For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கும் இப்படி இருக்கா... இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க... போயே போயிடும்...

பிட்டத்திலுள்ள பருக்களை எப்படி போக்குவது என்று குழம்பிக் கொண்டிருப்பவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. இயற்கையான பொருள்களைக் கொண்டு எப்படி பிட்டப்பருக்களைப் போக்கலாம் என பார்ப்போம். tags - beauty tips

By Vijaya Kumar
|

கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனி சருமத்தை வெகு ஜாக்கிரதையாகப் பராமரிக்க வேண்டும். பருக்கள். சரும வறட்சி, தோல் வெடிப்பு என ஆயிரம் பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். அதில் மிகவும் நம்மை எரிச்சலடைய வைப்பது என்றால் எண்ணெய் வழிய ஆரம்பிப்பதும் பருக்களும் தான். இதுகூட பரவாயில்லை.

beauty tips

வேர்வையாலும் நாம் அந்த இடத்தை சரியாகப் பராமரிக்காததாலும் பிட்டப்பகுதியில் பருக்கள் வந்துவிடும். அது நமக்கே பார்க்க அருவருப்பாக இருக்கும். ஆனாலும் அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. அந்த கவலையெல்லாம் இனி உங்களுக்கு வேண்டாம். அதற்கும் நம் கிச்சனில் இருக்கிற சில பொருள்களே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிட்ட பருக்கள்

பிட்ட பருக்கள்

மயிர்க்கால்கள் ஸ்டாபிலோகோக்கஸ் ஆரியஸ் (அல்லது ஸ்டாஃப் பாக்டீரியா) மூலம் ஏற்படும் தொற்றால் பிட்ட பருக்கள் ஏற்படுகிறது. மயிர்க்கால்கள் உண்டாகும் இந்த தொற்றுநோய் ஃபோல்குலலிடிஸ் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெப் பாக்டீரியா எப்போதும் தோல் மேற்பரப்பில்தான் இருக்கும், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது. ஆனால் உங்கள் தோலில் ஏதேனும் நுண்ணிய பிளவு இருந்தால்கூட, இந்த பாக்டீரியா உள்ளே நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

Folliculitis புடைப்புகள் அல்லது பிட்ட பருக்கள், முகப்பரு போன்றேதான் தோற்றம் அளிக்கும். அதாவது, அவை வழக்கமாக மையத்தில் வெள்ளை வெட்டு நிறைந்த பம்ப் மூலம் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்.இவை நாள்பட அரிப்பையும் சங்கடத்தையும் தரும் . சில சந்தர்ப்பங்களில் வடுவாகக்கூட மாறலாம். இதை எப்படி சரிசெய்வது?

உப்புக்கரைசல்

உப்புக்கரைசல்

உப்பு ஒரு தேக்கரண்டி இரண்டு கப் சூடான நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு கரைசலில் துணியை நனைத்துப் பிழிந்துகொள்ளவும். பிழிந்த துணியைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் துடைக்கவும். உப்பில் சோடியம் குளோரைடு (antibacterial properties)உள்ளதால் இது பிட்டப் பகுதியில் உள்ள பருக்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில் சில துளிகளுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை நேரடியாக உங்கள் பிட்டத்திலுள்ள பருக்களின் மீது பயன்படுத்துங்கள். பருக்கள் எண்னையை நன்றாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கவும். இவ்வாறு தினசரி 2 முதல் 3 முறை இதை செய்ய வேண்டும். தேயிலை எண்ணையில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் பருவை போக்கும் வேலையை சிறப்பாகச் செய்ய முடிகிறது.

ஒத்தடம்

ஒத்தடம்

ஒரு பாட்டிலில் சூடான தண்ணீர் அல்லது பனிக்கட்டியைப் போட்டு, உங்கள் பிட்டத்தில் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். இதை தினமும் 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். ஒரு சூடான அழுத்தம் பிட்டப் பருக்களில் உண்டாகும். அது பாக்டீரியாவுடன் போராடும். இது வீக்கம் மற்றும் வலியையும் குறைக்க உதவும். இது புதிய பிட்ட பருக்கள் உருவாவதை தடுக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்துக்கொள்ளவேண்டும். அதை சிறிது காட்டனை எடுத்து நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பயன்படுத்தவும். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

தினமும் 2 முதல் 3 முறை இதை செய்யலாம். எலுமிச்சை சாறு, அழற்சியைப் போக்கும் தன்மை கொண்டுள்ளது. இது பிட்ட பரு மற்றும் பரு வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது.

பற்பசை

பற்பசை

நாம் பல் துலக்கப் பயன்படுத்துகிற டூத் பேஸ்ட்டை ஒரு காட்டன் பட்ஸில் எடுத்து பருக்கள் மீது அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிர்நு்த நீரால் கழுவுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இதை செய்யலாம். பற்பசை பேக்கிங் சோடா உள்ளடங்கியிருக்கிறது. இது அதிகப்படியான எண்ணையை நீக்கி பருக்களை உலரச் செய்துவிடும். மேலும் டூத்பேஸ்ட்டுக்கு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை உள்ளது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சில துளிகள் தேங்காய் எண்ணெய் எடுத்து பிட்ட பருக்களின் மீது நேரடியாக அப்ளை செய்யுங்கள். உங்கள் தோல் எண்ணெயை உறுஞ்சும்வரை தடவுங்கள். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் 2 முதல் 3 முறை செய்யவும். ஒரு வாரத்தில் இதை 2 முதல் 3 முறை செய்யலாம். தேங்காய் எண்ணெய் லேசிக் அமிலம் மற்றும் கேப்ரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இவை பாக்டீரியாவை நீக்குவதோடு, பருவால் உண்டாகும் தழும்புகளையும் குறைக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்து 15 முதல்20 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் இதை செய்ய வேண்டும். இது தோல் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, தோல் உடைப்பையும் தடுக்கிறது. ஓட்ஸில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

மஞ்சள் மற்றும் சந்தணம்

மஞ்சள் மற்றும் சந்தணம்

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் சந்தன தூள் ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு தயிர் சேர்த்து ஒரு திக்கான பேஸ்ட்டை செய்து கொள்ளுங்கள்.ஒரு தடிமனான பசையை செய்ய போதுமான தண்ணீர் அல்லது தயிர் அதில் சேர்க்கவும். உங்கள் பிட்டபருக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரடியாக அப்ளை செய்து அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒருநாள் விட்டு நாள் செய்ய வேண்டும். மஞ்சள் மற்றும் சந்தனக் கலவையில் இயற்கையான ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இதனால் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க முடியும். இந்த கலவையானது பருவீக்கத்தையும் சரிசெய்யும்.

பூண்டு

பூண்டு

உரித்த பூண்டை துண்டுகளாக வெட்டி அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். தடவிய பின் 30-50 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். வாரத்திற்கு 4 முதல் 5 முறை நீங்கள் இதை செய்ய வேண்டும். பூண்டில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் குணங்களைக் கொண்டுள்ளது. உங்கள் தோல் மீது உள்ள பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை

கற்றாழை

கற்றாழை

சிறிதளவு கற்றாழை ஜெல் எடுத்து உங்கள் பிட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாகப் பயன்படுத்துங்கள். அது 15 முதல் 20 நிமிடங்கள் உலரட்டும், பிறகு அதை தண்ணீரில் கழுவுங்கள். தினசரி மூன்று முறை நீங்கள் இதை செய்ய வேண்டும். கற்றாழையில் உலா ஆண்டிமைக்ரோபியல், மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருவை விரைவாக குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு தேக்கரண்டியை ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு க்ளாஸ் தண்ணீருடன் சேர்க்கவும், பின்பு நன்கு கலக்கவும். இந்த கரைசலில் ஒரு பருத்தி துணியை ஊற வைத்து, உங்கள் பிட்டபருக்கள் மீது அப்ளை செய்யுங்கள். 20-30 நிமிடங்களுக்கு அதை உலர விட்டுவிட்டு தண்ணீரில் கழுவ வேண்டும். வாரம் 3 முதல் 4 முறை இதை செய்யலாம். ஆப்பிள் சைடர் வினிகரில் எதிர்ப்பு அழற்சி குணங்கள் உள்ளதால் அது பிட்டப்பருவின் தொடர்புடைய அரிப்பு மற்றும் தோல் சிவப்பாக்குதல் ஆகியவற்றைக் குறைக்கும்

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஒரு தேக்கரண்டி எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பசையை பஞ்சை கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக பயன்படுத்தவும். உலர்ந்தபின் குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதை செய்து வர வேண்டும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் தோலின் pH சமநிலையில் வைத்து வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது .

தடுப்புமுறைகள்

தடுப்புமுறைகள்

ஒரு நல்ல ஆன்டி பாக்டீரியா சோப்பை உபயோகிக்கவும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் துணி மிருதுவாக்கிகளை பயன்படுத்த வேண்டாம். ஒரு ஷோ போஸ்ட் பயிற்சி எடுத்து இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதிக மணமுள்ள சோப்புகளைத் தவிர்க்கவும். கிரீம்கள் அல்லது லோஷன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும். உங்கள் உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதற்கு நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty
English summary

How To Get Rid Of Butt Acne Fast

we get down to how to remove acne from the buttock region naturally, and home remedies that grauntee a smoother butt.
Desktop Bottom Promotion