ஆபிஸ் போகும் முன் இதால முகத்தை துடைச்சா, பளிச்சுன்னு வெள்ளையா தெரிவீங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் அன்றாடம் சருமத்திற்கு கொடுக்கும் ஒரு பொதுவான செயலாக முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவுவோம். பின் துணியால் முகத்தைத் துடைத்த பின், வறட்சியான சருமத்தினராக இருந்தால் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவோம். இச்செயலால் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று காணப்படும். ஆனால் இதற்கு பதிலாக நாம் டோனரைப் பயன்படுத்தினால், சருமம் இன்னும் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும் என்பது தெரியுமா?

வறட்சி, எண்ணெய் பசை மற்றும் சென்சிடிவ் என்று சரும வகைகளில் பல உள்ள. ஒவ்வொரு சருமத்தினரும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் சருமத்தில் அதிக பருக்களால் பாதிக்கப்படலாம், சருமத்துளைகள் திறந்து அசிங்கமாக மேடு பள்ளமான அசிங்கமான சருமத்தால் அவஸ்தைப்படலாம், சருமத்தோல் உரிந்து அசிங்கமாக காட்சியளிக்கலாம், இன்னும் சிலர் சருமத்தில் அரிப்புக்களை சந்திக்கலாம்.

சரும வகைக்கு ஏற்பட டோனர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம். டோனர்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதன் மூலம், சரும ஆரோக்கியம், பொலிவு, இளமைத்தன்மை போன்றவற்றைப் பெறலாம். ஆனால் அனைத்து வகையான டோனர்களும் அனைவருக்குமே பொருந்தாது. இக்கட்டுரையில் சரும வகைக்கு ஏற்றவாறான சில நேச்சுரல் டோனர்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் பசை சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

எண்ணெய் பசை சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

எண்ணெய் பசை அல்லது பருக்களை அதிகம் கொண்டவர்கள், இந்த வகை டோனரைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசைக் குறையும். இந்த டோனர் எண்ணெய் பசை சருமத்தினர் பொதுவாக சந்திக்கும் முகப்பரு பிரச்சனையைக் குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* க்ரீன் டீ - 3/4 கப்

* ஆப்பிள் சீடர் வினிகர் - 1/4 கப்

* டீ-ட்ரீ ஆயில் - சில துளிகள் (விருப்பமிருந்தால்)

* லாவெண்டர் ஆயில் - சில துளிகள் (விருப்பமிருந்தால்)

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* 3/4 கப் கொதிக்கும் நீரில் க்ரீன் டீ பேக்கைப் போட்டு ஊற வைத்து, பின் அந்த நீரை ஒரு ஜாரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது டோனர் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி தயாரித்து வைத்துள்ள டோனரில் நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாட்டிலில் கலவையை ஊற்றி, முகத்தில் தெளித்துக் கொள்ளலாம்.

* பின் முகத்தை நீரால் கழுவாமல், உலர்த்த வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* தயாரித்து வைத்துள்ள இந்த டோனரை ஃப்ரிட்ஜில் வைத்து வந்தால், 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

வறட்சியான சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

வறட்சியான சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் சருமத்தில் தோல் உரிந்து, சருமம் சுருக்கத்துடன் அசிங்கமாக காட்சியளிக்கும். மேலும் இந்த வகை சருமத்தினர் சரும அரிப்பு, சருமத்தில் வெடிப்புக்கள் போன்ற பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள டோனர் விடுதலை அளிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

* கிளிசரின் - 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இப்போது வறட்சியான சருமத்தினருக்கான டோனர் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* தயாரித்து வைத்துள்ள டோனரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஸ்ப்ரே பாட்டில் இல்லாவிட்டால், ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தை துடையுங்கள்.

* இந்த டோனரை தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தும் முன் பயன்படுத்த வேண்டும்.

* இந்த டோனரானது 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

சாதாரண சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

சாதாரண சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்

உங்கள் சருமம் மிகவும் வறட்சியாகவோ அல்லது மிகவும் எண்ணெய் பசையுடனோ இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு இருப்பது சாதாரண சருமம் என்று அர்த்தம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டோனரை சாதாரண சருமத்தினர் பயன்படுத்தினால், சருமம் அதிக வறட்சியடைவதையோ அல்லது அதிக எண்ணெய் பசையுடன் இருப்பதையோ தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* வெள்ளரிக்காய் - 1 மிதமான அளவு

* ஒரு இலையில் இருந்து எடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்

* ரோஸ் ஆயில் அல்லது புதினா ஆயில் - 5 துளிகள்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* வெள்ளரிக்காயை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சாற்றினை ஒரு ஸ்ப்ரோ பாட்டிலில் ஊற்றி, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் 5 துளிகள் ரோஸ் ஆயில் அல்லது புதினா ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* தயாரித்து வைத்துள்ள டோனரை முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும்.

* 5-10 நிமிடம் நன்கு ஊறிய பின்பு, நீரால் கழுவ வேண்டும்.

* தயாரித்து வைக்கப்பட்டுள்ள இந்த டோனரை ஃப்ரிட்ஜில் வைத்து வந்தால், 5-7 நாட்கள் வரை சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Skin Toners for Healthy and Glowing Skin

Here are some recipes for DIY toners for specific skin types, using natural ingredients easily found in your home.
Story first published: Wednesday, April 4, 2018, 10:10 [IST]