மாம்பழம் மூலம் இதய நோய், சர்க்கரை நோயில் இருந்து எப்படி குணமடையலாம்?

Posted By:
Subscribe to Boldsky
  • அமெரிக்காவை சேர்ந்த தேசிய மாம்பழ வாரியம், மாம்பழத்தின் மூலமாக பெறும் நன்மைகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்த நன்கொடை வழங்கியது.
  • இந்த ஆய்வில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மாம்பழம் மூலம், சருமம், மூளை என மனித ஆரோக்கியம் மேம்பட பல வகையில் நன்மைகள் விளைவதை அறிந்தனர்.

உங்கள் டயட்டில் மாம்பழம் சேர்த்து உண்பதால் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மாம்பழம் குறித்த இந்த ஆய்வு நடத்த அமெரிக்காவை சேர்ந்த தேசிய மாம்பழ வாரியம் தான் முழு நன்கொடை, பண உதவி செய்துள்ளனர். இதன், மூலம் மாம்பழம் மக்கள் உண்ண வேண்டிய ஒரு சிறந்த கனி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்காவை சேர்ந்த விமர்சகர்கள், மாம்பழ விற்பனையை அதிகரிக்க வேண்டி, அவர்களே இப்படி பண உதவி செய்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என கூறி இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிகாகோ!

சிகாகோ!

சிகாகோவை சேர்ந்த இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோய் மாம்பழம் பற்றி நடந்த ஏழு ஆய்வுகளை கண்காணித்து வந்துள்ளனர்.

சர்க்கரை!

சர்க்கரை!

அதில், மாம்பழம் உண்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது, இது மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் மத்தியிலும் காணப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.

இது இரத்தத்தில் க்ளூகோஸ் அதிகரிக்காமல் இருக்க செய்து கட்டுப்படுத்துகிறது.

பாதிப்புகள்!

பாதிப்புகள்!

டைப் 2 நீரிழிவு நோயால் கண்பார்வை குறைபாடு போன்ற அபாயமான பாதிப்புகள் உண்டாகலாம். இதற்கு காரணம் சரியான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், இரத்தத்தில் அதிகளவில் க்ளூகோஸ் கலப்பதும் ஆகும்.

குடல் நோய்!

குடல் நோய்!

இதுமட்டுமின்றி மாம்பழம் சாப்பிடுவதால் இன்ஃப்ளமேட்டரி போவல் டிசீஸ் எனப்படும் குடல் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பு அளவும் குறையும் என கூறப்பட்டுள்ளது. இதனால், சிறுகுடல், பெருங்குடல் எரிச்சல், வீக்கம் ஏற்படுவது குறையும்.

நச்சு!

நச்சு!

மேலும், மாம்பழம் சாப்பிடுவதால் மூளையில் தேங்கும் நச்சுக்கள் செறிவு உருவாகாமல் தடுத்து காக்கப்படுகிறது. இது எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை மூலம் அறியப்பட்டுள்ளது.

ஆயினும், அமெரிக்க ஆய்வார்கள் இருபுறமாக நின்று, ஒருசிலர் மாம்பழம் நல்லது என்றும், ஒருசிலர் மாம்பழம் இவர்கள் கூறும் அளவு நல்லதல்ல என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கான சரியான தீர்வு மற்றும் முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இவர்கள் ஒன்றாக முன்வர வேண்டும் என பொதுவாக பேசும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Mango Prevents Heart Disease and Diabetes?

How Mango Prevents Heart Disease and Diabetes?
Subscribe Newsletter