இவைகள் முகத்தில் பருக்களை வேகமாக பரவச் செய்யும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் அன்றாடம் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதில் சரும வறட்சி, முகப்பரு, பிம்பிள், தழும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி சரும பிரச்சனைகளை சந்திப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அவையாவன, மரபணு பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் காரணிகளான மாசுபாடு, அளவுக்கு அதிகமான வெயில் போன்றவை.

These Will Make Your Acne Worse

நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் அல்லது இயற்கை வைத்தியங்களை பயன்படுத்துவோம். ஆனால் ஒருவருக்கு இருக்கும் சரும பிரச்சனைகள் தீவிரமாவதற்கு நமது கவனக்குறைவு மற்றும் தெரியாமல் செய்யும் சில தவறுகள் தான் காரணம் என்பது தெரியுமா? குறிப்பாக முகத்தில் அதிகமாக பருக்கள் வருவதற்கு நம்மை அறியாமல் செய்யும் சில தவறான விஷயங்கள் தான் காரணம். இந்த தவறான விஷயங்களால் சரும பிரச்சனைகள் தீவிரமாவதோடு, சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமாகிறது.

இக்கட்டுரையில் ஒருவரது முகத்தில் பருக்கள் பரவுவதற்கான சில செயல்கள் எவையென்று பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, உங்களுக்கு பருக்கள் இருந்தால், அந்த தவறுகளை செய்யாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவுக்கு அதிகமாக ஸ்கரப்

அளவுக்கு அதிகமாக ஸ்கரப்

சருமத்தை ஸ்கரப் செய்வது என்பது அத்தியாவசியமான ஒன்று. ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். ஆனால் உங்களுக்கு முகத்தில் பருக்கள் இருந்தால், ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நிலையில் ஸ்கரப் செய்தால், அது பருக்களின் நிலையை மோசமாக்கும். வேண்டுமானால் இந்த மாதிரியான நேரத்தில் மைல்டு ஃபேஸ் வாஷ்ஷைப் பயன்படுத்தலாம்.

தவறான பொருட்களைப் பயன்படுத்துவது

தவறான பொருட்களைப் பயன்படுத்துவது

எப்போதுமே சரும வகைக்கு ஏற்ற பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும். அப்படியே எந்த ஒரு அழகு சாதனப் பொருளை வாங்கினாலும், அதைப் பயன்படுத்தும் முன் கைகளில் தடவுங்கள். அப்படி பயன்படுத்தும் போது எவ்வித அழற்சியும் ஏற்படாமல் இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை அழற்சி ஏற்பட்டால், அந்த பொருளைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் சருமத்தில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனை தீவிரமாகிவிடும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாமல் இருப்பது

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாமல் இருப்பது

எண்ணெய் பசை சருமத்தினர் தான் முகப்பருவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இத்தகையவர்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால், சருமத்தில் எண்ணெய் பசை இன்னும் அதிகரிக்கும் என்று நினைத்து பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், பருக்கள் அதிகமாகாது. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆம், மன அழுத்தம் கூட பருக்களை உண்டாக்கும். ஒருவர் அதிக மன அழுத்தத்திற்கு உட்படும் போது, அவர்களது உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, பருக்களின் அளவை அதிகரிக்கும். எனவே எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கையால் உடைப்பது

கையால் உடைப்பது

முகத்தில் பருக்கள் வந்துவிட்டால், கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அதை கையால் பிய்த்தெறிய பலர் நினைப்பார்கள். ஆனால் இப்படி கையால் பருக்களைத் தொட்டு பிய்க்கும் போது, அதில் உள்ள சீழ் சருமத்தின் மற்ற பகுதிகளில் படிந்து, பரவ ஆரம்பிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் முகத்தில் பருக்கள் வந்தால், அதைக் கண்டுகொள்ளாமல் விடுங்கள். இதனால் விரைவில் பருக்கள் காணாமல் போகும்.

அசுத்தமான செல்போன்

அசுத்தமான செல்போன்

முகத்தில் வியர்வை மற்றும் எண்ணெயின் உற்பத்தி அதிகமாக இருந்து, பருக்களால் அவஸ்தைப்படும் போது, முகத்தின் அருகே போனை வைத்து பேசினால், பருக்கள் உடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எப்போது போனில் பேசும் போதும், அதைத் துடைத்து, பின் காதின் அருகே வைத்து பேசுங்கள். இதனால் பருக்கள் பெரிதாவதைத் தடுக்கலாம்.

முகத்தை கழுவுவது

முகத்தை கழுவுவது

முகத்தை அடிக்கடி கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் சுத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒருவர் அடிக்கடி முகத்தைக் கழுவினால், அது முகத்தில் பருக்களை அதிகமாக்கும். ஏனெனில் முகத்தை ஒருவர் அடிக்கடி கழுவும் போது, சருமத்தில் எண்ணெயின் உற்பத்தி அதிகரித்து, பருக்களை மேலும் அதிகமாக்கும்.

மேக்கப்புடன் தூங்குவது

மேக்கப்புடன் தூங்குவது

நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து களைத்ததில், பலர் வீட்டிற்கு வந்ததும் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்காமல், நேரடியாக தூங்க சென்று விடுவார்கள். பொதுவாக மேக்கப் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தில் எண்ணெய் பசையை அதிகரிக்கும். இந்நிலையில் மேக்கப்பை நீக்காமல் தூங்கினால், அது முகத்தில் பருக்களை அதிகமாக்கும். எனவே தூங்கும் முன் மேக்கப்பை நீக்க மறக்காதீர்கள்.

அசுத்தமான கண்ணாடியை அணிவது

அசுத்தமான கண்ணாடியை அணிவது

கண்ணாடிகளை அணிபவர்கள் எப்போதும் அணியும் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் சருமத்தில் பருக்களை உண்டாக்கும். எப்போதும் உங்கள் சருமத்துடன் விளையாடாதீர்கள். கண்ணாடியைத் துடைத்து அணிவதற்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Will Make Your Acne Worse

We all face several skin-related issues in our everyday life. If youve been feeling like your skin care routine just isnt doing it for you, or you just want to be sure that youre not doing anything that could be backfiring in the long-run, here are some common mistakes many people make when it comes to their skin.