Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகத் தொடங்கிவிடும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராக இருந்தால், இந்த கோடை வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.
அதுவும் தினமும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்பதன் மூலம் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சரும நிறமும் மேம்படுவதுடன் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அப்படி சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் ரோஸ் வாட்டர்.

இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் இரவு முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், வெயிலால் முகம் கருமையாவது தடுக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* முல்தானி மெட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
2. காபி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
3. சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* சந்தன பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
