15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. ஆனால் அதைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அதுவும் மருந்து மாத்திரையின்றி, வீட்டு சமையலறையில் உள்ள ஓர் எளிய பொருளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

Diabetics Can Try This Remedy!

அதுவும் பட்டைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். சில ஆய்வுகளில் பட்டை இரத்த சர்க்கரை அளவையும், இன்சுலின் தடுப்பாற்றலையும் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வு ஒன்றில், 1/2 டீஸ்பூன் பட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், 18 சதவீதம் கொலஸ்ட்ராலும், 25 சதவீதம் இரத்த சர்க்கரை அளவும் குறைவதாக தெரிய வந்துள்ளது.

இப்போது மருந்து மாத்திரைகள் எடுக்காமல், சர்க்கரை நோயை இயற்கை வழியில் கட்டுப்படுத்த உதவும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 500 மிலி

பட்டை தூள் - 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

நீரை சூடேற்றி அதில் ஓட்ஸைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். அதுவும் இதை தினமும் காலையில் என தொடர்ந்து 15 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

இது எப்படி உதவுகிறது?

இது எப்படி உதவுகிறது?

சர்க்கரை நோயாளிகள், இந்த ஓட்ஸை சாப்பிட்டால், உயர் நிலையில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, உடல் எடையும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படும்.

எந்த உட்பொருள் இதற்கு உதவுகிறது?

எந்த உட்பொருள் இதற்கு உதவுகிறது?

பட்டையில் உள்ள மெத்தில்-ஹைட்ராக்ஸிகால்கோன் என்னும் உட்பொருள் தான், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

பூஞ்சை எதிர்ப்பு பொருள்

பூஞ்சை எதிர்ப்பு பொருள்

பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கும்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

சர்க்கரை நோயைக் குறைக்க வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், பட்டையைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு, பின் பயன்படுத்துங்கள்.

குறிப்பு

குறிப்பு

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், பட்டைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் அளவுக்கு அதிகமாக பட்டையை உட்கொண்டால், அது கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diabetics Can Try This Remedy!

You can use cinnamon for diabetes control. Just mix it with water and oats and consume it twice a day.
Story first published: Saturday, April 29, 2017, 10:41 [IST]
Subscribe Newsletter