ஒரே இரவில் கண்களைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருவளையங்களைப் போக்கும் வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று ஏராளமானோர் எதிர்கொள்ளும் ஓரு பிரச்சனை தான் கருவளையங்கள். ஆண், பெண் என இரு பாலினத்தவரும் சந்திக்கும் பிரச்சனையும் இது தான். இதனால் ஒருவரது தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. கருவளையங்களானது முதுமை செயல்முறையினால் தோன்றுவதாகும். ஆனால் இந்த கருவளையங்கள் பல்வேறு காரணங்களினாலும் ஒருவருக்கு வரும். அதில் தூக்கமின்மை, அதிகமாக புகைப்பிடிப்பது, ஆரோக்கியமற்ற டயட்டை மேற்கொள்வது, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Natural Ingredients That Can Help You To Remove Dark Circles

இன்று ஒரே வாரத்தில் அல்லது மாதத்தில் கருவளையங்களை நீக்கும் ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொருட்களில் உள்ள கெமிக்கல்களால், சரும செல்கள் மேலும் தான் பாதிக்கப்படும். ஆனால், இப்படிப்பட்ட கருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்தரமாக போக்க முடியும். அதுவும் நம் வீட்டில் உள்ள சில எளிமையான பொருட்களைக் கொண்டு எளிதில் நீக்கலாம். இக்கட்டுரையில் கருவளையங்களை இயற்கையாகவும், நிரந்தரமாகவும் போக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழை சருமத்தில் வறட்சியைப் போக்கி, சரும செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து, கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதற்கு நற்பதமான கற்றாழை இலையை வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கண்களுக்கு அடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுங்கள்.

புதினா இலைகள்

புதினா இலைகள்

புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க உதவும் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதற்கு ஒரு கையளவு புதினா இலைகளை நீர் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கண்களைச் சுற்றித் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு படுக்கும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் சருமத்தை பிரகாசமாக்கும் ஏஜென்ட்டுகள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்ப வாரத்திற்கு 2-% முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சரும கருமையைப் போக்க உதவும். மேலும் உருளைக்கிழங்கு கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கும். அதற்கு உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துருவி, கண்களைச் சுற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

க்ரீன் டீ பை

க்ரீன் டீ பை

க்ரீன் டீ பை கண்களைச் சுற்றியுள்ள கருமையைக் குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள பண்புகள், கண்களை புத்துணர்ச்சியுடன் மற்றும் கண் பார்வையை பளிச்சென்றும் காட்டும். அதற்கு நீரில் க்ரீன் டீ பைகளைப் போட்டு, ஃப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த பைகளை கண்களின் மீது 15 நிமிடம் வைக்க வேண்டும். அதன் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும்.

பால்

பால்

பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை வறட்சியின்றி போதுமான ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள உதவும். இதனால் இது கருவளையங்களைக் குறைக்க உதவுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கும். அதற்கு குளிர்ந்த பாலை, பஞ்சுருண்டையில் நனைத்து கண்களின் மீது 15 நிமிடம் வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மிகவும் வேகமாக மறையும்.

தேன்

தேன்

தேனில் உள்ள மருத்துவ பண்புகள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சரும பிரச்சனைகளைப் போக்க உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கருவளையங்களைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு தினமும் கண்களைச் சுற்றி தேனைத் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், மிக வேகமாக கருவளையங்கள் போய்விடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

நம் அனைவருக்குமே எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளது என்று தெரியும். இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்பதும் அறிந்ததே. குறிப்பாக எலுமிச்சை சாறு கருவளையங்களை விரைவில் நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளை செய்து வர வேண்டும். முக்கியமாக இந்த செயலுக்குப் பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ingredients That Can Help You To Remove Dark Circles

Here are some natural ingredients that can help you to remove your dark circles. Take a look...
Story first published: Wednesday, March 21, 2018, 18:15 [IST]