சர்க்கரை நோயாளிகளுக்கு பற்களிலும் ஆபத்து இருக்கிறது தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோய் பிரச்சனை இருக்கிறதா உங்களுக்கு? ஆளைக் மெல்லக் கொல்லும் அந்த நோய் குறித்த அச்சம் எல்லாருக்கும் இருக்கிறது. நம் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்தால் ஏற்படுகிற தொல்லைகளுக்கு பஞ்சமிருக்காது.

இதுவரை மாரடைப்பு ஏற்படும், புண் வந்தால் ஆறாது, முற்றிப்போனால் காலையே எடுத்து விடுவார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

பற்களை வலுவாக பிடிக்க ஈறுகளுக்கு ரத்த ஓட்டம் அவசியம். உங்களின் ரத்தச் சர்க்கரையளவு அதிகமாக இருந்தால் இந்த ரத்த ஓட்டம் குறைந்திடும். இதனால் ஈறுகள் வலுவிழந்து பாக்டீரியா தொற்று ஏற்படும்.

வாயில் வறட்சி :

வாயில் வறட்சி :

சர்க்கரையளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நா வறட்சி அடிக்கடி ஏற்படும், இதனால் ஈறுகளில் உண்டான பாக்டீரியாத் தொற்று மிக வேகமாக பரவும். அதோடு எச்சில் சுரப்பும் குறைவாக இருக்கும் என்பதால் பற்களின் வலுவிற்கு அவை கேள்விக்குறியாக்கிடும்.

கேவிட்டீஸ் :

கேவிட்டீஸ் :

நாம் சாப்பிடும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களினால் ஏற்கனவே பற்களில் மற்றும் வாயில் பாக்டீரியா அதிகமாக இருக்கக்கூடும். இந்நேரத்தில் சர்க்கரையளவு அதிகமாகவும் இருந்தால்.... அதாவது உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது பற்களில் கேவிட்டீஸ் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

அமிலம் :

அமிலம் :

ஸ்டிக்கி கோட்டிங் ஒன்று பற்களின் மேல் உருவாகும். பெரும்பாலும் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை. நாளடைவில் அவை பற்கள் முழுவதையும் படர்ந்து பற்களின் மேலிருக்கிற எனாமலை குலைத்திடும். இதனால் பற் சிதைவுஏற்படும். சர்க்கரையளவு அதிகரிக்க இந்த அமிலத்தின் அளவும் அதிகரிக்கும். இதனை நாம் மாதக் கணக்கில் கண்டு கொள்ளாமல் விட்டால் பற்களில் பற்குழி, பற்சிதைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஜிங்கிவிட்டீஸ் :

ஜிங்கிவிட்டீஸ் :

சர்க்கரை நோயின் முதல் வேலையே உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை குலைப்பது தான். அதீதச் சர்க்கரையினால் உருவாகும் பற்களில் படரும் ப்ளாக்யூ பற்களின் ஈறுகளையும் தாக்க ஆரம்பிக்கும்.

இதனால் சில நேரங்களில் ஈறுகளில் ரத்தக்கசிவு , ஈறு வீங்குதல் முதலான பிரச்சனைகள் ஏற்படும். இதனைத்தான் ஜிங்கிவிட்டீஸ் என்கிறார்கள்.

Periodontitis :

Periodontitis :

ஜிங்கிவிட்டீஸை தொடர்ந்து கண்காணிக்காமல், முறையான சிகிச்சைகளை எடுக்காமல் விட்டால் அதன் அடுத்தக்கட்டம் தான் இந்த பாதிப்பு. இவை பற்களை தாங்கிப் பிடித்திருக்கும் நுண்ணிய திசுக்களை எல்லாம் அழித்திடும். அதோடு இவை தாடை எலும்பைக்கூட நொறுக்கும் வீரியம் படைத்தது.

சர்க்கரையளவை அதிகரிக்கும் :

சர்க்கரையளவை அதிகரிக்கும் :

Periodontitis பாதிப்பு உண்டானால் உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? இவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருப்பது தான்.

இதனால் உங்களால் ரத்தச் சர்க்கரையளவை எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

candidiasis :

candidiasis :

வாயில் வளரக்கூடிய ஒரு வகை ஃபன்கஸ். இவை பல் ஈறுகள்,நாக்கு, உள்ளன்னம் மேலன்னம் ஆகிய பகுதிகளில் உண்டாகும். ஆரம்பத்தில் அதீத சூட்டினால் உண்டானது என்று தான் நினைப்பார்கள்.இரண்டு நாட்களில் அவை குறையவில்லையெனில் உங்களது ரத்தச் சர்கக்ரையளவை பரிசோதித்திடுங்கள்.

 xerostomia :

xerostomia :

ஆரம்பத்தில் பார்த்தது தான் இது. அதீத நாவறட்சி உண்டாகும். இதனால் பாக்டீரியாவை அழிக்க முடியாமல் தவிப்பீர்கள். வறட்டு இருமல் இருக்கும், எந்த உணவைச் சாப்பிட்டாலும் கசப்பாகவே இருக்கும், உணவை மெல்லுவதில்,முழுங்குவதில் சிக்கல்கள் இருக்கும். பேசுவதில் தடுமாற்றமிருக்கும், உதட்டில் கூட வெடிப்பு உண்டாகும்.

எரிச்சல் :

எரிச்சல் :

இதனை ஓரல் பர்னிங் என்று அழைக்கிறார்கள். காரணமேயில்லாமல் வாயில் அதீத எரிச்சல் உண்டாகும். இவை நீங்கள் காரமான உணவு சாப்பிட்டு விட்டதாகவோ அல்லது தெரியாத்தனமாக நாக்கை கடித்திருப்பேன் என்றோ நினைக்காதீர்கள். உங்கள் உடலின் ரத்தச் சர்க்கரையளவு அதிகரித்ததால் தான் இந்த எரிச்சல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes Patients Highly Risk For dental problems

Diabetes Patients Highly Risk For dental problems
Story first published: Thursday, January 4, 2018, 9:30 [IST]