For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுலையே செய்யக்கூடிய இந்த 2 கிரீம்கள் உங்க சருமத்தை பளபளன்னு மின்ன வைக்குமாம் தெரியுமா?

ரோஸ் வாட்டர் மிகவும் விரும்பப்படும் சரும பராமரிப்பு பொருட்க்களில் ஒன்றாகும். அதன் இயற்கையான டோனிங் பண்புகள் காரணமாக இது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்ல, மணம் கொண்டதாகவும் இருக்கும்.

|

நீங்கள் தூங்கும் முன் தோல், முடி மற்றும் பாதங்களை ஆரோக்கியமாக வைக்க பராமரிப்பு முறையை செய்வது நல்லது. உங்கள் சருமத்திற்கு என்று வரும்போது, அதற்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை. என்றும் இளமையாக இருக்க நீங்க சில சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். அவை, உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மற்றும் பொலிவாக்க உதவும். தோல் பராமரிப்பில் ஈடுபட விரும்புபவராக இருந்தால், வீட்டில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நைட் க்ரீமை முயற்சி செய்யுங்கள். சந்தையில் வாங்கும் கிரீம்களை தவிர்த்துவிட்டு, பளபளப்பான சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

two night creams to pamper your skin before you sleep in tamil

நம் சருமம் தூசி, வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், இரவு நேர தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுவது மிக முக்கியம். இவை உங்கள் சருமத்தை பாதுகாத்து ஒளிரச் செய்ய உதவும். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் சருமத்தை பளபளக்க உதவும் இரண்டு இரவு கிரீம்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலோ வேரா ஜெல் நைட் கிரீம்

அலோ வேரா ஜெல் நைட் கிரீம்

கற்றாழை உங்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இந்த நைட் கிரீம் ஒரே இரவில் உங்கள் சருமத்தை பொலிவாக மாற்றும். ஏனெனில், இந்த கிரீமில் பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்வதோடு, பல்வேறு நன்மைகளை சருமத்திற்கு வழங்குகின்றன. மேலும், இந்த கிரீம் உங்கள் சருமத்தில் உள்ள கறைகளை குறைக்க உதவும் மற்றும் இந்த க்ரீமில் ரோஸ் வாட்டர் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு பளபளப்பு கூடும். இரவில் உங்கள் முகத்தைக் கழுவிய பின் இந்த கிரீமை பயன்படுத்த வேண்டும். நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து வட்ட இயக்கத்தில் குறைந்தது 2 நிமிடங்களுக்கு முகத்தில் மசாஜ் செய்யவும்.

கிரீம் செய்வது எப்படி?

கிரீம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அலோ வேரா ஜெல்- 2 முதல் 3 தேக்கரண்டி

ரோஸ் வாட்டர்- 1 முதல் 2 தேக்கரண்டி

பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி

லாவெண்டர் எண்ணெய்- 7- 8 சொட்டுகள்

செய்முறை

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும். அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது, உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் நைட் கிரீம் தயார். அதை ஒரு கொள்கலனில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.

ரோஸ் வாட்டர் மற்றும் கோகோ பட்டர் நைட் கிரீம்

ரோஸ் வாட்டர் மற்றும் கோகோ பட்டர் நைட் கிரீம்

ரோஸ் வாட்டர் மிகவும் விரும்பப்படும் சரும பராமரிப்பு பொருட்க்களில் ஒன்றாகும். அதன் இயற்கையான டோனிங் பண்புகள் காரணமாக இது புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்ல, மணம் கொண்டதாகவும் இருக்கும். நீங்கள் அதில் கோகோ வெண்ணெயை சேர்க்கும் போது, இந்த நைட் கிரீம் கலவை உங்கள் சருமத்திற்கு சரியான நீரேற்றம் மற்றும் மினியேட்டரைசேஷன் கொடுக்கும். இந்த நைட் கிரீமில் பாதாம் எண்ணெயும் இருப்பதால், இது கரும் புள்ளிகளைக் குறைக்கும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இந்த கிரீமைப் பயன்படுத்துங்கள்.

கிரீம் செய்வது எப்படி?

கிரீம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கோகோ வெண்ணெய் - 2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர்- 2 முதல் 3 தேக்கரண்டி

தேன் -1 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் கோகோ பட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்கவும். பின்னர், இந்த கலவையை ஆறவைக்கவும். ஆறியதும் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இப்போது கிரீம் தயாராக உள்ளது. இந்த கிரீமை கொள்கலனில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். நீங்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதைப் போலவே, தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் இந்த கிரீமை பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

two night creams to pamper your skin before you sleep in tamil

Here we are talking about the two night creams to pamper your skin before you sleep in tamil.
Desktop Bottom Promotion