வெயிலில் கருமை அடையாமல் காப்பதற்கான 5 அருமையான பாட்டி வைத்தியங்கள்

Written By:
Subscribe to Boldsky

வெயிலும் அதிக குளிரும் சருமத்திற்கான எதிரிகள். வெயிலினால் முகம் கருக்கும். அலர்ஜி உண்டாகும். பருக்கள் அதிகரிக்கும். வெண்பருக்கள், சொரசொரப்பு அதிக எண்ணெய் வழிதல் என பலப் பிரச்சனைகள் வெயில் காலத்தில் காண்போம்.

இதில் மிக முக்கியமாக வெயில் படும் இடங்கள் எல்லாம் கருத்து டல்லாகிவிடும். இந்த கடுஞ்சூரியனிடமிருந்து உங்களை பாதுகாக்க இங்கே சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு -1:

குறிப்பு -1:

உடல் சிவப்பாக மாறவும், அழகு கூடவும் வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

குறிப்பு-2 :

குறிப்பு-2 :

திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.

திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

குறிப்பு-3 :

குறிப்பு-3 :

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

குறிப்பு -4:

குறிப்பு -4:

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

குறிப்பு -5:

குறிப்பு -5:

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective remedies to cure sun tan and preventive tips

Effective remedies to cure sun tan and preventive tips
Story first published: Saturday, April 8, 2017, 8:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter