சர்க்கரை நோயாளிகள் பேரீட்சை சாப்பிடலாமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்த குளிர் காலத்தில் பேரிட்சை பழங்களை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அதிலிருக்கும் இரும்புச்சத்து மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்ற உலர் பழங்களை ஒப்பிடும் போது பேரிட்சையில் அதிகப்படியான கலோரி இருக்கிறது. ஒரே நாளில் அதிகமாக இதனை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.

Can diabetes Patient consume dates?

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது. சில நேரங்களில் வலுக்கட்டாயமாக, நம் உடலின் சர்க்கரையளவை உயர்த்தும் என்று சொல்லி தவிர்த்துவிடுவோம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கும் பல பொருட்களில் முதன்மையான இடம் பிடிக்கிறது பேரீட்சை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேரீட்சை :

பேரீட்சை :

சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்ட யாரிடமாவது நீங்கள் பேரீட்சை சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று கேளுங்கள். அலறியடித்துக் கொண்டு இல்லை அதெல்லாம் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் சர்க்கரையளவு அதிகரித்து விடும் என்பார்கள்.

அவர்களிடம் பேரீட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாரளமாக சாப்பிடலாம் என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

உணவுப்பழக்கம் :

உணவுப்பழக்கம் :

முறையான உணவுப்பழக்கத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு பேரிட்சைகளை சாப்பிடலாம். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கண்டிப்பாக தேவை.

பேரீட்சை எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. இதில் எளிதாக கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதைத் தவிர,இரும்புச்சத்து, பொட்டாசியம் விட்டமின் பி, பி6,ஏ மற்றும் கே இருக்கின்றன. அதோடு டேனின்,காப்பர்,மக்னீசியம்,நியாசின்,

பேண்டோதெனிக் அமிலம், ரிபோஃப்லேவின் ஆகியவை அடங்கியிருக்கிறது. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.

 சத்துக்கள் :

சத்துக்கள் :

பேரீட்சையில் ஃப்ருக்டோஸ்,சுர்கோஸ் மற்றும் குளூக்கோஸ் என இயற்கையான இனிப்பு கலந்திருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் பேரீட்சையை சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளை எனர்ஜியுடன் வைத்திருக்க கூடிய ஆற்றல் பேரீட்சையில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று கூட சொல்லலாம்.

ப்ரோக்கோலி, ஆரஞ்சு,திராட்சை மற்றும் மிளகு ஆகியவற்றில் இருப்பதை விட பேரீட்சையில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் பேரீட்சை குறைவான க்ளைசீமிக் இண்டெக்ஸ் கொண்டது.

ரத்தச் சர்கரையளவு :

ரத்தச் சர்கரையளவு :

சர்க்கரை நோயாளிகள் பேரீட்சையை தொடர்ந்து எடுத்து வந்தால் அதிலிருந்து நமக்கு க்ளுகோஸ் கிடைக்கும். இது சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

பேரீட்சையில் இருக்கும் கொட்டையிலிருக்கும் சத்துக்கள் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதோடு இன்ஸுலின் சுரப்பையும் கட்டுக்கொள் வைத்திருக்கிறது.

நரம்பு பிரச்சனை

நரம்பு பிரச்சனை

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலானோருக்கு நரம்புகளில் பிரச்சனையிருக்கும். அதுவும் கால் மற்றும் பாதங்களில் அதிகப்படியான பாதிப்பினை சந்திப்பர். நியூரோ சையின்ஸ் நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயினால் ஏற்படும் நியூரோபதியை தீர்க்க பேரீட்சை உதவுகிறது.

என்ன தான் பேரீட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகிறது என்றாலும் அதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மற்றவர்கள் பேரீட்சையை அதிகமாக எடுத்துக் கொண்டாள் சர்க்கரை நோய் வந்திடுமோ என்று பயப்பட வேண்டாம்.

அளவுக்கு அதிகமாக பேரீட்சை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள், கர்பப்பை கோளாறுகள் ஆகியவை ஏற்படும்.

கொலஸ்ட்ரால் ஃப்ரீ :

கொலஸ்ட்ரால் ஃப்ரீ :

சர்க்கரை நோயாளிகள் தினமும் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வது அவசியம். இதனைக் குறைத்தால் எனர்ஜி லெவல் முற்றாக குறைந்திடும் அதனை சமமாக வைத்திருக்க பேரீட்சையை சாப்பிடலாம்.

பேரீட்சை கொலஸ்ட்ரால் ஃப்ரீ என்று சொல்லலாம். இதிலிருக்கும் ஃபைபர் டைப் 2 டயப்பட்டீஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

இதிலிருக்கும் விட்டமின்கள் நரம்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும், இதைத் தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்தும் உங்களை காக்கும்.

டைப் 2 டயபட்டீஸ் :

டைப் 2 டயபட்டீஸ் :

மக்னீசியம் இருப்பதால் டைப் 2 டயப்பட்டீஸ் வராமல் தடுக்க முடியும். உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மக்னீசியம் குறைந்து விடும் இதனால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பேரீட்சை இந்த சிக்கலை தீர்க்கிறது.

இன்ஸுலின் :

இன்ஸுலின் :

100 கிராம் பேரீட்சையில் எட்டு கிராம் ஃபைபர் இருக்கிறது. அதோடு பேரீட்சையில் பீட்டா- டி-க்ளுகன் என்ற கரையக்கூடிய ஃபைபர் நிறைய இருக்கிறது. இதனால் கொழுப்பு படிவது தவிர்க்கப்படும்.

பேரீட்சையில் இனிப்பு இருந்தாலும் அவை ஃபைபரினால் நிறைந்திருப்பதால் இன்ஸுலின் உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.

பிற நன்மைகள் :

பிற நன்மைகள் :

பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.பேரிச்சம்பழத்தில் நிறைய விட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can diabetes Patient consume dates?

Can diabetes Patient consume dates?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter