Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
பெண்களே! நீங்க செய்யும் இந்த தவறுகளால்தான்... உங்க பீரியட்ஸ் வலி அதிகமாகுதாம் தெரியுமா?
மாதவிடாய் காலத்தின்போது ஒவ்வொரு பெண்களும் தங்கள் சொந்த உடலுடன் போரிடுகிறார்கள். இந்த நேரத்தில் உணர்ச்சிகள், உடல் அசௌகரியங்கள், வலி மற்றும் வயிற்று பிடிப்புகள் போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் செய்யும் சில தவறுகளால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் காலத்தை கடந்து செல்லும் போது, பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் வித்தியாசமாக இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் சில மாதவிடாய் கால பிரச்சினைகள் பொதுவானவையாக இருக்கின்றன.

சில பெண்கள் வீக்கத்தை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் பிடிப்புகளால் ஏற்படும் வலியால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் செய்யும் சில மாதவிடாய் தவறுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக சில நேரங்களில் மாதவிடாய் மிகவும் வேதனையாகிறது.
வலிமிகுந்த காலங்கள் டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகின்றன. எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டு கருப்பை, இடுப்பு தொற்று (PID), மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் ஆகியவை வலிமிகுந்த மாதவிடாய் காலங்களுக்கு சில காரணங்கள். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருப்பதாக புகார் கூறுகின்றனர்.
ஐந்து நாட்களுக்கு மேல் மாதவிடாயின் போது வலி ஏற்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
அதிகமாக டீ அல்லது காபி குடிப்பது
மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்பைக் குறைக்க அதிகமாக டீ அல்லது காபி உட்கொள்வது நல்லதல்ல. இது மன அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உங்களை சோர்வாக உணர வைக்கும்.
இதைத் தவிர்க்க ஆர்கானிக் தேநீர், ஆரோக்கியமான பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளை உங்கள் வழக்கமான முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில், காஃபின் அடிவயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும் மற்றும் இது நம்மை நீரிழப்பு அடையச் செய்கிறது.
உண்ணாவிரதம் அல்லது நீண்ட நேரம் பசியுடன் இருப்பது
மாதவிடாய் நாட்களில், அதிக இரத்தப்போக்கு உங்களை பலவீனமாக உணர வைக்கும். குறிப்பாக இந்த நேரத்தில் உண்ணாவிரத்தை அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் உட்பட உங்கள் உடலுக்கு முழு ஊட்டச்சத்தை வழங்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட்களைச் சேர்க்க வேண்டும்.
வேக்சிங்
பொதுவாக மாதவிடாய் காலங்களில் வலி அதிகரிக்கமாக இருக்கும். மேலும் உங்கள் சருமம் அதிக உணர்திறன் கொண்டதாக இருப்பதால், இந்த நேரத்தில் வேக்சிங் செய்வது உங்கள் வலியை அதிகரிக்க செய்யும். வேக்சிங் செய்வதிலிருந்து ஷேவிங்கிற்கு மாறினால், தோலில் காயங்கள் மற்றும் வெட்டுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனையை தவிர்க்க மாதவிடாய் நேரத்தில் வேக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே பேடைப் பயன்படுத்துதல்
பல பெண்கள் நாள் முழுவதும் ஒரே ஒரு பேடை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது நச்சு அதிர்ச்சி நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, யோனியில் அரிப்பு மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த சிக்கலைத் தடுக்க, ஒரு நாளைக்கு மூன்று முறை பேடை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் பேடுகளை மாற்றுவது கறை மற்றும் துர்நாற்றத்திலிருந்து ஏற்படும் அசௌகரியத்தைத் தடுக்க உதவும்.
பால் பொருட்களின் அதிகப்படியான நுகர்வு
அதிகப்படியான பால் பொருட்களை உட்கொள்வது தண்ணீரைத் தக்கவைத்து, அமிலத்தன்மை பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். மாதவிடாய் காலங்களில், குறைந்த கொழுப்புள்ள பாலை உட்கொள்ளுங்கள். இது பிடிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்காது. கூடுதலாக, பால் பொருட்களின் அதிகப்படியான நுகர்வால், பல பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள்.
பாதுகாப்பற்ற உடலுறவு
மாதவிடாயின் போது உடலுறவு கொள்வதால் உடலில் ஏற்படும் உச்சக்கட்டத்தின் காரணமாக பிடிப்புகள் நீங்கும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது உங்களுக்கு சிரமங்களை அதிகரிக்கும். இரத்தப்போக்கு இருக்கும்போது உடலுறவு கொள்வது பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுகள் இரத்தத்தில் காணப்படுகின்றன. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது உங்களுக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்த தவறுகளோடு, அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வது வீக்கம், மனநிலை மாற்றங்கள் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் உடலை கவனித்துக்கொள்வது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














