Latest Updates
-
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க..
மூக்கின் மேல் இப்படி அசிங்கமா இருக்கா? அட இத அப்ளை பண்ணுங்க சரியாகிடும்...
கரும்புள்ளிகளை அவ்வளவு எளிதாக போக்கிட முடியாது. நம்ம என்ன தான் இதற்கு பிரக்தியோகமான பேஸ் வாஷ், பேஸ் பேக்ஸ், பேஸ் மாஸ்க், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தினாலும் எதுவும் பல நேரங்களில் பலனளிப்பதில்லை. எனவே
கரும்புள்ளிகள் வரக் காரணம் சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் ஏற்படும் அடைப்பே காரணமாகும். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளால் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெய்யும் சுற்றுப் புற மாசுக்களும் சேர்ந்து கரும்புள்ளிகளை உருவாக்குகிறது.

இந்த கரும்புள்ளிகளை அவ்வளவு எளிதாக போக்கிட முடியாது. நம்ம என்ன தான் இதற்கு பிரக்தியோகமான பேஸ் வாஷ், பேஸ் பேக்ஸ், பேஸ் மாஸ்க், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தினாலும் எதுவும் பல நேரங்களில் பலனளிப்பதில்லை.அதனால் தான் இதற்கு ஒரு சிறந்த வழிமுறையை நாங்கள் கூற போகிறோம். அதைப் பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

முட்டையின் வெள்ளை கரு
முட்டையோட வெள்ளை கருவில் அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் உள்ளது. இது சருமத்தில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் சருமத்தை புதுப்பிக்கவும், புத்துயிர் கொடுக்கவும் உதவுகிறது.

முட்டை வெள்ளை கரு மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 முட்டை
பயன்படுத்தும் முறை
முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் தேன் கலந்து நன்றாக அடித்து கொள்ளவும். இதை மூக்கில் 2-3 லேயர் வரை தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் பேக்கிங் சோடா
தேவையான பொருட்கள்
1 முட்டை
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
பயன்படுத்தும் முறை
ஒரு பெளலில் பேக்கிங் சோடா, தண்ணீர் மற்றும் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி 5-8 நிமிடங்கள் மசாஜ் செய்து விடவும். 10 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவவும். தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் சர்க்கரை
தேவையான பொருட்கள்
2 முட்டைகள்
1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
பயன்படுத்தும் முறை
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஓட்ஸ்
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்
2 முட்டைகள்
பயன்படுத்தும் முறை
ஒரு பெளலில் கொஞ்சம் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை கொஞ்ச நேரம் சமைக்கவும். பிறகு ஆற வைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். பிறகு உலர்த்த வேண்டும்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்
தேவையான பொருட்கள்
1 முட்டை
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை
ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு பெளலில் வைக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் கொண்டு அதை நன்றாக கலக்கவும். கரும்புள்ளிகள் இருக்கின்ற இடத்தில் இந்த பேஸ்ட்டை 2-3 லேயர் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications