சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இத ட்ரை பண்ணுங்க!

By: Kripa.Saravanan
Subscribe to Boldsky

சரும பாதுகாப்பிற்காக பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருள் விட்ச் ஹசல் ஆகும். இதில் அழற்சியை எதிர்க்கும் தன்மை உண்டு. மேலும் இது ஒரு சிறந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும்.

ஒரு மருத்துவ செடியிலிருந்து எடுக்கப்பட்ட சாறு தான் விட்ச் ஹஸல். சரும பாதுகாப்பில் இதன் வரலாறு மிக பெரியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த விட்ச் ஹஸல், சரும மற்றும் தலை முடி பராமரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பார்க்கப்படுகிறது.

ways to use witch hazel to clear up your skin fast

முக பருக்களை போக்க இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பருக்களை போக்க மட்டுமல்ல, பருக்களால் உண்டான கரும் புள்ளி அல்லது அதன் சுவடுகளை போக்கி, தெளிவான களங்கமற்ற சருமத்தை பெற விட்ச் ஹஸல் பயன்படுகிறது. விட்ச் ஹசெலின் பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு உலகில் பல பெண்கள் தங்கள் அழகு பராமரிப்பிற்கு இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூலப்பொருளை நீங்களும் பயன்படுத்தி உங்கள் சரும அழகை மேம்படுத்த தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவற்றை முயற்சித்து மேலும் நீங்கள் அழகாகலாம்.

பருக்கள், கரும்புள்ளிகள், சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதம், இப்படி எந்த வித சரும பிரச்சனைக்கும் சரியான தீர்வாக விட்ச் ஹஸல் இருக்கும். முயன்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்கள் மறைவதற்கு :

பருக்கள் மறைவதற்கு :

தேவையான பொருட்கள்:

1/2 ஸ்பூன் விட்ச் ஹஸல்

2 ஸ்பூன் தேன்

3 துளி டீ ட்ரீ எண்ணெய்

எப்படி பயன்படுத்துவது :

ஒரு கிண்ணத்தை எடுத்து, மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் இல்லாத முகத்தை பெறலாம்.

வெண்புள்ளிகள் மறைவதற்கு :

வெண்புள்ளிகள் மறைவதற்கு :

தேவையான பொருட்கள் :

1/2 ஸ்பூன் விட்ச் ஹஸல்

2 ஸ்பூன் கற்றாழை ஜெல்

எப்படி பயன்படுத்துவது :

மேலே கூறிய இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையி வெண்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி வரவும். 10 நிமிடங்கள் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் க்ளென்சர் பயன்படுத்தி கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் விரைவில் வெண்புள்ளிகள் குணமாகும்.

கரும்புள்ளிகள் மறைவதற்கு :

கரும்புள்ளிகள் மறைவதற்கு :

தேவையான பொருட்கள்:

1/2 ஸ்பூன் விட்ச் ஹஸல்

1 ஸ்பூன் தக்காளி விழுது

1 சிட்டிகை பேக்கிங் சோடா

எப்படி பயன்படுத்துவது :

மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் மென்மையாக தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு உங்கள் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

வயது முதிர்வு அறிகுறிகள் மறைவதற்கு :

வயது முதிர்வு அறிகுறிகள் மறைவதற்கு :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் விட்ச் ஹஸல்

முட்டையின் வெள்ளை கரு

1/2 ஸ்பூன் கடலை மாவு

எப்படி பயன்படுத்துவது :

ஒரு முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் , மற்ற பொருட்களை கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். பிறகு இந்த கலவையை உங்கள் முகத்தில் மென்மையாக தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு ஒரு முறை விட்ச் ஹஸல் பயன்படுத்தி இதனை செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம் இளமையாக தோற்றமளிக்கும்.

 சூரிய ஒளியால் ஏற்படும் சேதம் :

சூரிய ஒளியால் ஏற்படும் சேதம் :

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு

1/2 ஸ்பூன் விட்ச் ஹஸல்

1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

எப்படி பயன்படுத்துவது :

மேலே கூறிய மூலப்பொருட்களை ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை சூரிய பாதிப்புக்கு உள்ளான இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தி வந்தால், விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

கொப்பளங்கள் மறைவதற்கு :

கொப்பளங்கள் மறைவதற்கு :

தேவையான பொருட்கள்:

1/2 ஸ்பூன் விட்ச் ஹஸல்

2 ஸ்பூன் யோகர்ட்

எப்படி பயன்படுத்துவது:

மேலே கூறிய மூலபொருட்களை எல்லாம் சேர்த்து கலந்து ஒரு கிண்ணத்தில் போடவும். நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கொப்பளங்கள் இருக்கும் இடத்தில் தடவி, நன்றாக காய விடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வந்தால் விரைவில் கொப்பளங்கள் மறையும்.

விட்ச் ஹஸல் பக்க விளைவுகள் :

விட்ச் ஹஸல் பக்க விளைவுகள் :

பொதுவாக பல பெரியவர்களும், குழந்தைகளும் விட்ச் ஹசெலை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதில்லை.

ஆனால் சென்சிடிவ் சரும அல்லது சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு, ஒவ்வாமை அல்லது சரும எரிச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு, ஆகவே,இதனை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர், சிறிய அளவில், சருமத்தில் பரிசோதனை செய்துவிட்டு பின்பு முகத்திற்கு பயன்படுத்தலாம்.

எந்த ஒரு எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

விட்ச் ஹஸலை வெளிப்புறமாக மட்டும் பயன்படுத்தாமல் , சிலர் பருகவும் செய்கின்றனர். இது முற்றிலும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. கர்ப்பிணிகள் கூட இதனை பயன்படுத்துகின்றனர்.

ஒரு சிறிய அளவு அஜீரணம் அல்லது வயிற்று கோளாறு உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

ஆகவே மிக குறைந்த அளவு, அல்லது மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அதிக அளவு உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால் சில நேரம் கல்லீரலில் பிரச்சனைகள் உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

ways to use witch hazel to clear up your skin fast

ways to use witch hazel to clear up your skin fast
Story first published: Wednesday, January 31, 2018, 8:30 [IST]
Subscribe Newsletter