என்றும் இளமையாக இருக்க ரெட் ஒயின் ஃபேசியல் எப்படி செய்வது? தெரிஞ்சுக்கனுமா? இதப்படிங்க!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நீங்கள் இதுவரைக்கும் ரெட் ஒயின் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் ஆம் என்றால் இங்கே உங்களுக்காக இதுவரை நீங்கள் பயன்படுத்தாத புதிதான ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் கண்டிப்பாக உங்களுக்கு புதிதாகவே இருக்கும். இதை நீங்கள் முயற்சி செய்தால் நீண்ட கால பயன்களும் மற்றும் விரைவாகவும் செய்திட முடியும். இதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்னால் இதன் பயன்களை பார்த்து விடலாம்.

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home

இந்த ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் செய்வதற்கு சமையலறை பொருட்களான ரெட் ஒயின், தேன் மற்றும் தயிர் போன்ற மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த மூன்று பொருட்களும் எளிதில் கிடைக்கக் கூடியவை.

இந்த ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் எல்லா வகையான சருமத்திற்கும், எந்த விதமான காலநிலை க்கும் எந்த நேரத்திற்கும் ஏற்றது.

ரெட் ஒயினில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரண்டு முக்கிய பிரச்சினைகளை சரி செய்கிறது 1) சருமம் வயதாவது 2)பொலிவற்ற சருமம். ரெட் ஒயின் சருமத்தில் உடனடியான மாற்றத்தை கொண்டு வந்து இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கிறது.

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!!

இந்த ரெட் ஒயின் பேஸ் மாஸ்க்கை எத்தனை தடவை வேண்டுமானாலும் வாரத்திற்கு ஒரு முறை என்றோ செய்து கொள்ளலாம். நீங்கள் ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு செல்லும் போது முந்தைய நாள் இந்த பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பகல் நேரத்தில் இதை பயன்படுத்தும் போது நல்ல ஒரு ஜொலிப்பை கொடுக்கும். இதை முகத்திற்கு மட்டுமில்லாமல் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home

இதில் உள்ள பொருட்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் புதுப் பொலிவை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் போதல்லாம் முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்தில் உள்ள எண்ணெய்யை போக்குவதில் சிறந்தது. சரும துவாரங்கள் அடைப்பு, முகப்பரு, கரும் புள்ளிகள், சரும பாதிப்பு, தழும்புகள் போன்றவற்றிற்கும் சிறந்தது.

ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் ரெசிபி

இப்பொழுது இதன் பயன்கள் நன்றாக புரிந்து இருக்கும். இப்பொழுது இதன் ரெசிபியை வீட்டிலேயே செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

1 சிறிய கப் ஆர்கானிக் ரெட் ஒயின்

2 டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் தேன்

1/2 சிறிய கப் ஹங் தயிர்

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home

செய்முறை

1. ஒரு நன்றாக உலர்ந்த கண்ணாடி கிண்ணத்தில் தயிரை ஊற்றி முட்டை கலக்கும் கருவியை கொண்டு பஞ்சு போன்று மென்மையாக வருமாதிரி அடித்து கலந்து கொள்ள வேண்டும்.

2. பிறகு தேனை ஸ்பூன் கொண்டு அதனுடன் கலக்க வேண்டும் .

3. பிறகு நன்றாக தேன் கலந்த உடன் கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக ரெட் ஒயினை சேர்க்க வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் முட்டை அடிக்கும் கருவி கொண்டு கலந்து கலவையானது மென்மையான பிங்க் கலர் பேஸ் மாஸ்க் காக மாற வேண்டும்.

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home

4. பிரஷ்யை பயன்படுத்தி இந்த பேஸ் மாஸ்க்கை முகத்தில் பூசி விட வேண்டும். கைகளாலும் தடவலாம் எந்த பாதிப்பும் ஏற்படாது.

5. அப்படியே மெதுவாக மசாஜ் செய்து உங்கள் முகம் மற்றும் உடலில் தேவைப்படும் இடங்களில் தடவி அப்படியே வைக்க வேண்டும்.

6. 20-30 நிமிடங்கள் கழித்து நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு கொஞ்சம் டோனர் அல்லது மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும்

அதிகமான புத்துணர்ச்சி வேண்டும் என்று நினைத்தால் ரெட் ஒயின் பேஸ் மாஸ்க்கை பிரிட்ஜில் வைத்து எடுத்து கூட பயன்படுத்தலாம்

என்னங்க இந்த ரெட் ஒயின் பேஸ் மாஸ்க் ரெசிபியை பயன்படுத்தி உங்கள் அழகை செதுக்குங்கள்.

English summary

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home

Recipe For Red Wine Face Mask With Other Kitchen Products At Home
Story first published: Wednesday, July 12, 2017, 20:00 [IST]