தொடைகளில் உருவாகும் செல்லுலைட்டை போக்க வீட்டிலேயே அருமையான சிகிச்சை!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பெண்கள் உடலில் மாற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மாற்றம் வரும். இப்படி பருவம் அடைந்த பின்னர் ஏற்படும் பல மாற்றங்களில் ஒன்று செல்லுலைட் என்னும் கொழுப்பு கட்டிகள் தோன்றுவது. எல்லா பெண்களுக்கும் இது தோன்றுவது கிடையாது. ஒரு சிலர் மட்டுமே இந்த கொழுப்பு கட்டிகளின் பாதிப்பை உணர்ந்திருப்பர். வயது அதிகமாகும்போது இந்த கொழுப்பு கட்டிகள் அதிகரிக்கும்.

பொதுவாக தொடை, வயிறு மற்றும் பின்புறத்தில் சிறு சிறு திட்டுகளாக இவை தோன்றும். குறிப்பிட்ட அளவு செல்லுலைட் உடலில் இருப்பது எந்த கெடுதலும் செய்யாது. ஆனால் அகிகமாக இருக்கும்போது தோலில் சுருக்கம் மற்றும் குழிகள் தோன்றி சரும அழகை பாதிக்கும். இதனை முற்றிலும் போக்க முடியாது . என்றாலும் சிறு சிறு தீர்வுகள் மூலம் இதன் அளவை குறைக்கலாம்.

Home remedies to get rid of cellulite

செல்லுலைட்டின் உருவாக்கம்:

செல்லுலைட் என்றால் என்ன? சருமத்திற்குள் இருக்கும் கொழுப்பு அணுக்கள் துருத்திக்கொண்டு மேல் தோலில் எழும்போது இவை உருவாகின்றன. மேல் தோலின் திசுக்கள் உருவாக்கத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உள்ளதால் பெண்களுக்கு மட்டுமே இந்த கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம்:

காரணம்:

குறைந்த இரத்த ஓட்டம் அல்லது குறைந்த நிணநீர் ஓட்டம் இத்தகைய கட்டிகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில பழக்க வழக்கங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். அவை,

அதிகமாக காபி அருந்துவது

ஆரோக்கியமற்ற எடை குறைப்பு

நீர்வறட்சி

நீண்ட நேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது

ஹார்மோன் சமச்சீரின்மை

செல்லுலைட்டை குறைக்க சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிரஷ் :

பிரஷ் :

பிரஷ் பயன்படுத்தி கட்டிகளை குறைப்பது என்பது மிகவும் பழைய முறையாகும். மென்மையான நார் கொண்ட பிரஷை எடுத்து கட்டிகள் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அந்த பகுதியில் அதிகரிக்கும். மேலும் இறந்த செல்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறும். புதிய செல்கள் உற்பத்தியாகும்.

செய்முறை:

சருமத்தை நன்றாக கழுவி முழுவதும் காய விடவும்.

ப்ரஷ் கொண்டு கீழிருந்து மேலாக மென்மையாக தேய்க்கவும்.

10 நிமிடங்கள் தொடர்ந்து தேய்க்கவும்.

10 நிமிடம் கழித்து வெந்நீர் கொண்டு குளிக்கவும். இதனால் இறந்த செல்கள் வெளியேறும்.

காபி தூள் :

காபி தூள் :

காபி குடிப்பதால் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை காபி கொட்டைகள் கொன்டே போக்க முடியும். காபி கொட்டையில் தோல் உரிக்கும் தன்மை உள்ளது இதன் சிறப்பு.

செய்முறை:

4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் சிறிதளவு சர்க்கரை சேர்க்கவும்.

½ கப் காபி தூளை இதனுடன் சேர்க்கவும்.

இந்த பேஸ்டை சருமத்தில் சூழல் வடிவில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

5 நிமிடங்கள் தொடர்ந்து இதனை செய்து பின்பு வெந்நீரால் கழுவவும்.

வாரத்திற்கு 2-3 முறை இதனை செய்யலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகர் :

சரும பொலிவிற்கும், பருக்களை போக்கவும் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் செலுலைட்டை போக்கவும் பயன்படுகிறது. இது இறந்த செல்களை போக்கி , இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

செய்முறை :

1 ஸ்பூன் தேனுடன் 4 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும்.

இந்த பேஸ்டை சருமத்தில் தடவவும்.

5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தவுடன் வெந்நீரில் கழுவவும்.

வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

வாழ்வியல் மாற்றங்கள் :

வாழ்வியல் மாற்றங்கள் :

போலியான எடை குறைப்பு விளம்பரங்களை நம்பி அந்த வழிமுறையை பின்பற்றாமல் இருப்பது நல்லது.

தினமும் 2-2.5 லிட்டர் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்தோடு வைத்திருத்தல் அவசியம்.

நீண்ட நேரம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் இரத்த ஓட்டம் குறையும். ஆகவே வீட்டில் வேலை இல்லாவிட்டாலும் உடற் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளையும் குறிப்புகளையும் ஆரோக்கியமான முறையில் பின்பற்றினால் செல்லுலைட்கள் விரைவில் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to get rid of cellulite

Home remedies to get rid of cellulite
Story first published: Tuesday, October 10, 2017, 8:00 [IST]