கீழே எறியும் டீ பேக்குளை கொண்டு சருமத்தின் அழகை மீட்பது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

டீ சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்று..! காலையில் எழும் போதே டீ குடித்துவிட்டு தான் படுக்கையை விட்டு எழுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம். க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இதய நோய் மற்றும் கேன்சரில் இருந்து நம்மை பாதுகாக்க உதவியாக இருக்கிறது.

இந்த க்ரீன் டீ ஆனது நமது அழகை பாதுகாக்க எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சூரிய ஒளி பாதிப்புகள்

1. சூரிய ஒளி பாதிப்புகள்

சூரியனில் இருந்து வெளியாகும் யுவி கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூரியக்கதிர்களால் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை ஆகியவை ஏற்படும். இதற்கு க்ரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகள் சரியாகும்.

2. பருக்கள்

2. பருக்கள்

முகப்பருக்கள் வலியை தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு க்ரீம் உடன் 2 % மட்டும் க்ரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் மாயமாக மறையும்.

3. பூச்சிக்கடிகள்

3. பூச்சிக்கடிகள்

டீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை ஆற்ற உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

4. எண்ணெய் பசை சருமம்

4. எண்ணெய் பசை சருமம்

க்ரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறைக்கப்படுகிறது. இதனால் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

5. கருவளையம்

5. கருவளையம்

இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, சுறுசுறுப்பாக உணர முடியும்.

6. நிறத்தை மேம்படுத்த

6. நிறத்தை மேம்படுத்த

க்ரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த டோனராகவும் பயன்படுகிறது.

7. செடிகளுக்கு

7. செடிகளுக்கு

பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use tea bags for skin

How to use tea bags for skin
Story first published: Wednesday, September 13, 2017, 13:20 [IST]
Subscribe Newsletter