Just In
- 36 min ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 56 min ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
- 2 hrs ago
இந்த ஈஸியான விசித்திர வழிகள் நீங்க நினைப்பதை விட எடையை வேகமாக குறைக்குமாம்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
- 2 hrs ago
உங்க எண்ணெய் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்ற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
பெகாசஸ் உளவு வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு! விசாரணை அறிக்கைக்கு காலஅவகாசம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
- Movies
வொர்க் அவுட்டை நிறுத்த மாட்டேன்... ஷூ கழண்டாலும் வொர்க் அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா ரஜினி!
- Sports
சந்திரா.. அவங்க 2 பேரையும் பாத்துக்கோ.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறங்க.. சேவாக் சொன்ன ஆருடம்
- Finance
ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- Automobiles
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாரத்துக்கு 2 முறை உப்தான் ஃபேஸ் பேக் போடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் தங்கள் அழகை மெருகேற்றுவதற்கு பல்வேறு அழகு சாதன பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். அதற்கேற்ப கடைகளிலும் பல வகையான சரும பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கெமிக்கல் கலந்த அந்த பொருட்கள் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தால், நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சரும அழகை மேம்படுத்த தற்போது உப்தான் ஃபேஸ் பேக் மிகவும் பிரபலமாக உள்ளது. உப்தான் ஃபேஸ் பேக் என்பது பாரம்பரிய அழகு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஃபேஸ் பேக். இந்த மாதிரியான ஃபேஸ் பேக்கை திருமணம், பண்டிகை போன்ற தருணங்களில் முகப் பொலிவை மேம்படுத்த பெண்கள் பலரும் பயன்படுத்துவதுண்டு. இந்த உப்தான் ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம் தெரியுமா? அதை எப்படி தயாரிப்பது மற்றும் உப்தான் ஃபேஸ் பேக்கை போடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

உப்தான் ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் பால் மற்றும் 2 டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

உப்தான் ஃபேஸ் பேக்கின் நன்மைகள்:
முற்றிலும் இயற்கையானது
உப்தான் ஃபேஸ் பேக் கெமிக்கல் இல்லாதது. ஆகவே இதில் எவ்வித பக்கவிளைவும் இருக்காது. அதோடு இதை தினமும் பயன்படுத்தினாலும் சருமத்தில் எவ்வித ஆபத்தும் ஏற்படாது. முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி வேலை செய்யக்கூடியது. எனவே இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் சருமம் பளிச்சென்று ஜொலிக்கும்.

கருமையைப் போக்கும்
இன்று பெரும்பாலானோரது முகத்தின் நிறம் மட்டும் வேறுபட்டு காணப்படும். இதை மறைப்பதற்கு பல பெண்கள் மேக்கப் போடுகிறார்கள். ஆனவே உப்தான் ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும். அதுவும் தினமும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதால், முகத்திற்கு மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் முகம் அழகாக காணப்படும்.

சுத்தமான சருமம்
உப்தான் ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தம் செய்யும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். சருமத்தில் புதிய மற்றும் ஆரோக்கியமான செல்களின் உற்பத்தியை தூண்டும். முக்கியமாக சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

மென்மையான சருமம்
சுட்டெரிக்கும் வெயிலால் சருமம் எளிதில் வறட்சியடையும். எனவே கோடைக்காலத்தில் அதிகளவு நீரைக் குடிப்பதைத் தவிர, சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் ஒருசில செயல்களை மேற்கொள்ள வேண்டும். அதுவும் உப்தான் ஃபேஸ் பேக்கை போட்டால், சருமம் குளிர்ச்சி அடைவதோடு, கோடையில் சருமம் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது
உப்தான் ஃபேஸ் பேக் வறண்ட அல்லது எண்ணெய் பசை என அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. இந்த ஃபேஸ் பேக்கில் பச்சை பால், தண்ணீர் அல்லது தேன் என எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும், நல்ல பலன் கிடைக்கும்.