For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் சில அற்புத வழிகள்!

இங்கு முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

மிகவும் பொதுவான ஒரு சரும பிரச்சனை தான் முகத்தில் அதிக எண்ணெய் வழிவது. எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களது முகத்தைப் பார்த்தால், முகம் மின்னுவது போன்றும், சரும துளைகள் பார்ப்பதற்கே பெரிதாகவும் காணப்படும். அதிலும் கோடைக்காலம் வந்தால், எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களது சருமத்தில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும்.

மேலும் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களின் சருமத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக தொற்றிக் கொண்டு, வெள்ளைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவரது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதற்கு மரபணுக்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், உணவுகளில் அதிகளவு எண்ணெய் சேர்ப்பது போன்றவை காரணங்களாக இருக்கும்.

How To Get Rid Of Oily Skin From Face

ஹார்மோன் மாற்றங்களால் டீனேஜ் வயதினர் தான் அதிகளவு பருக்களால் பாதிக்கப்படுவார்கள். அதேப் போல் மாதவிடாய் சுழற்சி காலத்திலும், கர்ப்ப காலத்திலும், இறுதி மாதவிடாய் நெருங்கும் போதும், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்தாலும், பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, சருமத்தில் எண்ணெய் வழிய ஆரம்பித்து, பரு பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடும்.

இந்த அழையா விருந்தாளியான எண்ணெய் பசை சருமத்தை, நம் வீட்டில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டு போக்கலாம். கீழே சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இரு சருமத்துளைகளை இறுகச் செய்து, எண்ணெய் பசை சருமத்தில் இருந்து விடுவிக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள்.

முதுமைத் தோற்றத்தை அளிக்கும் சருமத்தை இறுகச் செய்வதற்கு, முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் ஆன்டி-செப்டிக் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இத்தகைய எலுமிச்சை சாற்றினை 1 டீஸ்பூன் எடுத்து, 1 டீஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து, பஞ்சுண்டைப் பயன்படுத்தி, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி

தக்காளி

எண்ணெய் பசை சருமத்தினருக்கு தக்காளி மிகச்சிறப்பான பொருள். இதில் உள்ள பண்புகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்தை பளிச்சென்று மாற்றும். அதற்கு ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி, முகத்தில் நேரடியாக தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையையும் உறிஞ்சும். இதில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள், சருமத்தில் பருக்கள் வராமல் பாதுகாப்பளிக்கும். அதற்கு ஆப்பிளை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வேண்டுமானால் அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. இது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. அதற்கு வெள்ளரிக்காயை வெட்டி, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளரிக்காய் சாற்றில் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவலாம்.

கடலை மாவு

கடலை மாவு

ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, நன்கு காய வைக்க வேண்டும். பின் நீரால் முகத்தைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்நீரை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க, முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், முகம் அழகாகவும், பிரச்சனைகளின்றியும், சுத்தமாக இருக்கும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலில் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தில் வறட்சி ஏற்படாமல் சிறப்பாக தோற்றமளிக்க உதவும். அதற்கு தேங்காய் பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, பின் முகத்தை நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பப்பாளி

பப்பாளி

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் பப்பாளியின் ஒரு துண்டை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி விட்டு, பப்பாளி பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் முகத்தில் கழுவ வேண்டும். அதன் பின் சிறிது நேரம் ஆவி பிடியுங்கள். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.

வேறு சில டிப்ஸ்...

வேறு சில டிப்ஸ்...

* தினமும் ஒரு ஐஸ் கட்டியை ஒரு துணியில் போட்டு, முகத்தை துடைத்து எடுத்து வருவதாலும், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கலாம்.

* ஆரஞ்சு தோலை உலர வைத்து அரைத்து பொடி செய்து, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவதன் மூலமும், அதிகப்படியான எண்ணெய் சுரப்பைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Oily Skin From Face

Want to know how to get rid of oily skin from face? Here are some simple remedies that are easily available at your home.
Story first published: Tuesday, March 13, 2018, 18:31 [IST]
Desktop Bottom Promotion