For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளபளக்கும் சருமம் வேண்டுமா? அப்போ இதெல்லாம் சாப்டாதீங்க

சருமம் என்றும் இளமையாக இருக்கவும், சுருக்கமில்லாமல் பொலிவாக இருக்கவும் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Aashika Natesan
|

நம் உடல் கண்ணாடி போன்றது. உள்ளுருப்புகளின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் இடமாக தோல் இருக்கிறது.

ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை நமக்கு உணரச்செய்யும் நம் தோல் பகுதி பளபளப்பாக இருக்க பல பூச்சுக்களை வெளியில் பூசினாலும் நாம் உட்கொள்ளும் உணவிலும் அதேயளவு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் முகம் தங்கம் மாதிரி ஜொலிக்க வைக்க ஆசையா? ஒரு அற்புத மாஸ்க் ட்ரை பண்ணிப் பாருங்க!!

தோல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லெட் :

சாக்லெட் :

பல வண்ணங்களில் இனிப்புச்சுவையூட்டும் சாக்லெட் வகைகளை தவிர்த்திடுங்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும்

நிறமூட்டிகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அலர்ஜி கூட ஏற்ப்படலாம்.

தானியங்கள் :

தானியங்கள் :

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தானியங்கள் வேண்டாம். பெரும்பாலானவற்றில்

சர்க்கரை அளவே அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நன்று.

 பால் :

பால் :

பால் குடிப்பது ஆரோக்கியமானது என்றாலும் தோலுக்கு எதிரியாகத்தான் இருக்கிறது. பால் குடிப்பதால் தோலுக்கு தேவையான பிசுபிசுப்பதன்மை உற்பத்தியாவது குறைகிறதாம்.

எண்ணையில் பொரித்த உணவுகள் :

எண்ணையில் பொரித்த உணவுகள் :

அளவுக்கு அதிகமாக எண்ணெய் தோலில் சேர்ந்து அது வெளியேற முடியாததால் முகப்பரு பிரச்சனைகள் ஏற்படும், தொடர்ந்து சாப்பிட்டால் முகச்சுருக்கம் ஏற்பப்ட்ட இளைமையிலேயே வயதான தோற்றம் உண்டாகும்.

இனிப்புச்சுவையூட்டும் ஜூஸ் :

இனிப்புச்சுவையூட்டும் ஜூஸ் :

தோலில் ரத்த ஓட்டம் அதிகரிக்க நார்ச்சத்து அதிகம் தேவை. சர்க்கரை கலந்து இனிப்புச் சுவையூட்டி குடிக்கப்படும் ஜூஸ்களில் நார்ச்சத்து முற்றிலும் இருக்காது. அதை விட பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானம் மற்றும் சோடாக்களில் அதிகளவிலான சுகர் மட்டுமேயிருப்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.

காபி :

காபி :

காபி குடித்தே பசியாறுபவர்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். அதிகப்படியாக காபி குடித்தால் தண்ணீர் தாகம் ஏற்படாது.

தோலுக்கு தேவையான தண்ணீர் இல்லாது தோல் வறட்சியடைந்து அரிப்பு ஏற்படும். உடலில் சேரும் கேபைன் முகத்துவாரங்களை அடைத்துவிடும். இதனால் பரு உண்டாகும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that to be avoided to keep younger skin

Foods that to be avoided to keep younger skin
Story first published: Thursday, July 6, 2017, 12:06 [IST]
Desktop Bottom Promotion