50 வயதை 20 வயதாக மாற்றும் லேட்டஸ் ப்யூட்டி தெரபி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களா?

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஒவ்வொரு புது வருடமும் நமக்கான பியூட்டி உலகம் புதுப்புது பியூட்டி முறைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும். பியூட்டி இன்டஸ்ட்ரீஸ் ஒவ்வொரு வருடமும் நிறைய வாடிக்கையாளர்களுக்ககாக புதுப்புது பியூட்டி சிகிச்சை முறைகளை கொண்டு வருகின்றனர்.

Latest Beauty Treatments That You Should Try In 2017

தங்களுடைய பியூட்டி எக்ஸ்பட்டின் கடின உழைப்பு மற்றும் முயற்சியால் கொண்டு வருகின்றனர். இருப்பினும் கீழே 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பியூட்டி சிகிச்சை முறைகள் மற்ற முறைகளை விட மிகவும் சிறந்தது. அதை பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைபாடற்ற டைமண்ட் பேஷியல் :

குறைபாடற்ற டைமண்ட் பேஷியல் :

இந்த வகை பேஷியல் மார்க்கெட்டில் புதிதாக வந்ததில்லை. ஏற்கனவே இது மிகவும் புகழ் பெற்ற முறையாகும். அழகுத் தொழிலில் இந்த முறை பொலிவான ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவுகிறது.

இது உங்கள் முகத்தில் உள்ள குறைபாடுகளை களைவதால் குறைபாடற்ற டைமண்ட் பேஷியல் என்றும் கூறுவர். 60 நிமிடங்கள் செய்தால் போதும் உங்கள் முகம் பொலிவாக மாறிவிடும். இந்த பேஷியல் வறண்ட, சென்ஸ்டிவ் சருமம் அல்லது இரண்டும் சேர்ந்த சருமத்திற்கு உகந்தது.

மேலும் சூரியனால் பாதிக்கப்பட்ட சருமத்தையும் சரி செய்கிறது. 20-30 வயது பெண்கள் இதன் மூலம் நிறைய நன்மைகளை பெறலாம். இந்த முறை மைக்ரோ டெர்மிராசன் முறையை விட சிறந்தது.

 மைக்ரோ நீடிலிங் :

மைக்ரோ நீடிலிங் :

உங்கள் முகத்தில் ஏற்படும் சரும துளைகள் மற்றும் சிறிய துவாரங்களுக்கு இந்த முறை சிறந்தது. இது ஒரு வலியான முறை ஆகும். இதில் கைக்கு அடக்கமான ஊசியை போன்ற கருவியை கொண்டு உங்கள் முகத்தில் உள்ள சரும துளைகள் மற்றும் துவாரங்களை சரி செய்வர்.

இந்த முறை உங்கள் சரும குறைபாடுகளை நீக்கி ஆரோக்கியமான சருமம் கிடைக்க செய்யும். மேலும் சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்தின் மீட்சித் தன்மையை அதிகரிக்கிறது. இதில் ஸ்பெஷல் க்ரீம் மற்றும் லோசன் பயன்படுத்துவதால் அது சருமத்திற்குள் ஊடுருவி நல்ல பலனை தருகிறது.

ஃபில்லிரினா :

ஃபில்லிரினா :

இந்த முறை புதிதாக வந்துள்ள பியூட்டி ட்ரெண்ட் ஆகும். சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை சரி பண்ணுகிறது. சருமத்தில் உள்ள அழற்சிகளை இதில் உள்ள ஹையலுரோனிக் அமிலம் சரி பண்ணுகிறது.

மேலும் இந்த அமிலம் சருமத்துளைகளுக்குள் ஊடுருவி பொலிவான குறைபாடற்ற ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது. அதிக அளவு அமிலம் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.

ஆனால் இந்த முறை மற்றவற்றுடன் ஒப்பிட்டால் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் கண்டிப்பாக இந்த முறை உங்களுக்கு நல்ல பலனை தரும்.

மைக்ரோ பிளாடிங் :

மைக்ரோ பிளாடிங் :

உங்களுக்கு மிகவும் நேர்த்தியான ஒல்லியான புருவம் இல்லை என்றால் இந்த முறை சிறந்தது. இது மிகவும் எளிதான முறை. உங்கள் புருவத்தை அழகாகவும் அடர்த்தியாகவும் காட்ட உதவுகிறது.

உங்கள் புருவத்திற்கு நிறைய துல்லியமான திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது உங்களுக்கு சிறந்த முறையாக இருக்கும். இதன் மூலம் பியூட்டி எக்ஸ்பட் உங்களுக்கு அழகான புருவத்தை வரைந்து அதை இயற்கையான தோற்றத்தை தருமாறு செய்து விடுவர்.

உங்கள் சருமம் மற்றும் முடியின் தன்மையை பொருத்து 6-10 வாரம் சிகிச்சை மேற்கொள்வர். இந்த சிகிச்சையோடு உங்கள் புருவ பாரமரிப்பும் இருந்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

ப்ரண்ட்லி பாக்டீரியா பொருட்கள் :

ப்ரண்ட்லி பாக்டீரியா பொருட்கள் :

இந்த பொருட்கள் மார்க்கெட்டில் புதிதாக வந்துள்ள பியூட்டி ட்ரெண்ட் ஆகும். நிறைய பொருட்கள் பாக்டீரியா அடிப்படையில் வந்துள்ளது. ஆராய்ச்சியில் பாக்டீரியாவில் லேக்டோ பேசியல்ஸ் மற்றும் பிஃவிடோ பாக்டீரியம் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவைகள் சரும பராமரிப்புக்கு நிறைய நன்மைகளையும் தருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை பயன்படுத்தினால் குறைபாடற்ற மற்றும் ஈரப்பதம் வாய்ந்த அழகான சருமம் கிடைக்கும். க்ளீனர்ஸ், டோனர்ஸ், க்ரீம்கள் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்றவை ப்ரண்ட்லி பாக்டீரியா பொருட்களை கொண்டு தற்போது மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.

 பேஸ் பிரஷிங்

பேஸ் பிரஷிங்

பழைய முறை அழகுத் தொழிலில் ட்ரை பிரஷிங் பயன்படுத்தப்பட்டது. இது இறந்த செல்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் இவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமம் தூய்மையாக ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

ஆனால் புதிய முறையில் ஸ்கின் ப்ரண்ட்லி பேஸ் பிரஷ் பயன்படுத்துகின்றனர். இது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கிறது. மேலும் சரும செல்லுலேட்டை குறைக்கிறது. ஸ்க்ரப் மற்றும் எக்ஸ்ப்லேட்டர்ஸ் பயன்படுத்துவதை விட இந்த முறை சிறந்தது என்று பியூட்டி எக்ஸ்பட் கூறுகின்றனர்.

இந்த 2017 இன் அற்புதமான முறைகளை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Latest Beauty Treatments That You Should Try In 2017

Latest Beauty Treatments That You Should Try In 2017
Story first published: Tuesday, June 27, 2017, 15:00 [IST]
Subscribe Newsletter