நெற்றியில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்க சில டிப்ஸ்

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

கொழுத்தும் வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் முகத்தை விட நெற்றி பகுதி அதிகமாக கருமையாகிவிடுகிறது. முகம் ஒரு நிறமாகவும், நெற்றி ஒரு நிறமாகவும் இருந்தால் நன்றாக இருக்காது. உங்களது நெற்றியில் உள்ள கருமையை போக்க இங்கே சில இயற்கையான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கடலைமாவு மற்றும் மஞ்சள்

1. கடலைமாவு மற்றும் மஞ்சள்

ஒரு ஸ்பூன் கடலைமாவுடன், சிறிதளவு மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து நெற்றியில் அப்ளை செய்தால், நெற்றியில் உள்ள இறந்த செல்கள் போய்விடும்.

2. உருளைக்கிழங்கு

2. உருளைக்கிழங்கு

மசித்த உருளைக்கிழங்கை நெற்றியில் கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நெற்றி பளிச்சிடும்.

3. இளநீர் மற்றும் சந்தன பவுடர்

3. இளநீர் மற்றும் சந்தன பவுடர்

இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் மூன்று அல்லது 4 முறை செய்யலாம்.

4. மோர் மற்றும் ஒட்ஸ்

4. மோர் மற்றும் ஒட்ஸ்

மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.

5. தக்காளி

5. தக்காளி

இரவு தூங்கும் முன், தக்காளி பேஸ்டை நெற்றில் தடவி காலையில் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமைக்கு மிகச்சிறந்த பலனை தரும்.

6. அன்னாச்சிப்பழம் மற்றும் தேன்

6. அன்னாச்சிப்பழம் மற்றும் தேன்

அன்னாச்சிப்பழம் மற்றும் தேன் கலந்த கலவை நெற்றியில் உள்ள கருமையை போக்க வல்லது. இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு, நெற்றி முழுவதும் தடவ வேண்டும்.

15 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் அற்புதமான பலனை தரும்.

7. பப்பாளி பேஸ்ட்

7. பப்பாளி பேஸ்ட்

பப்பாளி இறந்த செல்களை நீக்க மிகவும் சிறந்தது. தோலுக்கு நிறத்தை தரக்கூடியது. புதிய பப்பாளி பேஸ்ட்டை நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

8. ஆரஞ்ச் ஜீஸ்

8. ஆரஞ்ச் ஜீஸ்

ஆரஞ்ச் ஜீஸ் தோலை வெண்மையாக்கும் சக்தி படைத்தது. இதை நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை நீங்கி, முகம் பொழிவு பெரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways To Get Rid Of Forehead Tan

here are the some to get rid of forehead tan
Story first published: Monday, May 15, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter