இந்த பழக்கவழக்கங்கள் தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நீரிழிவு/சர்க்கரை நோய் என்பது ஒரு பற்றாக்குறையே தவிர நோயல்ல. நீரிழிவு, இரத்தத்தில் அதிகப்படியான அளவில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் இருந்தால் ஏற்படும் நிலையாகும். ஒருவருக்கு இப்பிரச்சனை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேப் போல் பரம்பரையில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தாலும் வரக்கூடும்.

முக்கியமாக சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைச் செய்தால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

சரி, என்ன பழக்கவழக்கங்கள் நீரிழிவு நோயை உண்டாக்குகின்றன என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழக்கம் #1

பழக்கம் #1

அதிகப்படியான காபி

என்ன தான் காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்தாலும், அதில் உள்ள காப்ஃபைன் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பழக்கம் #2

பழக்கம் #2

அதிக கலோரி நிறைந்த உணவுகள்

பிட்சா, ஃப்ரைஸ், பர்கர், சாக்லேட் மற்றும் இதர கலோரி நிறைந்த உணவுகளை ஒருவர் அதிகமான அளவில் உட்கொண்டு வருமாயின், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்கும்.

பழக்கம் #3

பழக்கம் #3

ஆன்டி-பயாடிக்கள் எடுப்பது

சைனஸ் மற்றும் காய்ச்ல் உள்ளவர்கள், குறிப்பிட்ட வகையான ஆன்டி-பயாடிக்குகள் மற்றும் இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்துகளை எடுத்தால், அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

பழக்கம் #4

பழக்கம் #4

மன அழுத்தம்

அலுவலகத்தில் வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான டென்சன் போன்றவை ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

பழக்கம் #5

பழக்கம் #5

எனர்ஜி ட்ரிங்க்ஸ்

உடலின் ஆற்றலை அதிகரிக்க சிலர் எந்நேரமும் ஏதாவது ஒரு எனர்ஜி பானங்களை குடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த எனர்ஜி பானங்களில் கலோரிகள், சர்க்கரை மற்றும் காப்ஃபைன் அதிகமாக இருக்கும். எனவே அதிகளவில் இதனைப் பருகும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

பழக்கம் #6

பழக்கம் #6

உலர் பழங்கள்

என்ன ஆச்சரியமாக உள்ளதா? உலர் பழங்கள் என்ன தான் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருந்தாலும், ஒரு நாளில் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்துவிடும்.

பழக்கம் #7

பழக்கம் #7

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள்

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்கும். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தூண்டிவிடும். எனவே ஒருவர் இந்த மாத்திரையை அதிகம் எடுக்கும் போது, இரத்த சர்க்கரை அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Habits That Can Increase Your Blood Sugar Level

There are certain habits that we follow on a daily basis and certain foods that we ingest, which may be leading to the increase in our blood sugar level..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter