க்ரீம் யூஸ் பண்ணாம, ஏழே நாட்களில் நீங்க வெள்ளையாக ஆசைப்படுறீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். ஆனால் சில சமயங்களில் நமது சருமத்தின் நிறமானது பல்வேறு காரணிகளால் கருமையாகின்றன. அதில் மாசடைந்த சுற்றுச்சூழல், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், தூக்கமின்மை, மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த காரணிகளால் நமது சருமத்தின் நிறமானது ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட நிறத்துடன் காணப்படும். குறிப்பாக முகத்தின் நிறம் தான் உடலிலேயே வேறுபட்டு காணப்படும். இப்படி வேறுபட்டு கருமையாக காட்சியளிக்கும் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு க்ரீம்கள் இருந்தாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும ஆரோக்கியம் பாழாகும்.

Brighten Your Skin Within 7 Days

உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா? அப்படியானால் ஐந்து எளிய இயற்கை எளிய வழிகள் உள்ளன. இந்த வழிகளின் மூலம் சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்துக் காட்ட முடியும். அதோடு சருமமும் மென்மையாக பட்டுப் போன்று பொலிவோடு காட்சியளிக்கும். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கும் அந்த இயற்கை வழிகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்

அரிசி மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்

அரிசி மாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும், மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்

* பால் -2-3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அக்கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் ப்ளீச்சிங் பண்புகளும் அடங்கியுள்ளது. எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 1

செய்முறை:

* உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் ஒருமுறை செய்து வர ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். ஏனேனில் இச்செயலால் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது.

பேக்கிங் சோடா ஸ்கரப்

பேக்கிங் சோடா ஸ்கரப்

பேக்கிங் சோடாவில் உள்ள உட்பொருட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சரும பிரச்சனைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, சருமத்தை பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் வெளிக்காட்டும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* பேக்கிங் சோடா - 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர்

செய்முறை:

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்யுங்கள்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இறுதியில் துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், எதிர்பார்த்த மாற்றத்தைக் காணலாம். இருப்பினும் முகப்பரு அதிகம் உள்ளவர்கள் மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்க உதவும் உட்பொருட்கள் நிரம்பியுள்ளது. மேலும் இதில் உள்ள பண்புகள் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் காட்டும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்

* ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை செய்ய நல்ல பலனைக் காணலாம்.

தயிர் ஃபேஸ் பேக்

தயிர் ஃபேஸ் பேக்

தயிர் சருமத்தில் உள்ள அனைத்து விதமான அழுக்குகளையும் நீக்கி, பொலிவான மற்றும் சுத்தமான சருமத்தைப் பெற உதவியாக இருக்கும். தேன் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுங்கள்.

* பின்பு 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் சரும நிறம் வேகமாக மேம்பட்டு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brighten Your Skin Within 7 Days

Bright, clear and flawless skin is every girls dream. In order to have that perfect skin, we tend to do chemical treatments or use various products, which are further harmful. Here are five best easy and instant skin-whitening home remedies that you can try for that brighter, softer and perfect skin.
Story first published: Friday, April 13, 2018, 18:09 [IST]