Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
என்றும் 16 ஆக ஜொலிக்கனுமா? இதோ இயற்கை வைத்தியங்கள்!!
இளமையான முகம் கிடைக்க இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். இவை உடனடியாக பலன்களை தருவதோடு பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும்.
குளிர்காலத்தில் முகம் வறண்டு விடுவது இயற்கைதான் . ஆனால் அதனை அப்படியே விட்டு விட்டால் எளிதில் சுருக்கங்கள் ஆரம்பித்துவிடும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையால்தான் இந்த பிரச்சனை. நெகிழ்வுத்த்னமை குறையும்போது மடிப்பு போல் சுருக்கங்கள் வரத் தொடங்கும்.
முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் வயதாவதை கூட்டும். இளமையை விரைவில் போக்கச் செய்யும். இளமையான முகத்திற்கு இங்கு சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்களை உபயோகித்து பாருங்கள். உடனடியாக உங்களுக்கு பலன்களை தரும்.

டிப்ஸ் - 1
வெந்தயக்கீரை
பாசிப்பருப்பு
சீரகம்
செய்முறை:
வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். முகம் பளபளப்பாக மாறும்.

டிப்ஸ்2
வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

டிப்ஸ் :3
ஒரு ஸ்பூன் தேனுடன் கேரட் சாறு கலந்து முகத்தில் த்டவி வந்தால் சுருக்கங்கள் வேகமாக மறைந்துவிடும்.

டிப்ஸ் :4
ஒரு வாழைப் பழத்தை மசித்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் சுருக்கங்கள் மறைவதோடு, முகமும் மென்மையாகும்.

டிப்ஸ் : 5
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.



Click it and Unblock the Notifications
