கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

Written By:
Subscribe to Boldsky

கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது.

ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி முகத்தை பாழ்படுத்தும். உடனடியாக அவற்றை மறையச் செய்ய வேண்டுமா? தேயிலை மர எண்ணெயை கொண்டு எவ்வாறு 4 வழிகளில் கரும்புள்ளியை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேயிலை மர எண்ணெய் மாஸ்க்

தேயிலை மர எண்ணெய் மாஸ்க்

தேயிலை மர எண்ணெய் - சில துளி

முல்தானி மட்டி - கால் ஸ்பூன்

நீர் - தேவையன அளவு

முல்தானி மட்டி அல்லது வேறு ஏதாவது க்ளே பவுடரில் 3 துளி தேயிலை மர எண்ணெய் மற்றும் கலக்க தேவையான நீர் சேர்த்து பேஸ்ட் போல்ச் செய்து அதனை முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இரண்டாவது முறையிலேயே மாற்றம் தெரியும்.

ப்ளீச்சிங் :

ப்ளீச்சிங் :

ஜுஜுபா எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

தக்காளி விழுது

ஜுஜுபா எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் இர்ண்டையும் சில துளிகல் எடுத்து அவற்றுடன் தக்காளியின் சதைப்பகுதியை பசித்து முகத்தில் குறிப்பாக கரும்புள்ளி இருக்குமிடத்தில் தேய்த்து சில நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். விரைவில் பலன் தெரியும்.

ஃபேஸ் வாஷ் :

ஃபேஸ் வாஷ் :

நீருடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து முகத்தில் கழுவு வந்தால் விரைவில் கரும்புள்ளி மறைந்து சருமம் சுத்தமாகும்.

ஃபேஸியல் ஸ்க்ரப் :

ஃபேஸியல் ஸ்க்ரப் :

சர்க்கரை

ஆலிவ் எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

சர்க்கரை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து அவற்றில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து முகத்தில் தேய்த்து கழுவுங்கள். இவை சரும சுருக்கங்களை , கரும்புள்ளியை போக்கி, மிருதுவாக்கும்.

குளியல் :

குளியல் :

குளிக்கும்போது ஒரு டப் நீரில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து அந்த நீரில் குளித்தால் சரும பிரச்சனைகள் மறைந்து சருமம் புத்துயிர் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Simple ways to use Tea tree oil for your black heads

5 Simple ways to use Tea tree oil for your black heads
Story first published: Wednesday, February 15, 2017, 8:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter