சுருக்கங்களை தடுத்து, சருமத்திற்கு புதுப் பொலிவு தரும் வெள்ளரிக்காய் ஸ்ப்ரே!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

மழை இல்லாத செப்டம்பர், அக்டோபர் நாட்களும் வெயில் நாட்களாகவே இருக்கின்றன. அந்த அளவுக்கு அதிகமான வெப்பத்தின் தாக்கம் இந்த நாட்களில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நாட்களில் நமது சருமத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

மதிய வெயிலை சந்தித்து வீடு திரும்பும் போது முகம் சோர்வாக நிறமிழந்து காணப்படுகிறது. அதிலிருந்து சருமத்தை மீட்டெடுக்க சில அழகு குறிப்புகள் அவசியமாகிறது. இன்றைய சந்தைகளில் பல நவீன அழகு சாதனங்கள் விற்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றின் விலை வாங்குபவரை வியப்பில் ஆழ்த்தும். விளைவு, மோசமாகவே இருக்கும்.

DIY cucumber Spray to rejuvenate your skin

இதில் பயன் படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், ஆல்கஹால் போன்றவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. சென்சிடிவ் சருமமாக இருக்கும் பட்சத்தில் சருமம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நம்மை அழகு செய்து கொள்வது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய்கள், தேங்காய் நீர், ரோஸ் வாட்டர், பழங்கள், செடிகள் போன்றவை அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களாகும்.

வீட்டில் தயாரிக்க கூடிய பேஷியல் மிஸ்ட் மற்றும் ஸ்பிரே பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நன்மைகள் :

நன்மைகள் :

சருமத்தை மென்மையாக்குவதில் வெள்ளரிக்காய் நல்ல பலனை தருகிறது. வெள்ளரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம், பந்தொதெனிக் அமிலம், வைட்டமின் கே, ரெட்டினொல், சிலிக்கா போன்றவை உள்ளன.

சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதத்தை வெள்ளரிக்காய் குணப்படுத்துகிறது. சருமத்தை ஈர்ப்பதத்தோடு வைக்க உதவுகிறது. மெலனின் உற்பத்தியை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெள்ளரிக்காயின் குளிர்ச்சி தன்மை சருமத்தை மென்மையாக்க பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை :

எலுமிச்சை :

எலுமிச்சை, சருமத்தில் இறந்த செல்களை நீக்கி , பருக்களை தடுக்கிறது. அதிகமான எண்ணெய்த்தன்மையை குறைக்கிறது. எலுமிச்சை சருமத்தை புதுப்பித்து மென்மையாக்குகிறது.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை சருமத்திற்கு மென்மை அளித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது.

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் :

சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்கவும், புத்துணர்ச்சி கொடுக்கவும், ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. அதிக எண்ணெய்பசையை குறைத்து, சரியான pH அளவை நிர்வகிக்க உதவுகிறது. சருமத்தை பொலிவாக்க இது மிகவும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை மிஸ்ட் :

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை மிஸ்ட் :

வெள்ளரிக்காய் ஜூஸ் - 1 வெள்ளரிக்காயில் இருந்து எடுத்தது

லெமன் ஜூஸ் - ½ எலுமிச்சை பழத்தில் இருந்து பிழிந்தது

கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

 • வெள்ளரிக்காயை வெட்டி அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் வடிகட்டி அதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
 • இதில் எலுமிச்சை சாறை கலக்கவும்.
 • இதில் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை தடவவும்.
 • 1 ஸ்பூன் ரோஸ் வாட்டரை இதில் சேர்க்கவும்.
 • எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும்.
 • இதனை முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.
 • ஒரு நாளைக்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தோல் மிஸ்ட் :

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தோல் மிஸ்ட் :

இந்த மிஸ்ட் வறண்ட சருமத்திற்கு ஏற்றது. வெள்ளரிக்காய் சருமத்தை மென்மையாக்குகிறது. எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறது.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - ½ துண்டு

எலுமிச்சை தோல் - 2

 செய்முறை:

செய்முறை:

 • 1 ஜாரில் வெந்நீரை ஊற்றவும். அதில் அரிந்த வெள்ளரிக்காய் துண்டுகள் மற்றும் எலுமிச்சை தோலை போடவும்.
 • இரவு முழுதும் அப்படியே மூடி வைக்கவும்.
 • மறு நாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும்.
 • நன்றாக குலுக்கி விட்டு, தினமும் பயன்படுத்தவும்.
 • தேவைப்பட்டால் இதில் வைட்டமின் ஈ எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் புதினா மிஸ்ட் :

வெள்ளரிக்காய் மற்றும் புதினா மிஸ்ட் :

வெள்ளரிக்காய் சருமத்தின் pH அளவை நிர்வகிக்கிறது. புதினாவில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இது சரும திசுக்களை வலிமை படுத்தி எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை அதிக எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி, வயது முதிர்வை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - ½ துண்டு

புதினா - ½ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ¼ ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

 • வெள்ளரிக்காயை நறுக்கி, சாறு எடுத்துக் கொள்ளவும்.
 • புதினாவையும் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
 • வெள்ளரிக்காய் சாறில் எலுமிச்சை சாறையும், புதினா சாறையும் சேர்க்கவும்.
 • எல்லாவற்றையும் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும்.
 • இந்த சாறை முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவவும்.
 • நல்ல பலன்களுக்கு இதனை இரவு நேரம் படுக்க போகும் முன் பயன்படுத்தவும்.
 வெள்ளரிக்காய் மிஸ்ட் பயன்பாட்டில் மேலும் சில குறிப்புக்கள்:

வெள்ளரிக்காய் மிஸ்ட் பயன்பாட்டில் மேலும் சில குறிப்புக்கள்:

 • இதனை ப்ரிட்ஜில் வைத்து அடுத்த சில நாட்கள் பயன்படுத்தலாம்.
 • பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கிவிட்டு பின்பு பயன்படுத்தவும்.
 • நறுமணத்திற்காக லாவெண்டர் எண்ணெய் அல்லது சந்தன எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
 • வெள்ளரிக்காயை வடிகட்டி சாறை மட்டும் இதற்கு பயன்படுத்தி, வடிகட்டிய விழுதை முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம்.
 • சென்சிடிவ் சருமமாக இருந்தால், எலுமிச்சையை பயன்படுத்த வேண்டாம்.
 • ரோஸ் வாட்டருக்கு பதில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு நீர் அல்லது தேங்காய் நீரை பயன்படுத்தலாம்.
 • சருமத்தை மேலும் மென்மையாக்க அடிக்கடி இறந்த செல்களை நீக்க வேண்டும்.
 • ஒரு நாளில் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.
 • இந்த மிஸ்டை சேமித்து வைக்க மெட்டல் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். இந்த உலோகம் , இதில் சேர்க்கப்படும் பொருட்களோடு வினை புரியலாம். ஆகையால் உயர் ரக பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தலாம் .
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY cucumber Spray to rejuvenate your skin

DIY cucumber Spray to rejuvenate your skin
Story first published: Monday, October 23, 2017, 19:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter