For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய #நச்சுனு 6 டிப்ஸ்

|

முகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளிகள்,ம் கீறல்கள், முக வறட்சி ஆகியவை முதல் இடத்தில் உள்ளன. இது ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். இவற்றில் குறிப்பாக கரும்புள்ளிகள் தனியாகவே நம் முகத்தை கெடுக்க கூடியவை.

கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய #நச்சுனு 6 டிப்ஸ்

ஒரு கரும்புள்ளி இருந்தால் கூட அது தனித்துவமாக தெரியும். உங்களின் முக அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளியை ஒரே வாரத்தில் ஒழிக்க இந்த நச்சுனு 6 டிப்ஸ் போதுமே. அதுவும் இயற்கை பொருட்களை கொண்டு இந்த குறிப்புகளை நாம் பயன்படுத்தலாம். வாங்க, எப்படினு தெரிஞ்சிப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன..?

காரணம் என்ன..?

முகத்தில் வர கூடிய கரும்புள்ளிகளுக்கு முக்கிய காரணியாக சிலவற்றை நாம் சொல்லலாம். சூரிய ஒளி அதிகம் முகத்தில் படுதல், ஹார்மோன் குறைபாடு, கண்ட மாத்திரைகளை எடுத்து கொள்வதால், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றால் பெரும்பாலும் இந்த கரும்புள்ளிகள் நம் முகத்தை கைப்பற்றுகிறது.

டாப் 3 பொருட்கள்

டாப் 3 பொருட்கள்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் மறைய செய்ய இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை...

பால் 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

மஞ்சளுடன் முதலில் பாலை கலந்து கொள்ளவும். அடுத்து எலுமிச்சை சாற்றை இவற்றுடன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி வைத்தியம்

பப்பாளி வைத்தியம்

முகத்தில் உள்ள கருப்புள்ளிகளை விரட்டி அடிக்க பப்பாளி வைத்தியம் நன்கு உதவும். இதற்கு தேவையான பொருட்கள்...

தேன் 1 ஸ்பூன்

பப்பாளி சாறு 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

MOST READ: வயிற்று உப்பசத்தை 2 வாரத்திலே குறைக்க இந்த இலைய சாப்பிட்டாலே போதும்..!

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பப்பாளியை அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடம் சென்று முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து விடும்.

கற்றாழை

கற்றாழை

சரும பிரச்சினைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடிய தன்மை இந்த கற்றாழைக்கு உள்ளது. உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை எளிதாக போக வைக்க இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

அனைவருக்கும் பிடித்தமான உணவு இந்த உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை சாப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளாமல், இதனை அரிந்து முகத்தில் தடவினாலும் நல்ல பலன் தரும். குறிப்பாக கரும்புள்ளிகள், சொர சொரப்பு தன்மை மறைந்து போகும்.

எலுமிச்சையும் தேனும்

எலுமிச்சையும் தேனும்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க, எலுமிச்சையும் தேனும் உதவும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பலன் அதிகம்.

MOST READ: உடல் பாகம் குறித்து அசிங்கமாக கமெண்ட் செய்தவர்களுக்கு செருப்படி ரிப்ளை கொடுத்து நடிகைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies that can help to reduce face spots

Here we listed some natural home remedies that can help yout to reduce face spots.
Story first published: Wednesday, December 19, 2018, 17:48 [IST]
Desktop Bottom Promotion