சில் சில் ஐஸ் கட்டி உங்க அழகை எப்படி மெருகூட்டும்ங்கற ட்ரிக் தெரிஞ்சுக்கலாமா?

Posted By:
Subscribe to Boldsky

ஐஸ் கட்டியை கொண்டு நம் சருமத்தை மெருகூட்ட முடியும் என்று தெரியுமா?. சிறுவயதில் ஐஸ்கட்டியை தொட்டாலே பலரும் திட்டுவார்கள். இதனை சாப்பிடக்கூடாது காய்ச்சல் வரும் என்றும் பயமுறுத்துவார்கள்.

அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஐஸ்கட்டியை மீண்டும் எடுங்கள், சாப்பிட அல்ல உங்களது சருமத்தை பாதுக்காக்க ஐஸ்கட்டியை கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம். அவை என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வீட்டில் கிடைக்கும் எளிதாக் கிடைக்கும் பொருளைக்கொண்டு உங்களின் அழகை மெருகூட்ட சூப்பர் டிப்ஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடனடித் தீர்வு :

உடனடித் தீர்வு :

நாள் பூராவும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.

ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள்.பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்வதால்.

மேக்கப் :

மேக்கப் :

வெயில் காலங்களில் மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.

ரத்தவோட்டம் :

ரத்தவோட்டம் :

முகத்திற்கு ஐஸ் பேக் போடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பொலிவாக காணப்படும்.

ஐஸ் பேக் போட முடியாதவர்கள் குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம்.

பரு :

பரு :

இளம்பெண்களின் முக்கிய அழகுத் தேடல்களில் ஒன்று முகத்தில் தோன்றும் பருவை எப்படி விரட்டுவது என்பது தான். இவர்களுக்கு ஐஸ் க்யூப் மிகச்சிறந்த நிவாரணி.

ஐஸ் க்யூபை முகத்தில் தேய்ப்பதால், சருமத்துளைகள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றாது.பருக்களையும் குறைத்திடும்.

எண்ணெய் சருமம் :

எண்ணெய் சருமம் :

அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும்.

இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

சூரிய ஒளி :

சூரிய ஒளி :

சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.

சுருக்கங்கள் :

சுருக்கங்கள் :

கழுத்துப்புகுதியில்,கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்திடுங்கள்.

தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண்கள் :

கண்கள் :

கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி , அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம்.

க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்.

Image Courtesy

வறட்சி :

வறட்சி :

சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சருமத்தில் போதிய அளவு தண்ணீர் சத்து இல்லாமல் வறட்சி ஏற்படுவது தான். இதனைத் தவிர்க்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம்.

இவை முகத்தில் உள்ள திசுக்களை சுறுசுறுப்பாக்கும். அதோடு சருமத்தில் உள்ள டெட் செல்களையும் உடனடியாக நீக்கிடும் என்பதால் சருமம் மிகவும் பொலிவாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Skin care tips using ice cubes

Skin care tips using ice cubes
Story first published: Thursday, September 14, 2017, 15:09 [IST]
Subscribe Newsletter