முக கருமையைப் போக்க, இந்த துளசி ஃபேஸ் பேக்கை போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மைகள் தான் முக்கிய காரணம். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையும்.

Ways To Include Basil Leaves In Your Skin Care Routine

இக்கட்டுரையில் மருத்துவ குணம் நிறைந்த துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால், சரும பிரச்சனைகள் நீங்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, விடுமுறை நாட்களில் போட்டு, சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி மற்றும் முட்டை வெள்ளைக்கரு

துளசி மற்றும் முட்டை வெள்ளைக்கரு

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அதற்கு ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.

துளசி மற்றும் தயிர்

துளசி மற்றும் தயிர்

இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, இனிமேல் பருக்கள் வராமலும் தடுக்கும். அதற்கு சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.

துளசி ஃபேஸ் வாஷ்

துளசி ஃபேஸ் வாஷ்

10-12 துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதித்த பின் இறக்கி, குளிர வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கும்.

துளசி மற்றும் முல்தானி மெட்டி

துளசி மற்றும் முல்தானி மெட்டி

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்கி, சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி மற்றும் எலுமிச்சை

துளசி மற்றும் எலுமிச்சை

இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. இதற்கு ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.

துளசி மற்றும் சந்தன பவுடர்

துளசி மற்றும் சந்தன பவுடர்

இந்த ஃபேஸ் பேக் சரும பொலிவை அதிகரிக்க உதவும். அதற்கு 10-12 துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சந்தன பொடியை போட்டு, அத்துடன் துளசி நீரை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

துளசி மற்றும் புதினா

துளசி மற்றும் புதினா

ஒரு கையளவு புதினா மற்றும் துளசி இலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடைத்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Include Basil Leaves In Your Skin Care Routine

Read to know how you can include basil leaves in your daily skin care routine. As there are several ways to use basil on skin.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter