது, வெட்டு காயங்கள் தாமதமாக குணமாவது, மங்கலான பார்வை போன்றவை ஆகும். சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவுகளின் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

Natural Ancient Remedies For Diabetes

அதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சில பண்டையக் கால வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாகற்காய்

பாகற்காய்

பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கும். பாகற்காய் டைப்-1, டைப்-2 என இரண்டு வகை சர்க்கரை நோய்க்கும் நல்லது.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள். இந்த ஜூஸ் தயாரிக்க, 2-3 பாகற்காயை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, வேண்டுமானால் நீர் சேர்த்து குடியுங்கள். இப்படி குறைந்தது 2 மாதம் தினமும் காலையில் குடியுங்கள்.

* இல்லாவிட்டால், அன்றாடம் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பட்டை

பட்டை

பட்டை தூள் இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதில் உள்ள பயோஆக்டிவ் பொருட்கள், சர்க்கரை நோயைத் தடுக்கவும், எதிர்க்கவும் உதவும். கட்டுப்பாடு இல்லாத டைப்-2 இரத்த சர்க்கரை அளவைப் பட்டைத் தூள் கட்டுப்படுத்தும். அதற்காக பட்டையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் பட்டையில் உள்ள குறிப்பிட்ட உட்பொருளான கௌமாரின், கல்லீரல் பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கும்.

* 1 டீஸ்பூன் பட்டைத் தூளை, 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் குடித்து வர வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு கப் நீரில் 2-4 துண்டுகள் பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 20 நிமிடம் கழித்து, இந்த பானத்தை வடிகட்டி தினமும் குடித்து வாருங்கள்.

* இன்னும் எளிய வழி வேண்டுமானால், குடிக்கும் அனைத்து விதமான பானங்கள், ஸ்மூத்திகளின் மீது பட்டைத் தூளைத் தூவி உட்கொண்டு வாருங்கள்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் பண்டைய காலம் முதலாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பொருளானது இன்சுலினைப் பொறுத்து க்ளுக்கோஸின் உற்பத்தியைத் தூண்டிவிடுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.

* 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து வெந்தயத்தை அப்படியே உட்கொள்ளுங்கள். இச்செயலை தொடர்ந்து சில மாதங்கள் தவறாமல் பின்பற்றினால், க்ளுக்கோஸ் அளவு குறையும்.

* இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கணையத்தின் முறையான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

* 2-3 நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து. ஒரு துணியில் அந்த பேஸ்ட்டைப் போட்டு வடிகட்டி, வரும் சாற்றில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றினை ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, சில மாதங்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

நாவல் பழம்

நாவல் பழம்

நாவல் பழத்தில் உள்ள அந்தோ சையனின்கள், எலாஜிக் அமிலம், ஹைட்ரோலிசேபிள் டானிடன்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பத்ததும். நாவல் பழத்தின் இலைகள், பழம், விதைகள் என அனைத்துமே உதவும்.எனவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழ விதையின் பொடி கிடைத்தால், அதை வாங்கி நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடியுங்கள்.

மா இலைகள்

மா இலைகள்

மாவிலைகளும் சர்க்கரை நோயை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவிலை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். இதோடு இது இரத்தத்தில் நல்ல கொழுப்புக்களை அளவை மேம்படுத்த உதவும்.

* 10-15 மாவிலைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால் மாவிலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, தினமும் 1 1/2 டீஸ்பூன் மாவிலை பொடியை நீரில் கலந்து அல்லது தேன் கலந்து உட்கொள்ளுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலையும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பயன்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள உட்பொருட்கள், ஸ்டார்ச் க்ளுக்கோஸாக உடைக்கப்படுவதைக் குறைக்கும். அதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்கள். இப்படி தொடர்ந்து 3-4 மாதங்கள் உட்கொள்வதன் மூலம், உயர் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, உடல் பருமனும் குறையும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையும் இரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்க உதவும். இதில் உள்ள பைட்டோ ஸ்டெரால்கள், டைப்-2 சர்க்ரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள நன்மையை வழங்குகிறது.

* 1 1/2 டீஸ்பூன் பிரியாணி இலை பொடி மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்தது கலந்து கொள்ளுங்கள்.

* இந்த கலவையை தினமும் இரண்டு முறை என, மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன் உட்கொள்ளுங்கள்.

கொய்யா

கொய்யா

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாவின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதே நல்லது. அதேப் போல் ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக கொய்யாப் பழத்தை சாப்பிடக்கூடாது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் உள்ள பாலிபீனோலிப் மூலக்கூறுகள், இரத்த க்ளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

* சிறிது வெண்டைக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, ஆங்காங்கு லேசாக கீறி விடுங்கள்.

* பின் அதை ஒரு டம்ளர் நீரில் ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெண்டைக்காயை நீக்கிவிட்டு, நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி தினமும் என பல வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* வேண்டுமானால் அன்றாட உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ancient Remedies For Diabetes

Here are the top natural ancient remedies for diabetes. Needless to say, you also need to consult a doctor for proper diagnosis and treatment.
Story first published: Monday, April 16, 2018, 10:02 [IST]