For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...

|

தற்போதைய வாழ்க்கை முறை காரணிகளான உணவுப் பழக்கங்கள், மது அருந்தும் பழக்கம், தூங்கும் நிலை, சுகாதார பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் போன்றவை நேரடியாக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக உண்ணும் உணவுகள் மற்றும் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களைப் பொறுத்து தான் சருமத்தின் ஆரோக்கியமே உள்ளது. ஒருவர் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற்றால், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Drink This Powerful Juice To Get A Glowing Skin

நீங்கள் நீண்ட நாட்கள் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்க விரும்பினால், நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். அதோடு பழச்சாறுகளையும் அதிகம் குடியுங்கள். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். சரி, இப்போது ஒருவரது இளமையைத் தக்க வைத்து, சரும பொலிவை மேம்படுத்த உதவும் அற்புத ஜூஸ் குடித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து சரும செல்களுக்கு பாதுகாப்பளித்து, விரைவில் முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும். மேலும் பீட்ரூட் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, சருமத்திற்கு பொலிவை அளிக்கும்.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு கேரட், சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால், சரும செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது சருமம் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் கனிமச்சத்து உள்ளது. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ளும். ஆகவே முடிந்தால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தில் கொலாஜன் உருவாக்கத்தை ஊக்குவித்து, சருமம் தளர்ந்து சுருக்கமடைவதைத் தாமதப்படுத்த உதவும். முக்கியமாக மாதுளையை ஒருவர் அன்றாடம் சிறிது சாப்பிட்டு வந்தால், உங்கள் முதுமையை நிச்சயம் தள்ளிப் போட முடியும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்பைத் தடுக்க உதவும். அதோடு இந்த பழங்கள் சரும செல்களில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு , வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் சரும சுத்தத்தை மேம்படுத்தும். அதோடு இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடை குறையவும் உதவி புரியும்.

தர்பூசணி

தர்பூசணி

கோடையில் அதிகம் விற்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த பழம் தான் தர்பூசணி. இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் லைகோபைன் என்னும் உட்பொருளும் உள்ளது. இந்த உட்பொருள் ப்ரீ-ராடிக்கல்களை நீர்க்கச் செய்து, புறஊதாக்கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து பாதுகாப்பளிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட்

* கேரட்

* வெள்ளரிக்காய்

* ஆப்பிள்

* மாதுளை

* இஞ்சி

* ஆரஞ்சு

* தர்பூசணி

* புதினா இலைகள்

* எலுமிச்சை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஜூஸரில் ஒரு பெரிய பீட்ரூட் அல்லது 2 சிறிய பீட்ரூட்டை தோலுரித்து துண்டுகளாக்கிப் போட்டு, ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 2 சிறிய கேரட்டை தோலுரித்து போட்டு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து வெள்ளரிக்காயை தோலுரித்துப் போட்டு அரைக்க வேண்டும்.

* அதன் பின் ஒரு பெரிய ஆப்பிளை துண்டுகளாக்கிப் போது சாறு எடுக்க வேண்டும்.

* பின்பு பாதி மாதுளையில் உள்ள முத்துக்களைப் போட்டு சாறு எடுக்க வேண்டும்.

* பின் தோல் நீக்கப்பட்ட ஒரு பெருவிரல் அளவுள்ள இஞ்சியைப் போட்டு சாறு எடுக்க வேண்டும்.

தொடர்ச்சி....

தொடர்ச்சி....

* இறுதியில் 1 பெரிய ஆரஞ்சு பழத்துண்டுகளைப் போட்டு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் மிக்ஸியில் இந்த கலவையை ஊற்றி, அத்துடன் 1/2 கப் தர்பூசணி துண்டுகளைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் ஒரு கையளவு புதினா இலைகளைப் போட்டு, சிறிது ஐஸ் கட்டிகளையும் போட்டு சில நொடிகள் அரைத்தால், ஜூஸ் தயார்.

* இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சரும பொலிவு அதிகரிப்பதோடு, சருமத்தின் இளமைத்தன்மையும் நீண்ட நாட்கள் தக்க வைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drink This Powerful Juice To Get A Glowing Skin

If you wish to rock a glowing, radiant skin that can make you stand out in a crowd, you can include a powerful juice in your daily diet.
Story first published: Thursday, April 5, 2018, 17:31 [IST]
Desktop Bottom Promotion