For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...

பெண்களை விட ஆண்களுக்கு சருமம் சற்று தடிமனாக இருக்கும். எனவே ஆண்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.

|

ஃபேஸ் பேக்குகள் மற்றும் சரும பராமரிப்பு போன்றவை எல்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களும் தங்கள் சருமத்தின் இளமைத்தன்மையையும், நிறத்தையும் பராமரிக்க முகம் மற்றும் சருமத்தை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வறட்சியான சருமம், எண்ணெய் பசைமிக்க சருமம் மற்றும் சென்சிடிவ் சருமத்தைக் கொண்ட ஆண்கள் சற்று கூடுதல் கவனிப்பு கொடுக்க வேண்டும். பெண்களை விட ஆண்களுக்கு சருமம் சற்று தடிமனாக இருக்கும். எனவே ஆண்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.

Homemade Face Pack for Men for Clear And Smooth Skin

கீழே பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிக்கும் ஆண்கள் தங்கள் அழகை மேம்படுத்த உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உங்கள் சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் வெயிலால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்க உதவும். ஆண்கள் வெளியே வெயிலில் அதிகம் சுற்றுவதுடன், சன்ஸ்க்ரீனை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். ஆகவே இவர்களது சருமம் எளிதில் கருமையாகிவிடும். இப்படி கருமையான சருமத்தை மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் வெள்ளையாக்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு ஒரு பௌலில் ஒரு டீபூன் தயிர் மற்றும் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கருமையாக உள்ள கை மற்றும் பிற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.

மில்க் க்ரீம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

மில்க் க்ரீம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

நிறைய ஆண்கள் வறட்சியான சருமத்தை கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான சருமத்தைக் கொண்டவர்கள் சருமத்தில் வெடிப்பு பிரச்சனைகளை சந்திப்பார்க்ள. இதைத் தவிர்க்க ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பௌலில் சிறிது மில்க் க்ரீம் மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்

வேப்பிலை ஃபேஸ் பேக்

முகப்பரு மற்றும் பிம்பிள் அதிகம் கொண்டவர்களுக்கு வேப்பிலை ஃபேஸ் பேக் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்ணபுகள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை போக்குவதோடு, பிம்பிளை வேகமாக போக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை போட்டு வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.

துளசி மற்றும் புதினா ஃபேஸ் பேக்

துளசி மற்றும் புதினா ஃபேஸ் பேக்

இந்த புதினா ஃபேஸ் பேக் அதிக முகப்பருக்களைக் கொண்டவர்களுக்கும், பொலிவிழந்து காணப்படும் சருமத்தினருக்கும் ஏற்றது. குறிப்பாக இது ஆண்களுக்கான ஃபேஸ் பேக். அதற்கு துளசி மற்றும் புதினா பவுடரை பயன்படுத்தலாம் அல்லது துளசி இலைகள் மற்றும் புதினா இலைகளை சம அளவில் எடுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கக்கூடியது. அதற்கு ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

கடலை மாவு ஃபேஸ் பேக்

கடலை மாவு ஃபேஸ் பேக்

கடலை மாவு சரும நிறத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. மேலும் சருமத்திற்கு பொலிவைத் தரும். கடலை மாவை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை ஆண்களும் சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாம். அதற்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் 3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்

தயிர் மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்

முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். தயிர் மற்றும் அரிசி மாவால் ஆன இந்த ஆண்களுக்கான ஃபேஸ் பேக் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. மேலும் இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு அரிசி மாவு மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக முகத்தைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Pack for Men for Clear And Smooth Skin

Here we listed some homemade face packs for men for clear and smooth skin. Read on...
Story first published: Thursday, August 12, 2021, 18:08 [IST]
Desktop Bottom Promotion