Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
திரிகோணாசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Trikonasana Benefits: யோகாசனங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி ஆகும். இந்த யோகாசனங்கள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இந்த யோகாசனங்களில் ஒன்று தான் திரிகோணாசனம். திரிகோண என்றால் முக்கோணம் மற்றும் ஆசனம் என்றால் நிலை. இந்த யோகாசனமானது முக்கோண நிலையில் இருப்பதால், இது திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனம் ஒருவரது உடல் மற்றும் மன உறுதியை கொண்டு வருகின்றன. மேலும் இது முக்கிய தசைகள் மற்றும் கால்களை வலுவாக்க உதவுகின்றன. இந்த ஆசனத்தை ஒருவர் ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும், இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

எந்த ஒரு ஆசனம் செய்வதாக இருந்தாலும், உணவு உண்ட பின் 2-3 மணிநேரம் கழித்து செய்வதே நல்லது. மேலும் யோகாசனங்களை காலை எழுந்ததும் செய்வது எப்போதுமே நல்லது.
திரிகோணாசனம் செய்முறை
* முதலில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
* பின் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, தோள்பட்டைக்கு இணையாக நேராக நீட்டி கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடது பக்கம் வளைந்து இடக் கையால் இடது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். இந்நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும். இந்நிலையில் முகமானது மேலே உள்ள வலது கையின் நுனிவிரலைப் பார்க்க வேண்டும்.
* பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* பின்னர் மூச்சை வெளி விட்டுக் கொண்டு வலது பக்கம் வளைந்து வலது கையால் வலது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். முகமானது மேலே உள்ள இடது கையின் நுனிவிரலைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும்.
* பின் மெதுவாக மூக்கை உள்ளிழுத்துக் கொண்டே நிமிட வேண்டும்
* இப்படி 3-6 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
திரிகோணாசனம் நன்மைகள்
திரிகோணாசனத்தை தினமும் செய்து வந்தால் பெறும் நன்மைகள் பின்வருமாறு:
* செரிமானம் மேம்படும்.
* மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்.
* மார்பு, தண்டுவடம், தோள்பட்டை போன்றவை ஸ்ட்ரெட்ச் ஆகும்.
* முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.
* சியாட்டிகாவில் இருந்து விடுபட உதவும்.
* உடல் மற்றும் மன ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்.
* அடிவயிற்று உறுப்புக்களை தூண்டும்.
* உடலின் முக்கிய தசைகளை வலுவாக்கும்.
* இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
* தொடை மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புக்கள் குறையும்.
யாரெல்லாம் திரிகோணாசனம் செய்யக்கூடாது?
* ஸ்லிப் டிஸ்க்குகள் அல்லது கடுமையான முதுகு வலியை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனம் செய்வதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
