குதிகால் வெடிப்பை மறையச் செய்யும் உபயோகமான 5 குறிப்புகள்

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

உங்கள் உள்ளங்கை சருமம் மற்றும் கால்களின் பாதங்களில் எண்ணெய் சுரப்பது குறைவடைய தொடங்குகிறது. அப்படி என்றால், உங்கள் உள்ளங்கை மற்றும் கால்கள் வறண்டு போகிறது என அர்த்தமாகும்.

ஒரு சிலர், தங்களுடைய தினசரி வாழ்வில், கைகள் மற்றும் கால்களில் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். ஏனென்றால், அவர்கள்...தங்களுடைய கால்கள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துகொள்ளவும், மிருதுவாக வைத்துகொள்ளவும், ஈரப்பதத்துடன் வைத்துகொள்ளவும் மறந்து, பிரச்சனை வந்த பிறகே திடுக்கிட்டு திரும்பி பார்க்கின்றனர்.

DIY Solutions For Cracked Heels,

இதனால்... வரண்டுபோகும் நம் சருமம், வெடிப்புற்றதாகவும், அசிங்கமான தோல்களுடனும், குதிகால்களில் வெடிப்புடனும் இருக்கும். வெடித்த தோலை நாம் அகற்றினாலும்., இரத்தம் வழிய தொடங்குகிறது. அதனால், உப்பு, வினிகர் அல்லது வாய்க் கழுவிகள் (Mouth Wash) பயன்பாடு கொண்டு பரிந்துரை செய்யப்படும் தீர்வுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

இப்பொழுது, வீட்டிலே தயாரிக்கப்படும் ஐந்து DIY தீர்வுகள் மூலம், குதிகாலில் ஏற்படும் வெடிப்பை எப்படி சரி செய்வது? என்றும்...இதனால் உண்டாகும் வெட்டுக்களை குணப்படுத்தும் வழிமுறையையும், கால்களில் ஈரப்பதத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்றும், பார்ப்பதன் மூலம், உங்களுடைய கால்களை மீண்டும் அழகாக பெற்று மகிழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேனுடன் சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீர்:

தேனுடன் சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீர்:

ஒரு கலனை எடுத்துகொண்டு, அதில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள்.

அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து...உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து...அதாவது தண்ணீர் சூடு குறையும் வரை வைத்திருந்து எடுத்து, நிவாரணத்தை பெற்று மகிழுங்கள்.

தேனில் இருக்கும் நுண்ணுயிரிகள், உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.

வைட்டமின் E எண்ணெய் மசாஜ்:

வைட்டமின் E எண்ணெய் மசாஜ்:

இரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து (மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டாக நறுக்கிகொண்டு...உங்கள் கால்களில் அந்த எண்ணெய்யை கொண்டு தடவிகொள்ள வேண்டும்.

உங்கள் குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும். அந்த எண்ணெய்யை, உங்கள் சருமம் எளிதாக உறிஞ்சிவிட...சிறிது நேரத்துக்கு வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்துகொண்டு இரவு முழுக்க ஓய்வில் இருக்க வேண்டும்.

 தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில்...தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும்.

சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள ஒருபோதும் மறவாதீர்கள். இதனால், மஞ்சளும், அந்த எண்ணெய் கலவையும் உங்கள் கால்களில் இருக்கும் சாக்ஸின் சணல் நூலில் (கைத்தறி) படுவதில்லை.

சூடான ஆலிவ் ஆயில்

சூடான ஆலிவ் ஆயில்

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெய்யை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்லதோர் பலனை அது உங்களுக்கு தருகிறது.

பால் க்ரீம் மற்றும் வாழைப்பழம்:

பால் க்ரீம் மற்றும் வாழைப்பழம்:

ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்துகொள்ளுங்கள். அதனை நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு அந்த சூப்பர் ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வாருங்கள்.

இந்த DIY தீர்வுகள், இன்றே உங்களை முயற்சி செய்ய சொல்ல, குதிகால் வெடிப்புக்கு குட்பை சொல்லி தூர விரட்ட நீங்கள் ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Solutions For Cracked Heels,

DIY Solutions For Cracked Heels
Story first published: Saturday, June 24, 2017, 15:40 [IST]