எண்ணெய் சருமத்தில் தோன்றும் வெண்புள்ளிகளை எப்படி மறைய வைக்கலாம்? உபயோகமான குறிப்புகள்!!

By: Arunkumar P.M
Subscribe to Boldsky

வெள்ளை புள்ளிகள் ஒரு முகப்பருவை போன்ற தோற்றம் கொண்டது. அவை மூக்கு மற்றும் தாடை பகுதிகளில் தென்படும். இந்த கட்டுரையில் வெள்ளை புள்ளிகளை போக்குவதற்கான சிறந்த வீட்டுமுறை தீர்வுகளை காணலாம்.

Best Tips & Home Remedies For Whiteheads

அழுக்கு, உயிரற்ற தோல் மற்றும் எண்ணெய் சுரப்பிகளால் அடைக்கப்பட்ட துளைகள் போல் வெள்ளை புள்ளிகள் காணப்படும். வெள்ளை புள்ளிகள் கரும்புள்ளிகளை விட மிகவும் கடுமையான தன்மையை கொண்டதாகும். கரும்புள்ளிகளை காற்றின் ஈரப்பதத்தால் கருப்பு நிறத்தை கொண்டு காணப்படும்.

வெள்ளை புள்ளிகள் தோலின் உட்புறத்தில் உருவாகிறது. எண்ணெய் தன்மை கொண்ட தோலினை கொண்டவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவை ஹார்மோன் மற்றும் மரபணு பிரச்சனைகளால் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வெள்ளை புள்ளிகளை எளிதாக விரட்டும் வீட்டுமுறை தீர்வுகளை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் பூச வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். முகத்தை கழுவிய பின் பருவை போக்கும் களிம்பை உபயோகிக்கலாம்.

ஆவி பிடித்தல்:

ஆவி பிடித்தல்:

முகத்தில் உள்ள அழுக்குகளை ஆவி பிடிப்பதன் மூலம் அகற்ற முடியும். தோலில் உள்ள உயிரற்ற செல்களை இதன் மூலம் போக்க முடியும். இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.

சர்க்கரை:

சர்க்கரை:

சர்க்கரை பொடி மற்றும் லெமன் சாறு கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூச வேண்டும். உயிரற்ற செல்களை போக்கி வெள்ளை புள்ளிகள் அற்ற சருமத்தை அது கொடுக்கும்.

ஓட்ஸ்:

ஓட்ஸ்:

ஓட்ஸில் உள்ள சிராய்ப்பு தன்மை தோலில் உள்ள உயிரற்ற செல்களை போக்கிவிடும். பொடி செய்யப்பட்ட ஓட்ஸ் மற்றும் தயிர் கலந்து மூக்கு மற்றும் தாடையில் பூச வேண்டும். தோல் மிருதுவாக இருக்க இது உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்:

ஆப்பிள் சைடர் வினிகர்:

ஆப்பிள் சைடர் வினிகர் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அந்த வினிகரை நீரில் கொதிக்க வைத்து, மூக்கு பகுதியில் பூச வேண்டும். பத்து நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதன் மூலம் வெள்ளை புள்ளிகளை தவிர்க்கலாம்.

லவங்கப்பட்டை:

லவங்கப்பட்டை:

லவங்கப்பட்டை பொடி மற்றும் சிறிதளவு தேன் கலந்த களிம்பை பாதிக்கப்பட்ட பகுதியில் பூச வேண்டும். முகப்பரு உள்ளவர்கள் இதனை அதிகமாக பயன்படுத்தலாம். இந்த களிம்பில் தோல் மிருதுவாக இருப்பதற்கான பதம் உள்ளதால், அது சிறப்பாக பயன்படுகிறது.

கடலை மாவு:

கடலை மாவு:

கடவை மாவு வெள்ளை புள்ளிகளை எளிதாக போக்கும். கடலை மாவு, பட்டாணி மாவு மற்றும் சிறிதளவு பால் கலந்து அதனை முகத்தில் பூச வேண்டும். முகத்துளைகளை போக்கி, தோலின் உயிரற்ற செல்களை விரட்ட இது உதவும். இதன் மூலம் வெள்ளை புள்ளிகள் எளிதாக வெளியேற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Tips & Home Remedies For Whiteheads

Best Tips & Home Remedies For Whiteheads
Story first published: Tuesday, May 2, 2017, 10:50 [IST]
Subscribe Newsletter