மருந்து மாத்திரையின்றி சர்க்கரை நோயில் இருந்து மீண்ட மனிதன் - எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அந்த குறைபாட்டில் இருந்து முற்றிலும் குணமாவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத காரியம். சர்க்கரை நோய் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!!!

அப்படி தான் நான்கு வருடத்திற்கு முன் ஒரு இளம் ஆண் மிகுதியான தாகத்தை உணர்ந்தார். அதற்காக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தற்செயலாக தெரிய வந்தது. இரத்த பரிசோதனையில், அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 29 ஆக உயர்ந்திருந்தது.

சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்!!!

அவரது கணையம் செயலிழந்தும் போயிருந்தது. அதனால் அவர் இன்சுலின் தெரபியை மேற்கொள்ள வேண்டி வந்தது மற்றும் உயர் இரத்த அழுத்த மாத்திரைகளையும் எடுத்து வந்தார். ஆனால் அவர் இப்பிரச்சனையை ஒரு கட்டத்தில் மருந்து மாத்திரைகளின் உதவியின்றி மீண்டு வந்தார். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிலைமை மோசமானது

நிலைமை மோசமானது

இன்சுலின் தெரபியுடன், சிறிது உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் அவரது உடல்நலத்தில் எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. மாறாக நிலைமை மோசமாகத் தான் செய்தது. அந்த ஆணின் இரத்த அழுத்தமும் 150/100 ஆக உயர்ந்திருந்தது மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவு 16 ஆக இருந்தது. இதற்கு அவர் எடுத்து வந்த அதிகப்படியான மருந்து மாத்திரைகள் தான் காரணம்.

டாக்டர். ஜான் ஜிர்டம்

டாக்டர். ஜான் ஜிர்டம்

2013 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு "தி எட்ஜ் ஆஃப் சயின்ஸ்" என்னும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 12 வருடங்கள் பச்சை உணவுகளை மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வந்த டாக்டர். ஜான் ஜிர்டம் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியைப் பார்த்த பின், தன் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார்.

பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள்

பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள்

இதன் ஆரம்பமாக முதலில் ப்ளெண்டர் வாங்கினார். ஆரம்பத்தில் ஒரு வாரம் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை மட்டும் உண்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும் தன் உடல்நல பிரச்சனையில் இருந்து விடுபட, கஷ்டங்களைத் தாங்கி பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் உட்கொண்டு வந்தார். இதன் பலனாக அவரது இரத்த சர்க்கரை அளவில் 5 குறைந்தது.

இன்சுலின் தெரபியைக் கைவிட முடிவு

இன்சுலின் தெரபியைக் கைவிட முடிவு

இப்படி ஒரு நல்ல முன்னேற்றம் தெரிந்ததால், இன்சுலின் தெரபியைக் கைவிட்டு, தினமும் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை மட்டும் உட்கொண்டு வந்தார். ஒருவேளை முன்னேற்றம் தெரியாவிட்டால், மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடலாம் என்ற முடிவில் இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த டயட் அவரது உடலில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பித்தது.

எடை குறைவு

எடை குறைவு

இந்த டயட்டினால் அவரது உடல் எடையும் குறைய ஆரம்பித்தது. 25 நாட்கள் கடைப்பிடித்த பச்சை உணவு டயட்டினால், 11 கிலோ உடல் எடையைக் குறைத்திருந்தார்.

நான்கு மாதங்களுக்குப் பின்...

நான்கு மாதங்களுக்குப் பின்...

நான்கு மாதங்கள் கழித்து, இவர் முற்றிலும் வித்தியாசமானவராக மாறிவிட்டார். இவருக்கு இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது மற்றும் அவரது இரத்த அழுத்தம் மீண்டும் 120/70 என்ற அளவிற்கு வந்தது. ட்ரைகிளிசரைடு அளவும் 1.4 ஆக குறைந்திருந்தது. இந்த டயட்டின் போது இவர் அதிகம் விரும்பி பருகிய ஓர் பானம் என்றால் அது கீழே கொடுக்கப்பட்டிருப்பது தான்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:

பானம் செய்ய தேவையான பொருட்கள்:

கிவி - 5

கேல் கீரை- 1 கையளவு

ஆப்பிள் - 2

வாழைப்பழம் - 2

தண்ணீர் - 2 லிட்டர்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ப்ளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்தையும் குடிக்க வேண்டாம். காலையில் முதலில் பாதியைக் குடித்த பின், நாள் முழுவதும் மெதுவாக குடித்து வாருங்கள்.

பசி எடுத்தால்?

பசி எடுத்தால்?

ஒருவேளை பசி எடுத்தால், பழங்கள், ஃபுரூட் சாலட் அல்லது வேக வைத்த சூரை மீன் சாப்பிடுங்கள். சூரை மீனில் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது. இது உடலின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத வைட்டமின்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Defeat His Diabetes Without Any Medicine!

Here’s What A Man Consumed And Overcame His Diabetes Without Any Medicine! Read on to know more...