டாட்டுவை அகற்றும்போது உங்க சருமத்தில் என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா? இதப் படிங்க

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

உலகின் பல்வேறு இடங்களில் நடந்த ஆய்வுகளில் மக்கள் டேட்டூவை நீக்குவதற்கு பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.எடுத்துக்காட்டாக அவர்கள் கூறும் சில காரணங்கள்:அவர்களின் வயதைக் காரணம் காட்டுகின்றனர்.

Tattoo removal is very easy method and safe too

ஏனெனில் டேட்டூ போடும்போது வயதின் ஆர்வ கோளாறால் போட்டதாகவும்,இது வாழ்க்கை முழுவதும் வர விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர்.சிலர் நட்பின் காரணமாக நண்பர்களின் பெயர்களை போட்டதாகவும் இப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் அந்த நண்பர்கள் இல்லாததாலும் அவற்றை நீக்க கூறுகின்றனர்.

பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாததாலும் சிலர் பணிகளின் நிமித்தம் வேண்டாம் என்றும் கூறுகின்றனர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேசர் மூலம் டேட்டூவை நீக்குதல்:

லேசர் மூலம் டேட்டூவை நீக்குதல்:

லேசர் மூலம் டேட்டூவை அகற்றுவது என்பது இந்த லேசர் கதிர்கள் டேட்டூ போடுவதற்கு பயன்படும் மை துகள்களை உடைக்கும் சக்தி கொண்டது.உடைந்த மை துகள்கள் நமது உடலால் உறிஞ்ச படுகிறது.

அடர்ந்த நிறங்களான நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் உள்ள டேட்டூஸ்ஸை விட மஞ்சள்,பச்சை மற்றும் பல வண்ணங்களில் உள்ள டேட்டூஸ் நீக்குவது மிகவும் கடினம்.ஏனெனில் அவை லேசர் கதிர்களை உறிஞ்சி வெளியேற்றும் தன்மை உடையது.

சில வண்ண மைகள் அதிகமாக பிரதிபலிக்க கூடிய டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறைந்தது.இதன் விளைவாக அவற்றை நீக்குவது மிகவும் கடினம்.லேசர் மூலம் டேட்டூஸ் எப்படி நீக்க படுகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

ரசாயனத் துகள்கள் :

ரசாயனத் துகள்கள் :

பொதுவாக டேட்டூஸ் ஆயிரக்கணக்கான துகள்களை நமது தோலில் கொண்டுள்ளது.இந்த டேட்டூஸ் செய்ய உபயோகிக்கும் மையில் உள்ள துகள்கள் நிரந்தரமானது.அவற்றை நீக்குவதும் மிகவும் கடினமானது.

இந்த லேசர் சிகிச்சை டேட்டூ மை துகள்களை வெப்பமாக்கி அவற்றை சிறிய சிறிய துகள்களாக மாற்றும்.இந்த நுண் துகள்கள் எளிதாக நமது உடலின் செயல்கள் மூலம் நீக்கப்படும்.

அகற்றும் நேரம் :

அகற்றும் நேரம் :

தேர்ந்தெடுக்கப்பட்ட தெர்மாலிசிஸ் கோட்பாட்டின் படி இந்த லேசர் சிகிச்சை செயல்பட்டு டேட்டூஸை நீக்குகிறது.முழுமையான லேசர் சிகிச்சை 4-5 முறை சிகிச்சையைக் கொண்டுள்ளது.இதற்கு குறைந்தது 4 வாரங்கள் தேவைப் படுகிறது.

துகள் உடைதல் :

துகள் உடைதல் :

ஒவ்வொரு முறை சிகிச்சையின் போதும் டேட்டூ துகள்கள் திறம்பட உடைக்கப்படுகின்றன.ஒரே சிகிச்சையில் அனைத்து துகள்களையும் உடைக்க முடியாது.எனவே தான் 4-5 முறைகள் இந்த சிகிச்சையில் தேவை படுகிறது மற்றும் நமது உடல் இந்த நுண் துகள்களை நீக்க சில வாரங்கள் ஆகும்.காலப்போக்கில் இந்த டேட்டூ நீங்க ஆரம்பித்து விடும்.

R20 முறை:

R20 முறை:

வழக்கமான முறையை விட இந்த புதிய நுட்பான முறை 4-5 முறை லேசர் சிகிச்சையை விட 20 நிமிடங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு அவற்றை நீக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tattoo removal is very easy method and safe too

Tattoo removal is very easy method and safe too. To know in detail, read this article.
Story first published: Wednesday, April 12, 2017, 17:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter