Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
குண்டு கன்னங்கள் உங்களை பருமனா காண்பிக்குதா? உங்களுக்கு சில டிப்ஸ்!!
கன்னங்கள் அழகாய் உப்பலாய் இருந்தால் அழகாய் இருக்கும். ஆனால் அதே மிகவும் உப்பி இருந்தால் நன்றாக இருக்காது. எப்படி உப்பிய கன்னங்கள் குறைக்கலாம் என்று குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன
பூசிய கன்னங்கள் அழகுதான். அதே சமயம் மிக குண்டாக இருக்கும் கன்னங்களால பல மைனஸ் இருக்கின்றன. எளிதில் தொய்வடையும். உடல் எடை குறைக்கும்போது முகச் சதை தொங்கி வயதான தோற்றம் தரும். உடல் குண்டாகவும் காண்பிக்கும்.
உங்கள் கன்னம் குறையவும் அதே சம்யம் பொலிவு குறையாமல் இருக்கவும் இங்குள்ள குறிப்புகளை பயனப்டுத்திப் பாருங்கள்

பார்லி மற்றும் கேரட் சாறு :
தேவையானவை :
பார்லி பவுடர்- 1 ஸ்பூன்
கேரட் சாறு - தேவையான அளவு
முல்தானி மட்டி - அரை ஸ்பூன்.

பார்லி மற்றும் கேரட் சாறு :
பார்லி பவுடருடன் முல்தானி மட்டி கலந்து பேஸ்ட் போலச் செய்யும் அளவிற்கு கேரட் சாறு கலந்து முகத்தில் பேக் போடவும். காய்ந்து இறுகும்போது கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கன்னத்தில் அளவு குறையும். தேவையில்லாத சதை குறைந்து அழகாய் காண்பிக்கும்.

வெள்ளரி விதை :
வெள்ளரி விதையை பொடி செய்து அதனுடன் சர்க்கரை மற்றும் மஞ்சள் கலந்து இவற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கன்னச் சதை குறையும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வெட்டிவேர்:
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் சிறு துண்டுகளாக வெட்டிய 10 வெட்டி வேர் போட்டு மூடி வைத்திடுங்கள். இந்த எண்ணெயை தினமும் கன்னத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்தால் நல்ல பலன் தரும்.

முள்ளங்கி:
சிலருக்கு தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் முகம் பெரிதாக காண்பிக்கும். இதனால் வாழைத்தண்டு, முள்ளங்கி மற்றும் கருவேப்பிலை ஜூஸ் குடித்தால் நீர் குறையும்.



Click it and Unblock the Notifications
