இந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா?...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

குழந்தையை சுமக்கும் அந்த பத்து மாதங்களும் பெண்கள் ஏராளமான உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். முடி இழப்பு, மன அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், பிரசவ கால தழும்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை கடந்து தான் அவர்கள் ஒரு உயிரையே ஈன்றெடுக்கிறார்கள். இதில் பெரும்பாலான குறிப்பாக 50-90 சதவீத பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை பிரசவ தழும்புகள்.

how to cure stretch marks naturally

ஒரு சில பேருக்கு இது மாறி விடும். ஆனால் சில பேருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும். ஏன் அவர்களால் சில ஆடைகளை அணிய கூட முடியாமல் அவதிப்படுவார்கள். அதற்குத் தான் நாங்கள் சில வீட்டு முறைகளை கூறுகிறோம். இதன் மூலம் உங்கள் பிரசவ தழும்புகளை எளிதாக போக்க இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏற்படும் விதம்

ஏற்படும் விதம்

கருப்பையில் குழந்தை வளர வளர குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி தாயின் வயிற்றுப் பகுதி சருமமும் நீட்சியடைகிறது. இதனால் தோலின் இயல்பான நீட்சிக்கு தன்மைக்கு அதிகமாக நீட்சியடையும் போது அதன் டெர்மிஸ் அடுக்கு கிழிந்து வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடுகிறது. இதுவே பிரசவ தழும்புகள் என்றழைக்கப்படுகிறது.

சிகச்சைகள்

சிகச்சைகள்

இதை சரி செய்ய அறுவை சிகிச்சை மற்றும் கெமிக்கல் சிகச்சை முறைகள் உள்ளன. அப்டோமினோப்ளாஸ்டி, லேசர் அறுவை சிகிச்சை, வாஸ்குலார் லேசர் போன்ற முறைகள் உள்ளன. ஆனால் இந்த முறைகள் செலவு அதிகமான முறைகள் மட்டுமல்லாது பக்க விளைவுகளை உண்டாக்கும். எனவே தான் பாதுகாப்பான செலவற்ற முறை என்றால் அது நம் இயற்கை முறைகள் தான். அதைப் பற்றி தான் நாம் பார்க்க உள்ளோம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நமது முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. இவை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்கிறது. கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை எடுத்து தழும்புகள் உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். சருமம் தேங்காய் எண்ணெய்யை உறிஞ்சி கொண்டு அந்த தழும்புகளை குணப்படுத்தி விடும். இதை தினமும் மூன்று முறை செய்து வந்தால் தழும்புகள் இல்லாத வயிற்றை பெறலாம்.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ

விட்டமின் ஈ யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள கொலாஜனை புதுப்பிக்கிறது மேலும் தோலின் நீட்சித் தன்மையை பழைய நிலைக்கு கொண்டு வந்து பிரசவ தழும்பை காணாமல் செய்கிறது. விட்டமின் ஈ அடங்கிய உணவுகளான பாதாம் பருப்பு, சூரிய காந்தி விதைகள், ஆலிவ்ஸ, அவகேடாஸ், கீரைகள் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். விட்டமின் ஈ எண்ணெய் எடுத்து அந்த பகுதியில் மசாஜ் செய்யலாம். விட்டமின் ஈ மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்து கொள்ளலாம்.

உணவுகள்

உணவுகள்

ஏற்கனவே நீங்கள் குழந்தைக்காக ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். இருப்பினும் உங்கள் சருமத்திற்காக சில விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் அடங்கிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி, மன அழுத்தம் குறைய ப்ளூபெர்ரி, கீரைகள் விட்டமின் ஈ அடங்கிய உணவுகள், பிரக்கோலி, அவகேடா, நட்ஸ், விதைகள், ஆர்கானிக் விட்டமின் ஏ அடங்கியபாதிக்கப்பட்ட சரும திசுக்களை சரி செய்ய சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், மிளகாய், மாம்பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

ஓமேகா 3

ஓமேகா 3

ஓமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் சருமம் பொலிவு பெற முட்டை, வால்நட்ஸ், மீன் எண்ணெய், மெர்குரி இல்லாத மீன் வகைகள் , சிப்பிகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதனால் உங்கள் தழும்புகள் மட்டுமல்ல ஆரோக்கியமான குழந்தையையும் ஈன்றெடுக்கலாம்.

விளக்கெண்ணெய் பேக்

விளக்கெண்ணெய் பேக்

அந்த காலத்தில் இருந்தே கருவுற்ற பெண்கள் விளக்கெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளித்து வர சொல்லி இருக்கின்றனர். இதற்கு காரணம் விளக்கெண்ணெய் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகள் இல்லாமல் செய்கிறது. மேலும் சுருக்கங்கள், சரும கோடுகள், சுகப் பிரசவம் போன்றவை ஏற்படவும் வழி வகுக்கிறது.

கருவுற்ற காலத்தில் விளக்கெண்ணெய்யை சருமத்தில் தடவி அந்த பகுதியில் பேக் வைத்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தோ அல்லது சூடான குளியல் மேற்கொண்டோ வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு விளக்கெண்ணெய் ரெம்ப அடர்த்தியாக தென்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு தோலின் நீட்சித் தன்மையை சரி செய்கிறது. கேரியர் ஆயில் கள் ஈரப்பதத்தையும் மிருதுவான தன்மையையும் சருமத்திற்கு கொடுக்கிறது. எஸன்ஷியல் ஆயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கொண்டு பாதிக்கப்பட்ட தோலை குணப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என இவைகளை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கோக்கோ பட்டர்

கோக்கோ பட்டர்

இழந்த சரும செல்களை மீட்டுத் தருகிறது. இதிலுள்ள விட்டமின் ஈ மற்றும் ஏ சருமத்தின் நீட்சித்தன்மையை காத்து வறட்சியை போக்குகிறது. தேவையான அளவு கோக்கோ பட்டர் மற்றும் ஷீ பட்டரை எடுத்து நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளான மார்பு, வயிறு, தொடை போன்ற பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயன்படுத்தி வந்தால் தழும்புகள் மறைந்து போகும். இவற்றில் உள்ள சேச்சுரேட் மற்றும் அன்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் சரும ஈரப்பதத்தை காக்கிறது

முட்டை வெள்ளை கரு

முட்டை வெள்ளை கரு

முட்டையில் உள்ள புரோட்டீன் சத்து சருமத்தை புதுப்பித்து, சுருக்கங்கள், சரும கோடுகள் தழும்புகள் இல்லாமல் செய்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவை வயிறு மற்றும் மார்பு பகுதியில் தினமும் தடவி வந்தால் தழும்புகள் மாயமாக மறைவதோடு வராமலும் தடுக்கும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

பிரசவ கால தழும்பை தடுக்க மற்றொரு எளிய வழி தண்ணீர் குடிக்கும் முறை. ஆமாங்க கருவுற்ற காலத்தில் நமது உடலில் உள்ள ஏராளமான நீர்ச்சத்து குழந்தைக்கு சென்று விடும். இதனால் சருமத்திற்கு போதுமான நீர்ச்சத்து இல்லாமல் தழும்புகள் ஏற்படும். எனவே நீர்ச்சத்தை சரியாக பராமரிப்பது முக்கியம். இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசன் கூற்றுப்படி பெண்கள் ஒரு நாளைக்கு 72 அவுன்ஸ் நீராவது குடிக்க வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப இது மாறுபடும். மேலும் காபி போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம். எனவே காபி பானங்களுக்கு பதிலாக மூலிகை டீ குடியுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

கருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இப்படி உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரும நீட்சித்தன்மையை பழைய நிலைக்கு கொண்டு வந்து தழும்புகள் இல்லாமல் செய்யலாம். ஏனெனில் அந்த பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் புத்துயிர் பெறும். மேலும் கால்களில் ஏற்படும் வீக்கம், வெரிகோஸ் வீன் போன்ற பிரச்சினைகள் வராமல் செய்யலாம். எனவே உங்கள் பிரசவ காலத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்து வரலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

சருமத்தில் போதுமான ஈரப்பதத்தை தந்து பாதிப்படைந்த சருமத்தை குணமாக்குகிறது. கற்றாழை ஜெல்லை எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதனுடன் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் ஏ மாத்திரைகளை சேர்த்து கூட பயன்படுத்தலாம்.

சர்க்கரை ஸ்க்ரப்

சர்க்கரை ஸ்க்ரப்

1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் லெமன் ஜூஸ், பாதாம் எண்ணெய் சேர்த்து பிரசவ தழும்புகள் உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். சருமத்தை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்து விடும்.

 பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அப்படியே இயற்கையாகவே தக்க வைக்கிறது.

கொஞ்சம் பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து தழும்புகள் உள்ள பகுதிகளில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு படுக்கைக்கு முன் இதை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜெலட்டின்

ஜெலட்டின்

ஜெலட்டின் தோலில் கொலாஜனை உருவாக்குகிறது. இதனால் சருமத்திற்கு போதுமான நீட்சித்தன்மையும் கிடைக்கிறது. எனவே உணவில் போதுமான கொலஜன் இருந்தாலே போதும் இதை எளிதாக சரி செய்யலாம். கிரேவி, சாஸ், சூப், கேசரோல்ஸ் போன்றவற்றில் இதை சேர்த்து பயன்படுத்தலாம். ஏன் நமது அரிசி சாதத்தில் கூட சேர்த்து கொள்ளலாம். குழம்பில் பயன்படுத்த வேண்டும். ஜெலட்டின் பவுடர் பானம் அருந்தலாம். சரும நீட்டசித்தன்மை சரியாதல், நல்ல தூக்கம், காயங்கள் குணமாதல், இன்சுலின் சுரப்பு திறன், உடல் நலம் மேம்படுதல், அழற்சி குறைதல், மூட்டு வலி குறைதல்

விட்டமின் சி

விட்டமின் சி

விட்டமின் சி நம் சருமத்திற்கும் உடலுக்கும் மிகவும் முக்கியம். சருமம் வயதாகுவதை தடுத்தல், சரும நீட்டசித்தன்மைக்கு இது முக்கியம். எனவே விட்டமின் சி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் பிரசவ கால தழும்புகளை மறையச் செய்து விடலாம். கொய்யாப்பழம், டர்னிப், பார்சிலி, கீரைகள்,சிவப்பு மிளகாய், பிரக்கோலி, பச்சை மிளகாய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஜிங்க்

ஜிங்க்

ஜிங்க் பற்றாக்குறை கூட உடம்பில் தழும்புகளை ஏற்படுத்தும். தோல் கொலாஜனை கொண்டு நீட்சித்தன்மையுடன் இருக்க ஜிங்க் பெரிதும் உதவுகிறது.

உணவுகள் ஜிங்க் அடங்கிய உணவுகளான கீரைகள், பீன்ஸ், சிப்பிகள், பூசணிக்காய் விதைகள், இறால்கள், ஆளி விதைகள் போன்றவை சாப்பிடலாம். அல்லது ஜிங்க் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து வரலாம்.

பாடி ப்ரஷ்

பாடி ப்ரஷ்

உடலை ப்ரஷ் கொண்டு தேய்த்து குளிக்கும் போது நிணநீர் மண்டலம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிற்கும் இரத்தம் சீராக பாயும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வியர்வை சுரப்பியின் வழியாக வெளியேற்றி சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறி தழும்புகள் இல்லாமல் இருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: pregnancy stretch marks
English summary

16 Natural Home Remedies For Stretch Marks

About 50 to 90 percent of the women are said to develop stretch marks during pregnancy. [1] You may be lucky, with elastic skin that quickly recovers to your normal figure, but more likely than not, your skin will begin to show the tell-tale signs of damage from stretching. So we can use oil massage, exercise, aloe vera jel, petroleum jelly, vitamin E, zinc these are beneficial to pregnancy stretch marks.
Story first published: Monday, April 16, 2018, 17:50 [IST]