For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஒரு ஸ்பூன் காபி பொடியை வச்சி எப்படி முகத்தை கலராக்கலாம்?...

  By Manikandan Navaneethan
  |

  நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் பருகுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இவற்றில் காபி 10ம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

  beauty

  பொதுவாக காபி சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது என பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். அது தவறு என்று நாங்கள் கூறவில்லை, அதுமட்டுமல்லாது காபி இன்னும் பல வகைகளில் பயன்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காபி

  காபி

  காபி உங்கள் தோலுக்கு ஒரு சிறந்த நண்பன். 2007ம் ஆண்டில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த கேன்சர் ஃபிரிவென்சன் (புற்றுநோய் தடுப்பு) இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், தினசரி காபினேடட் காபி பருகுவதன் மூலம் கவ்காசியன் பெண்களில் தோல் புற்றுநோயின் தாக்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  கூடுதலாக, 2015ம் ஆண்டில் டெர்மாட்டாலஜி சர்வதேச இதழில் வெளியான ஒரு ஆய்வில், காபி ஸ்கின் போட்டோஏஜிங் ஆவதிலிருந்து பாதுகாக்கிறது. அதாவது சூரிய ஒளியின் காரணமாக குறிப்பாக புற ஊதா கதிர்கள் (யுவி) தோலின் மீது படுவதால் ஏற்படக்கூடிய குமுலேட்டிவ் டெட்ரிட்மெண்டல் எபக்ட்ஸ் (ஸ்கின் சுருக்கங்கள் அல்லது இருண்ட புள்ளிகள் போன்றவை) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  காபி ஃபேஸ் மாஸ்க்

  காபி ஃபேஸ் மாஸ்க்

  மேலும், காபியில் உள்ள பாலிபினால் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உள்ளிட்டவை, தோலின் நிறமாறுதல் நோயின் தாக்கத்தை குறைக்கிறது. மேல்சொன்ன நன்மைகள் காபியை குடிப்பதினால் மட்டுமல்ல காபி கொட்டைகளை அரைத்து அல்லது வடிகட்டி அதனை கொண்டு சிறந்த ஃபேஸ் மாஸ்க் அல்லது ஸ்க்ரப்ஸ் செய்யலாம், அதன் மூலம் பொலிவான முக அழகை பெறலாம். அதிலும் அரைத்த காபியினால் செய்த ஸ்க்ரப்ஸ் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உற்பத்தியாக செய்கிறது.மேலும் காபியில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உங்கள் ஸ்கின் இளமையுடன் மின்னுவதற்கு பெரும் உதவி புரிகிறது.

  காஃபைன் உங்களின் ஸ்கின்னில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி இளமை மற்றும் மென்மையாக இருக்க உதவுகிறது. மேலும் முகம் பஃபினஸ் ஆவதை குறைக்கிறது.

  பிளஸ், காபியை பயன்படுத்தி ஃபேஸியல் ஸ்க்ரப்ஸ் தயாரிப்பதற்கு உங்களுக்கு நீண்ட பட்டியல் தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு எளிதாக வீட்டிலேயே கிடைக்கும் பொருட்கள் போதுமானது, உதாரணத்திற்கு தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் தேங்காய் பால் போன்ற பொருட்களை காபியுடன் சேர்த்து தேவையான ஃபேஸ் மாஸ்கை தயார் செய்யலாம், அது உங்கள் ஸ்கின்னை புதிதாக மற்றும் பளபளவென வைத்துகொள்ள உதவுகிறது.

  காபி மாஸ்க் வகைகள்

  காபி மாஸ்க் வகைகள்

  கீழே நாங்கள் உங்கள் ஸ்கின்னை பராமரிக்க மூன்று விதமான இரண்டு-பொருள்களை கொண்டு நீங்களே செய்யக்கூடிய காபி ஃபேஸ் ஸ்க்ரப்ஸ் கொடுத்துள்ளளோம்.

  1. கிரவுண்ட் காபி & தேங்காய் எண்ணெய்

  2. கிரவுண்ட் காபி & தயிர்

  3. கிரேட் காபி & தேங்காய் பால்

  கிரவுண்ட் காபி & தேங்காய் எண்ணெய்:

  கிரவுண்ட் காபி & தேங்காய் எண்ணெய்:

  இந்த எளிய மற்றும் சுலபமாக செய்யக்கூடிய காபி ஃபேஸ் ஸ்க்ரப் எல்லாவிதமான ஸ்கின் பிரச்சினைகளுக்கும் ஏற்றது. இதில் உள்ள தேங்காய் எண்ணெய் உங்களின் உலர்ந்த சருமத்தையும் ஈரப்படுத்த உதவும்.

  செய்முறை

  ஒரு சிறிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கிரவுண்ட் காபி எடுத்துக்கொள்ளவும்.

  அதில் 2 தேக்கரண்டி உருகிய தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்.

  குறிப்பு: எக்ஸ்ட்ரா-வெர்ஜின் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. ஒரு மென்மையான பசையாக வரும்வரை நன்கு கலக்க வேண்டும்.

  இப்பொழுது நீங்களே வீட்டில் செய்த காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் ஸ்க்ரப் தயார்.

  கிரவுண்ட் காபி & தயிர்:

  கிரவுண்ட் காபி & தயிர்:

  உங்கள் ஸ்கின் பளபளப்பாக மின்னுவதற்கு கிரவுண்ட் காபி மற்றும் தயிர் கலவையை பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த ஃபேஸ் மாஸ்க் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்கு ஏற்றது.

  செய்முறை

  ஒரு சிறிய கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கிரவுண்ட் காஃபி எடுத்துக்கொள்ளவும்..

  அடுத்ததாக, ஒரு தேக்கரண்டி சுத்தமான தயிர் சேர்க்கவும். தயிரில் உள்ள மிகுதியான நீரை வடிகட்டி எடுத்து விடவும், ஏனென்றால் அதிகப்படியான நீர் ஃபேஸ் மாஸ்க்கின் நிலைத்தன்மையை கெடுத்து விடும்.

  பேஸ்ட் மென்மையாக, நன்றாக கட்டிகள் இல்லாதவாறு கலக்கவும், ஒரு வேலை சிறு சிறு கட்டிகள் இருந்தால் அவற்றை நீக்கி விடவும். உங்கள் காபி மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த தயாராக உள்ளது.

  கிரேட் காபி & தேங்காய் பால்:

  கிரேட் காபி & தேங்காய் பால்:

  அதிக ஊட்டச்சத்து கொண்ட தேங்காய் பால் உங்கள் தோலுக்கு சிறந்தது. சருமத்தன்மை மற்றும் கருப்பு புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது.

  ஒரு சிறிய கிண்ணத்தில் 2 அல்லது 3 தேக்கரண்டி கிரவுண்ட் காபி எடுத்துக்கொள்ளவும்.

  அதனுடன் 2 முதல் 3 தேக்கரண்டி தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

  உங்கள் கிரவுண்ட் காபி மற்றும் தேங்காய் பால் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த தயாராக உள்ளது.

  முன்குறிப்புகள்

  முன்குறிப்புகள்

  ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதற்கு முன் அனைத்து விதமான ஒப்பனை, அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நன்கு துடைத்து உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள்.

  ஒரு சுத்தமான ஃபிரஷ் அல்லது உங்கள் கைகளால், உங்கள் ஃபேஸ் முழுவதும் மாஸ்க் பயன்படுத்துங்கள்.

  20 முதல் 30 நிமிடங்கள் உலர வைக்கவும்.

  வட்ட வடிவத்தில் ஃபேஸ் மாஸ்க்கை துடைக்கவும், துடைப்பதற்காக ஈரமான விரல்களைப் பயன்படுத்துங்கள்.

  இறுதியாக, ஃபேஸ் மாஸ்க்கை குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.

  மெதுவாக ஒரு மென்மையான துண்டு கொண்டு துடைத்து எடுக்கவும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Two-Ingredient DIY Homemade Coffee Scrubs for Glowing Skin

  Coffee is very popular worldwide, and today’s metropolitan lives are fueled by coffee.
  Story first published: Monday, May 14, 2018, 12:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more