Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?
அழகான முகம் பெற பார்லருக்கு செல்ல வேண்டியதில்லை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் பாட்டி வைத்தியத்தை செய்து பாருங்கள். பலன் தந்ததா என எங்களிடம் பகிருங்கள்.
சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும்.

துறுதுறுப்பாகவோ, அல்லது ஜொலிப்பதாகவோ ஏதோ ஒரு அழகு கூடும்.
இதற்கு நிச்சயம் வெளிப்பூச்சுகளால் அழகை அதிகரிக்க செய்ய முடியாது. பின் என்ன செய்ய வேண்டும்? இன்னும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகத் தசை பயிற்சி :
முகத் தசைகளை சுருக்கி, விரித்து, இடம், வலம் என வாயை இழுத்து செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் பாயும். சுருக்கங்கள் வராது. முகத்தில் புதிதாய் அழகு தென்படும்.

கேரட் :
தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் காலையில் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.

காலையில் சாப்பிட வேண்டிய பழம் :
தினமும் காலையில் பழம் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள்,பப்பாளீ சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் ஒரு தேஜஸ் உருவாவதை பார்ப்பீர்கள்.

சுத்தமான சருமம் :
கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மருக்கள், கருமை எல்லாம் மறைந்து போய் முகம் பளபளக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை :
முல்தானி மட்டியுடன் பனீர் மற்றும் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் பூசினால் முகச் சதை தொங்காது. இளமையான சுருக்கமில்லா முகம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
