2018 ஆஸ்கர் விருது விழாவிற்கு கேவலமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 90 ஆவது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றுக் கொண்டிக்கிறது. இந்த மாபெரும் விருது விழாவிற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு திரையுலக பிரபலங்களுக்குமே இந்த ஆஸ்கர் விருதைப் பெற வேண்டுமென்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் இந்த விருது விழாவிலும் கலந்து கொள்ள ஆசையும் இருக்கும்.

இது மிகப்பெரிய விருது விழா என்பதால், பல நடிகைகள், பாடகிகள் இந்த விருது விழாவிற்கு பல வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அவற்றில் சில உடைகள் நல்ல தோற்றத்தைக் கொடுத்தாலும், பெரும்பாலானோர் அணிந்து வரும் வித்தியாசமான உடைகள் மோசமான தோற்றத்தையே தருகின்றன. அனைவருக்குமே நல்ல ஃபேஷன் டேஸ்ட் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஃபேஷனான உடைகளை அணிந்து வருபவர்கள் அனைவருமே ஒரு கட்டத்தில், அதில் தவறுகளை செய்ய நேரிடுகிறது. அந்த வகையில் மாபெரும் ஆஸ்கர் விருது விழாவிற்கு சில பிரபலங்கள் அணிந்து வந்த மோசமான உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லின்சே வோன்

லின்சே வோன்

அகாடமி விருது விழாவான ஆஸ்கர் விருது விழாவிற்கு அணிந்து வந்த மோசமான உடைகளுள் ஒன்று தான் லின்சே வோன் அணிந்து வந்த கருப்பு நிற உடை. இந்த உடை பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், ஆஸ்கர் போன்ற பெரிய விழாவிற்கு இப்படிப்பட்ட உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வருவது நல்ல தோற்றத்தைக் கொடுக்காது.

சால்மா ஹாயக்

சால்மா ஹாயக்

சால்மா ஹாயக் மின்னும் ஊதா நிற பல அடுக்குகள் மற்றும் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் சுருக்கங்களைக் கொண்டதோடு, வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்ட மணிகள் தொங்குவது, கேவலமாக இருந்தது எனலாம். இம்மாதிரியான உடைகளை ஆஸ்கருக்கு தேர்ந்தெடுத்து அணிந்து வருபவர்களுக்கு, ஃபேஷன் சென்ஸ் இல்லை என்று தான் கூற வேண்டும்.

பிளான்கா பிளான்கோ

பிளான்கா பிளான்கோ

நடிகை பிளான்கா பிளான்கோ, கடந்த வருடம் அணிந்து வந்த உடையால் மாபெரும் சங்கடத்திற்கு உள்ளானார். இந்த வருடம் அணிந்து வந்த சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த டீப்-லோ நெக் கொண்ட உடை, அவருக்கு இருக்கும் பரந்த மனதை நன்கு வெளிக்காட்டியது, அவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

ஆண்ட்ரா டே

ஆண்ட்ரா டே

பாடகியான ஆண்ட்ரா டே 2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு இருப்பதிலேயே மிகவும் கேவலமான ஓர் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்துள்ளார் எனலாம். அதுவும் இந்த உடை ஸ்ட்ராப்லெஸ் கொண்டிருப்பதோடு, இவர் ஆஸ்கரின் சிவப்பு கம்பளத்தில் உட்கார்ந்து கொடுத்த போஸ் மோசமானதாக இருந்தது.

செயிண்ட் வின்சன்ட்

செயிண்ட் வின்சன்ட்

பாடகி செயிண்ட் வின்சன்டிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இவர் தனது உடையின் பாதியை அணிந்து வர மறந்து விட்டார் போல் உள்ளது. அதோடு, கருப்பு நிற உடையின் ஒரு பக்கத்தில் ஃபுல் ஸ்லீவ் இருந்தது, அவர் ஏதோ ஒரு கருப்பு நிற பையை மாட்டிக் கொண்டு வந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

எம்மா ஸ்டோன்

எம்மா ஸ்டோன்

எப்போதும் சிறப்பான உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வரும் எம்மா ஸ்டோன், இந்த வருட ஆஸ்கர் விருது விழாவிற்கு மெரூன் நிற சாட்டின் டாப் மற்றும் அடர் நீல நிற பேண்ட் அணிந்து படு கேவலமாக வந்துள்ளார். உங்களுக்கு இவரது தோற்றம் பிடித்துள்ளதா என்ன?

வோய்லா டேவிஸ்

வோய்லா டேவிஸ்

வோய்லா டேவிஸ் 90 ஆவது ஆஸ்கர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத மற்றும் கேவலமான தோற்றத்தைக் கொடுக்கும் பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து, மோசமான ஒரு தோற்றத்தில் வந்துள்ளார் எனலாம்.

தாராஜி பி ஹென்சன்

தாராஜி பி ஹென்சன்

தாராஜி ஆஸ்கர் விருது விழாவிற்கு தனது ஒட்டுமொத்த உடலும் தெரியும்படியான ஒரு படு மோசமான லேஸ் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் அணிந்து வந்த பிரா கூட நன்கு புலப்பட்டது. இதற்கு இவர் எதுவும் அணியாமலேயே வந்திருக்கலாம்.

நடாலியா லாபர்கேடே

நடாலியா லாபர்கேடே

பாடகி நடாலியா க்யூட்டான முகத் தோற்றத்தைக் கொண்டவர். இவர் இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு அணிந்து வந்த கருப்பு நிற உடை இவரை மோசமாக காட்டியது.

ரிதா ஹாயக்

ரிதா ஹாயக்

2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு ரிதா ஹாயக் பலவண்ணங்கள் கலந்த டீப் தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்ததோடு, உடையின் பக்கவாட்டுப் பகுதியில் தனது மார்பகங்கள் தெரியும் படியான மோசமான உடையத் தேர்ந்தெடுத்து அணிந்முது வந்திருந்தார்.

லியா மைக்கல்

லியா மைக்கல்

லியா மைக்கல் கருப்பு நிற தை-ஹை ஸிலிட் மற்றும் டீப் லோ-நெக் கொண்ட கவுனில் 90 ஆவது ஆஸ்கர் விருது விழாவிற்கு வந்திருந்தார். இந்த உடை பார்க்க நன்றாக இருந்தாலும், ஆஸ்கர் விருது விழாவிற்கு அணிந்து வருவதற்கு ஏற்ற உடை அல்ல என்றே கூற வேண்டும்.

டோரா ஸ்டின்சன்

டோரா ஸ்டின்சன்

பாடலாசிரியர் மற்றும் பாடகியான டோரா கருப்பு நிற மின்னும்படியான ஓர் உடை அணிந்து, சாக்கு மூட்டை போல் வந்திருந்தார் எனலாம். உங்களுக்கு பாடகி டோரா ஸ்டின்சன் லுக் பிடித்துள்ளதா?

க்ளாரி கிராண்ட்

க்ளாரி கிராண்ட்

க்ளாரி கிராண்ட் ஏதோ பாட்டிக்கு செல்வது போன்று மின்னும் சில்வர் நிற ஒற்றைத் தோள்பட்டை மற்றும் ஒற்றை ஃபுல் ஸ்லீவ் கொண்ட மற்றும் பல அடுக்குகளையும் கொண்ட கவுன அணிந்து, இடுப்பு பகுதியில் கருப்பு நிற துணியை அணிந்து கேவலமான தோற்றத்தில் வந்திருந்தார்.

பாஸ் வேகா

பாஸ் வேகா

நடிகையான பாஸ் வேகா ஆஸ்கர் விருது விழாற்கு மெரூன் பூப் பிரிண்ட் போடப்பட்ட வெள்ளை நிற உடை அணிந்து வந்திருந்தார். இநத் உடையில் பாஸ் வேகாஸ் எலும்பும் தோலுமாக இருந்தது போன்று காட்சியளித்தது. இதோடு ஏதோ ஒரு எலும்பு கூட நடப்பது போன்றும் இருந்தது எனலாம்.

ஹேலி பென்னட்

ஹேலி பென்னட்

இது நடிகை ஹேலி பென்னட் அணிந்து வந்த மொசுமொசு உடை. இந்த உடையானது ஹால்டர் லேஸ் நெக் மற்றும் இறகுகளைக் கொண்டிருந்தது. இது வித்தியாசமாக இருந்தாலும், மிகப்பெரிய விருது விழாவிற்கு அணிந்து வரக்கூடியவாறான ஒரு உடையல்ல. இந்த உடையால் இவரது உண்மையான அழகு பாழாகித் தான் காட்சியளிக்கிறது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oscars 2018: Worst Dressed Celebrities

It may be Hollywoods most glamorous night, but you wouldnt know it from these very unfortunate fashion blunders...