Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சர்க்கரை நோயாளிகள் காலை வேளையில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டா.. சுகர் கண்ட்ரோலா இருக்கும்?
Diabetes Diet In Tamil: உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க சிறந்த நேரம் என்றால் அது காலை வேளை தான். நாம் உண்ணும் உணவுகளானது வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, க்ளுக்கோஸ் வெளியீடுவதைக் குறைக்கிறது மற்றும் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
இப்படிப்பட்ட காலை உணவானது சத்தானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், உடல் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் சர்க்கரை நோயாளிகளை எடுத்துக் கொண்டால், அவர்களின் காலை உணவு மட்டுமின்றி, எந்த ஒரு உணவை உட்கொள்வதாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக சில சமயங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவு காலை வேளையில் அதிகளவில் இருக்கும். இந்த சூழ்நிலையில் காலை வேளையில் உண்ணும் உணவானது இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
அதற்கு இவர்கள் சரிவிகித காலை உணவை உண்ண வேண்டும். அதாவது புரோட்டீன், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக காலை உணவில் மாவுச்சத்து என்னும் ஸ்டார்ச் இருக்கக்கூடாது.
காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, ஹைப்பர் கிளைசீமியா இருக்க வாய்ப்புள்ளது. காலையில் எழுந்ததும் அதிக தாகமாக இருந்தாலோ, அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ அல்லது பார்வை மங்கலாக தெரிந்தாலோ, இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
பொதுவாக சர்க்கரை நோயின் போது, ஹார்மோன்களை கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் இருக்காது. இதனால் காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம். சிலருக்க காலை வேளையில் இரத்த சர்க்கரை அளவை மிகவும் குறைவாக இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் காலை உண்ணும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலையில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது அவசியம். இப்போது சர்க்கரை நோயாளிகள் காலையில் முதல் வேளையாக எந்த உணவுகள் அல்லது பானங்களை எடுக்கலாம் என்பது குறித்து காண்போம்.
1. நெய் மற்றும் மஞ்சள் தூள்
சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் முதல் வேளையாக ஒரு டீஸ்பூன் நெய்யுடன், சிறிது மஞ்சள் தூள் கலந்து உட்கொள்ளலாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் இதை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நெட்ய வயிற்றை நிரப்பி, சர்க்கரை உணவின் மீதான நாட்டத்தை நாள் முழுவதும் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேப் போல் இதில் உள்ள மஞ்சள் தூள் சர்க்கரை நோயாளிகளில் உடலில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்க உதவி புரிகிறது.
2. ஆப்பிள் சீடர் வினிகர் பானம்
சர்க்கரை நோயாளிகள் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 30 மிலி நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 100 மிலி எலுமிச்சை சாற்றுடன் கலந்து, 100 மிலி நீரை கலந்து காலையில் முதல் வேளையாக குடிப்பது நல்லது. இது உடலின் காரத்தன்மையை பராமரிக்க உதவி புரிந்து, விரைவில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3. பட்டை நீர்
ஏராளமான மருத்துவ குணம் கொண்ட மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரியக்கூடியது. அதற்கு இந்த பட்டையை கொதிக்கும் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த பட்டை நீரைக் குடிக்க வேணடும். இப்படி குடித்து வந்தால், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. வெந்தய நீர்
கசப்புத்தன்மையைக் கொண்ட மற்றொரு மருத்துவ பண்புகளை அதிகம் உள்ளடக்கிய சமையலறை பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் தினசரி கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகிறது. அதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை மென்று நீரைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
5. புரோட்டீன் உணவுகள்
காலை வேளையில் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தால், புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் ஊற வைத்த பாதாம், வால்நட்ஸ் அல்லது நட்ஸ் வெண்ணெயுடன் கூடிய பழங்கள் போன்றவற்றை காலையில் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக காலையில் காபி, டீ குடிப்பதைத் அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேக வைத்த முட்டை, முளைக்கட்டிய பச்சை பயறுகளை சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications