சருமம் சிவப்பாக மாறனுமா? வாரம் இருமுறை இந்த பொருளை யூஸ் பண்ணுங்க!!

By: AmbikaSaravanan
Subscribe to Boldsky

சரும பாதுகாப்பிற்கு தயிர் பயன்படுத்துவது பல காலங்களாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறை. எல்லா வித சரும பிரச்சனைகளுக்கும் தயிர் ஒரு சிறந்த தீர்வு. தயிரில் இருக்கும் வைட்டமின் சி, லாக்டிக் அமிலம், கால்சியம், போன்றவை சரும அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. பாரம்பரிய முறையில் சருமத்தை அழகாக்க தயிரை பயன்படுத்தலாம். நவீன கால அழகு பராமரிப்பு பொருட்களில் உள்ள கடினமான இரசாயனம் தயிரில் இல்லை. ஆகவே அழகு பராமரிப்பில் தயிரை துணிந்து பயன்படுத்தலாம்.

சருமத்தின் வகைக்கு ஏற்றது போல் தயிரை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். கீழே சில பேஸ் பேக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முயற்சித்து உங்கள் சரும பிரச்சனைகளை போக்கலாம்.

எந்தஒரு பேஸ் பேக் போடுவதாக இருந்தாலும், சருமத்தின் ஒரு பகுதியில் அதனை சோதித்து ஒவ்வாமை ஏதாவது ஏற்படுகிறதா என்பதை அறிந்து பிறகு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர் மற்றும் வெள்ளரிக்காய்:

தயிர் மற்றும் வெள்ளரிக்காய்:

1 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் விழுதை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். சோர்வாக காணப்படும் சருமத்திற்கு வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம்.

தயிர் மற்றும் தேன் :

தயிர் மற்றும் தேன் :

1 ஸ்பூன் தயிருடன் ½ ஸ்பூன் தேன் சேர்க்கவும். இரண்டையும் கலந்து உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் பருக்கள் உள்ள சருமம் சீராகும்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு :

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு :

1 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மை குறையும்.

தயிர் மற்றும் கடலை மாவு:

தயிர் மற்றும் கடலை மாவு:

1 ஸ்பூன் தயிருடன் ½ ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும். இதனை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து ஈர துணியால் முகத்தை துடைக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் முகத்தில் உள்ள கட்டிகள் மறையும்.

தயிர் மற்றும் கற்றாழை :

தயிர் மற்றும் கற்றாழை :

1 ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து சூடான நீரால் முகத்தை கழுவவும். வாரத்தில் 3-4 முறை இதனை பயன்படுத்தலாம்.

தயிர் மற்றும் ஆளி விதை :

தயிர் மற்றும் ஆளி விதை :

ஆளி விதைகளை நீரில் 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் அதனை எடுத்து நன்றாக அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்வதால் சரும நிறமிழப்பு தடுக்கப்படுகிறது.

தயிர் மற்றும் மஞ்சள் தூள் :

தயிர் மற்றும் மஞ்சள் தூள் :

1 ஸ்பூன் தயிருடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் சருமத்தில் உள்ள கருந்திட்டுகள் குறையும்.

தயிர் மற்றும் ஓட்ஸ் :

தயிர் மற்றும் ஓட்ஸ் :

1 ஸ்பூன் ஓட்ஸுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே காய விடவும். பின்பு மென்மையான க்ளென்சரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

தயிர் மற்றும் முட்டை :

தயிர் மற்றும் முட்டை :

முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் உங்கள் முகம் இளமையாக இருக்கும்.

தயிர் மற்றும் தேங்காய் பால் :

தயிர் மற்றும் தேங்காய் பால் :

1 ஸ்பூன் தயிருடன் , 1 ஸ்பூன் தேங்காய் பால் மற்றும் 1ஸ்பூன் யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் கருமை நிறம் உள்ள இடங்களில் தடவவும். 15 நிமிடங்கள் காய விடவும். பின்பு சூடான நீரால் கழுவவும். கருந்திட்டுகள் குறையும் வரை இதனை செய்து வரவும்.

எவ்வளவு எளிமையான வழிகள் ! இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் குறைகளை நிவர்த்தி செய்து களங்கமில்லாத முகத்தை பெறலாம். இன்றே தொடங்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different curd Face packs for Skin lightening

Different curd Face packs for Skin lightening
Story first published: Friday, October 27, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter