முகப்பருக்களுக்கு குட்பை சொல்லனும்னா வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடிச்சு பாருங்க!!

Written By:
Subscribe to Boldsky

நமது சரும துவாரங்களில் அழுக்குகள் இறந்த செலக்ள் தங்கி வெளிவராம தொற்று உண்டாகி அதனால் ஏற்படுவதுதான் முகப்பருக்கள். சரும அழகையே கெடுத்துவிடும். இதனால் பலரும் அவதிக்குளாவதுண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்த பலவித குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் சரிவராமலிருக்கிறதா? உங்க சாய்ஸ் இதுவா கூட இருக்கலாம்.

Herbal steaming to cure Acne and blackheads

ஹெர்பல் ஆவி என்பது மிகவும் பவர்ஃபுல்லான வழிதான். சூடான நீரை விட அதன் ஆவிக்கு சருமத்தை ஊடுடுவும் சக்தியுண்டு. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளும் எளிய வழிதான் இங்கே சொல்லப்பட்டிருகிறது. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

மஞ்சள் பொடி

பட்டை பொடி

க்ரீன் டீ

நீர்

ஸ்டெப்-1 :

ஸ்டெப்-1 :

இந்த ஆவி பிடிப்பதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவி பருத்தித் துணியால் துடைத்திடுங்கள். பின் 1 லிட்டர் அளவு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப்-2 :

ஸ்டெப்-2 :

பின் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, 4 பட்டை மற்றும் 1 ஸ்பூன் அளவு க்ரீன் டீயை கொதிக்கும் நீரில் போட வேண்டும்.

 ஸ்டெப்-3 :

ஸ்டெப்-3 :

பின்னர் அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூனால் நீரை நன்றாக கலக்குங்கள். இந்த நீர் நிறம் மாறி அடர் மஞ்சள் நிறத்திற்கு வரும்.

ஸ்டெப் - 4 :

ஸ்டெப் - 4 :

இந்த நீரில் முகத்தை நன்றாக மூடி ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதால் சரும துவாரங்கள் திறந்து இந்த மூலிகைகளின் குணங்கள் ஊடுருவும்.

சருமத்தின் தன்மை :

சருமத்தின் தன்மை :

உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் 8 நிமிடங்கள் போதுமானது. எண்ணெய் சருமம் என்றால் 15-20 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். சூடு ஆறியதென்றால் திரும்பவும் சூடு வைத்து ஆவி பிடிக்கலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

மஞ்சள் கிருமிகளின் மீது செயல்புரிந்து அவற்றை அழிக்கும். க்ரீன் டீ சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். தேவையான போஷாக்கை தரும். பட்டை முகப்பரு, மற்றும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். இந்த மூன்றையும் நீரில் கலந்து ஆவியாக பிடித்தால் அற்புத பலன்களை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal steaming to cure Acne and blackheads

Herbal steaming to cure Acne and blackheads
Story first published: Friday, May 26, 2017, 8:00 [IST]