ஒவ்வொரு நாளும் பிரகாசமாக இருக்க வேண்டுமா? அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சருமம் இருக்கும். சருமத்திற்கு ஏற்ற பொருட்களைக் கொண்டு பராமரித்தால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் நம்மில் பலருக்கு எந்த பொருட்கள் எந்த சருமத்தினருக்கு ஏற்றது என தெரியாது.

Natural Ingredients That Can Be Used On All Types Of Skin

ஆகவே அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் படியான சில இயற்கைப் பொருட்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து அழகாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால், இது சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கும், சரும வறட்சியைத் தடுக்கும், பருக்களைப் போக்கும், பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரையும் அனைவரும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பருக்கள் முதல் காயங்கள் வரை அனைத்தையும் சரிசெய்ய உதவியாக இருக்கும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

தேன்

தேன்

தேனில் வைட்டமின்கள், புரோட்டீன், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அமிலங்கள் உள்ளது. இந்த தேனும் அனைவரும் பயன்படுத்த ஏற்ற ஒரு பொருள். தினமும் தேனை முகத்திற்கு தடவி வந்தால், அது பருக்கள் வருவதை தடுப்பதோடு, சரும வறட்சியையும் தடுக்கும்.

கல் உப்பு

கல் உப்பு

கல் உப்பையும் அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். இதில் கால்சியம், மக்னீசியம் போன்றவை ஏராளமாக உள்ளது. சருமத்தை ஈரப்பசையுடனும், சருமத்தின் pH அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். அதிலும் கல் உப்பை தேன் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தினமும் சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்ள உதவும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள், சருமத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கும். மேலும் இந்த அற்புத பழம் கரும்புள்ளிகள், காயங்கள், முதுமைப் புள்ளிகள் போன்றவற்றைப் போக்கும். ஆகவே அழகாக ஜொலிக்க அடிக்கடி அவகேடோ பழ ஃபேஸ் பேக்கைப் போடுங்கள்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், சருமத்திற்கு மிகவும் நல்லது. இது முகப்பருக்களைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் அழற்சியையும் போக்கும். ஆகவே தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ingredients That Can Be Used On All Types Of Skin

Here is the list of natural ingredients that can be used for all skin types, take a look.
Story first published: Monday, May 8, 2017, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter