For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம் பளிச்சினு கண்ணாடி மாதிரி இருக்கறதுக்கு ஆயுர்வேதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலே போதும். பருக்களிலிருந்து வயிற்று வலி வரை உங்களை விடாது. எனவே இந்த மன அழுத்தத்தை குறைத்து உடம்பை சமநிலைக்கு கொண்டு வரும் ஒரு யுக்தியை கையாண்டு வருவது தான் இந்த ஆயுர்வேத

|

நமது மன அழுத்தம் தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலே போதும். பருக்களிலிருந்து வயிற்று வலி வரை உங்களை விடாது. எனவே இந்த மன அழுத்தத்தை குறைத்து உடம்பை சமநிலைக்கு கொண்டு வரும் ஒரு யுக்தியை கையாண்டு வருவது தான் இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது.

இந்த ஆயுர்வேத முறைப்படி ஏராளமான பயன்களை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பெற இயலும். ஆயுர்வேதத்தில் சரும பராமரிப்பை மேற்கொள்வதற்கு முன் சரும வகைகளை நாம் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு சரும வகையை பொருத்தே பராமரிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேத சரும வகைகள்

ஆயுர்வேத சரும வகைகள்

வாத சருமம்

இந்த சரும வகையை பொருத்த வரை பார்ப்பதற்கு கருப்பாக, வறண்டு, முரட்டுத்தனமாக காணப்படும். இந்த சருமத்தை உடையவர்கள் மேனி எப்பொழுதும் குளிர்ச்சியாக, தோல் மெல்லியதாக இருக்கும். இந்த சருமத்தை உடையவர்கள் அரிப்பு, வறட்சி மற்றும் எக்ஸிமா போன்ற தோல் அழற்சியை பெற வாய்ப்புள்ளது.

பித்த சருமம்

பித்த சருமம்

இந்த சருமம் ரெம்ப மென்மையாக, எண்ணெய் பசையுடன் காணப்படும். நல்ல நிறத்துடன் அல்லது வெளிரிய அல்லது வார்ம் நிறத்துடன் காணப்படும். மீடியமான தடிமத்துடன் இருக்கும். இந்த சருமம் உடையவர்கள் பொதுவாக முகப்பரு பிரச்சினை, சரும வடுக்கள் மற்றும் புண்கள் போன்றவற்றை சந்திக்க வாய்ப்புள்ளது.

கபம் சருமம்

கபம் சருமம்

இந்த சருமம் பார்ப்பதற்கு தடினமாக, எண்ணெய் பசையுடன் வெளிரிய நிறத்துடன் காணப்படும். இந்த சருமத்தை தொட்டால் குளிர்ச்சியான தன்மை இருக்கும். இந்த சருமத்தை உடையவர்கள் பெரிய சரும துளைகள், கரும்புள்ளிகள் மற்றும் உடம்பில் நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளை சந்திப்பர்.

சரி வாங்க இப்பொழுது எந்த வகையான சருமத்திற்கு எப்படிப்பட்ட ஆயுர்வேத முறையை பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

டயட் முறை

டயட் முறை

உங்கள் மேனி அழகாக இருக்க முதலில் நல்ல உணவு மற்றும் போதிய தண்ணீர் தேவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே நல்ல உணவும் மற்றும் போதிய நீர் மட்டுமே உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தையும் போஷாக்கையும் கொடுக்கும்.

எனவே சரியான நேரத்தில் நாம் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் வாத, பித்த மற்றும் கபம் தோஷத்தில் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. சாப்பிடும் போது போதிய உணவு, தண்ணீர் மற்றும் காற்று எல்லாம் ஒருங்கே சேர வேண்டும். இல்லையென்றால் உணவே நமது உடலுக்கு நச்சாக மாறிவிடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே சில உணவுகளை சருமயவகையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சில உணவுகள் உங்கள் சருமத்தில் சமநிலையின்மையை ஏற்படுத்தலாம்.

வாத சருமம்

வாத சருமம்

தவிர்க்க வேண்டியவை :

உலர்ந்த பழங்கள், ஆப்பிள், முலாம் பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், மாட்டிறைச்சி, பட்டாணி

சேர்க்க வேண்டியவை :

அவகேடா பழங்கள், இனிப்பு பழங்கள், செர்ரி, ஆரஞ்சு

பித்த சருமம்

பித்த சருமம்

தவிர்க்க வேண்டியவை

தக்காளி, பூண்டு, புளிப்பான பழங்கள், வாழைப்பழம், நிலக்கடலை, காரசாரமான உணவுகள்

சேர்க்க வேண்டியவை

ப்ரெளட்ஸ், க்ரீன் சாலட், சூரிய காந்தி விதைகள், மாம்பழம், பேரிக்காய், ப்ளெம்ஸ், காளான்.

கப சருமம்

கப சருமம்

தவிர்க்க வேண்டியவை

தேங்காய், பேரீச்சம் பழம், அன்னாசி, பால் பொருட்கள்

சேர்க்க வேண்டியவை

மாதுளை பழம், க்ரான்பெர்ரி, பாஸ்மதி அரிசி

வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி

தினசரி நல்ல உடற்பயிற்சி மற்றும் பழக்க வழக்கங்கள் உங்கள் மனதை மட்டுமல்ல உங்கள் சருமத்தையும் அழகாக வைத்துக் கொள்ளும்.

எழுந்திருத்தல்

எழுந்திருத்தல்

ஆயுர்வேத முறைப்படி இரவில் 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும். அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் எழுந்திருக்க வேண்டும். காலை உணவை 8 மணிக்குள் முடித்திருக்க வேண்டும். மதிய வேளைக்குள் மதிய உணவும், சூரியன் மறைவதற்குள் இரவு உணவையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உங்கள் சருமம் சுத்தமாகும்.

யோகா பயிற்சி

யோகா பயிற்சி

சில யோகா பயற்சி வாத, பித்த மற்றும் கப தோஷங்களை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

தலையை நேராக நிமிர்ந்து வைத்தல், முதுகின் பின்புறத்தை வளைத்தல், ஏர் உழு நிலை, பாம்பு நிலை, வெட்டுக் கிளி நிலை மற்றும் தாமரை நிலை போன்ற ஆசனங்கள் இவர்களுக்கு சிறந்தது.

தோள்பட்டை நேராக வைத்தல், அரை சக்கர நிலை, மறைந்த தாமரை நிலை மற்றும் மீன் நிலை போன்ற ஆசனங்கள் சிறந்தது.

படகு நிலை, சிங்க நிலை, பாம் மரம் நிலை, அரை சக்கர நிலை,, முதுகு தண்டுவட சுழற்சி நிலை போன்ற ஆசனங்கள் சிறந்தது.

இந்த சருமம் உடையவர்கள் பருவ நிலை மாறும் போது சீக்கிரம் தோல் வறட்சியை பெறுவார்கள். அதிகமான குளிர் மற்றும் வெப்பம் இரண்டுமே இவர்களுக்கு ஒத்துக்காது. எனவே இந்த சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சரைசர் மற்றும் இயற்கை எண்ணெய் தேவை. சூடான நீரில் குளிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது உங்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கி விடும். சரும pH யை சமநிலையாக்கும் சோப்பை பயன்படுத்த வேண்டும். அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல்

மேலும் உங்கள் சருமத்தை மெறுகேற்ற புதினா இலைகள் மற்றும் தண்ணீர் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இதன் மூலம் சரும துளைகள் திறந்து இரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பித்து விடும். கற்றாழை ஜெல்லை உங்கள் உடம்பில் தடவி வந்தால் கூடுதல் மாய்ஸ்சரைசர் கிடைக்கும். அவகேடா பழமும் வாத சருமத்திற்கு ஏற்றது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் உள்ளன.

இந்த சருமம் உடையவர்கள் ரெம்ப சென்ஸ்டிவ் ஆக இருப்பார்கள். சரும வடுக்களை அடிக்கடி சந்திப்பார்கள். எனவே இவர்கள் கவனமாக சருமத்தை பராமரிக்க வேண்டும். ரோஸ் வாட்டர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்தல், சர்க்கரை ஸ்க்ரப், அப்ளே தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சரைசர் போன்றவை சிறந்தது.

இவர்கள் இயற்கையாகவே எண்ணெய் பசை சருமத்தை பெற்று இருப்பதால் பருக்கள் அடிக்கடி ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். கடல் உப்பு மற்றும் தேன் சேர்ந்த ஸ்க்ரப் சருமத்தை புதுப்பிக்கும். மஞ்சளையும் இதனுடன் சேர்த்து கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Use Ayurveda to Get the Best Skin Ever

Ayurveda can effectively treat skin conditions. It includes certain alterations in diet, life style.Ayurveda can effectively treat skin conditions. It includes certain alterations in diet, life style.
Desktop Bottom Promotion