சரும நிறப் பிரச்சினையா!! அவற்றிற்கு முடிவு கட்ட உங்களுக்காக 10 சூப்பர் வழிகள் !!

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

சரும நிறப் பிரச்சினை எல்லா வயதில் உள்ளவர்களுக்கும் பொதுவாக வரும் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினை உங்கள் சரும நிறத்தை பாதிப்படையச் செய்வதோடு ஆங்காங்கே நிறத்திட்டுகளையும் ஏற்படுத்தி விடும்.

இதற்கு முக்கிய காரணம் சரும செல்களில் உள்ள மெலனின் நிறமியின் சமநிலை மாறுபடுவதே ஆகும். இந்த சரும திட்டுக்களால் நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் ஒளிந்து வெட்கப்பட்டு இருக்க நேரிடும்.

10 Must-Try Natural Remedies For Skin Pigmentation

எனவே இந்த பிரச்சினைக்கு ஒரு அற்புதமான தீர்வு பாதுகாப்பான இயற்கை முறைகள் ஆகும். ஏனெனில் இயற்கை பொருட்களில் சரும நிறத்தை மாற்றுவதற்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இவைகள் பாதுகாப்பான செலவு குறைந்த முறை ஆகும்.

(குறிப்பு : கீழே குறிப்பிட்டுள்ள முறைகளில் உங்கள் சரும நிறப் பிரச்சினைக்கு தகுந்த முறையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஒரு வேளை தீவிர சரும நிறத்திட்டுகள் இருந்தால் உங்கள் சரும மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 உருளைக்கிழங்கு :

#1 உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கில் அதிகளவில் ஸ்டார்ச் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவைகள் உங்கள் சரும நிறத்தை எளிதில் சரி செய்துவிடும்.

செய்முறை :

1. உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கொண்டு அதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தேய்க்க வேண்டும்.

2. உருளைக்கிழங்கில் ஜூஸ் எடுத்து சருமத்தை கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

 #2 எலுமிச்சை ஜூஸ் :

#2 எலுமிச்சை ஜூஸ் :

எலுமிச்சையில் உள்ள அஸ்ட்ரிஜன்ட் மற்றும் விட்டமின் சி சருமத்தின் pH அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே இதை சருமத்தில் தடவினால் போதும் சரும நிறப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

#3 சந்தனப் பவுடர் :

#3 சந்தனப் பவுடர் :

சந்தனப் பவுடர் சரும நிறப் பிரச்சினையை எளிதாக அகற்ற கூடியது.

செய்முறை :

இந்த பவுடரை தண்ணீரில் கலந்து வாரத்திற்கு 3-4 முறை சருமத்தில் தடவினால் சரும திட்டுக்கள் காணாமல் போகும்

 #4 பாதாம் மற்றும் பால்:

#4 பாதாம் மற்றும் பால்:

பாதாம் சருமத்தை புதுப்பொலிவு செய்யக்கூடிய பொருளாகும். இதில் உள்ள விட்டமின் ஈ சரும நிறப் பிரச்சினையை அதன் வேரிலிருந்து களைகிறது.

செய்முறை :

1 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடரை, 1 டேபிள் ஸ்பூன் பாலுடன் கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் நல்ல பலனை காணலாம்.

#5 கற்றாழை ஜெல் :

#5 கற்றாழை ஜெல் :

கற்றாழை ஒரு சிறந்த சருமத்திற்கான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். எனவே இது எல்லா வகையான சரும நிறப் பிரச்சினைகளை சரி செய்கிறது.

செய்முறை :

இதன் ஜெல் பகுதியை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் சரும நிறத்திட்டுகள் குணமாகி சருமம் புதுப்பொலிவு பெறும்.

#6 அவகேடா :

#6 அவகேடா :

அவகேடாவில் உள்ள விட்டமின்கள் சரும நிறப் பிரச்சினையை தீர்க்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை உபயோகித்தால் நல்ல பலனை காணலாம்.

செய்முறை :

நன்றாக பிசைந்து வைத்த அவகேடா பழத்தை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் சரும நிறம் மாறும்.

#7 ஆரஞ்ச் தோல் பொடி:

#7 ஆரஞ்ச் தோல் பொடி:

ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் ஏற்பட்டுள்ள மெலனின் குறைபாட்டை நீக்குகிறது.

செய்முறை :

ஆரஞ்சை தோலை உரித்து வெயிலில் காயப்போட்டு பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியுடன் லெமன் ஜூஸ் கலந்து தடவினால் சரும நிறத்திட்டுகள் மாயமாகிப் போகும்.

#8 பப்பாளி கூழ் :

#8 பப்பாளி கூழ் :

பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் மெலனின் நிறமியின் அளவை சமநிலைப்படுத்துகின்றன.

செய்முறை :

பப்பாளி பழத்தை கூழாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் சரும நிறம் மாறும்.

#9 மஞ்சள் தூள் :

#9 மஞ்சள் தூள் :

மஞ்சள் தூள் நம் பாரம்பரிய மருத்துவப் பொருளாகும். இது சரும pH மற்றும் மெலனின் அளவை சமநிலைப்படுத்துகிறது.

செய்முறை :

கொஞ்சம் மஞ்சள் தூளுடன் தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் சரும நிறப் பிரச்சினை குணமாகும்.

#10 விட்டமின் ஈ :

#10 விட்டமின் ஈ :

நமது சரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ மிகவும் முக்கியம். எனவே விட்டமின் ஈ ஆயிலை தடவினால் அது சருமத்துவாரங்களுள் சென்று சரும நிறத்திட்டுகளை மாற்றி சருமத்தை மிருதுவாகவும் அழகாகவும் மாற்றுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை முறையில் உங்களுக்கு சிறந்த முறையை பயன்படுத்தி சரும நிறப் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள். இனி நீங்கள் ஒளிவதை மாற்றி உலகத்தை உங்கள் பின்னால் நிற்க வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Must-Try Natural Remedies For Skin Pigmentation

10 Must-Try Natural Remedies For Skin Pigmentation
Story first published: Wednesday, June 14, 2017, 9:00 [IST]